பள்ளிக் கூடத்தில் தமிழாசிரியர் "தலைவர்கள் -அன்றும் இன்றும் " என்ற
தலைப்பில் ஓரிரு வார்த்தைகளில் கருத்து கூறுமாறு மாணவர்களை
கேட்டுக்கொண்டார்.
துப்புரவுப் பணியாளரின் மகன்
அன்றையத் தலைவர்கள் சந்தனம் ,இன்றையத் தலைவர்கள் சாக்கடை
வானிலை மைய அதிகாரியின் மகள்
அவர்கள் தென்றல் இவர்கள் பூகம்பத்தோடு வரும் புயல்
பத்திரப் பதிவு எழுத்தரின் மகன்
அவர்கள் இந்தியாவின் சொத்து ,இவர்களுக்கு இந்தியாவே சொத்து
பூக்கடைக்காரரின் மகள்
அவர்கள் பூமாலை இவர்கள் வெறும் நார்
காவல்காரரின் மகள்
அவர்கள் நிஜம் இவர்கள் நிழல்
தொழிலாளியின் மகன்
அவர்கள் உழைக்க வந்தவர்கள் இவர்கள் பிழைக்க வந்தவர்கள்
வேதியியல் பேராசிரியரின் மகன்
அவர்கள் ஓசோன் படலம் இவர்கள் புளுரோ கார்பன்
ஏலக்காய் வியாபாரியின் மகள்
அவர்கள் ஏலக்காய் இவர்கள் எட்டிக்காய்
குறும்படத் தயாரிப்பாளரின் மகன்
அவர்கள் சபையில் மக்களுக்காக குரல் எழுப்புவார்கள் ,இவர்கள் மறைவாக செல்போனில்
படம் பார்ப்பார்கள்
சொல்லும் விதம் வேறுவேறாக இருந்தாலும் சொல்ல வரும் கருத்து ஒன்றுதான்
No comments:
Post a Comment