cartoon
அமைச்சர்: அரசே, நாட்டில் விலைவாசி உயர்ந்து வருவது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக நேற்று கூறியதைக் கேட்டு மக்கள் கொதித்துப் போயிருகின்றார்கள் .
அரசன் : விவசாயிகளுக்கு க் கூடுதல் இலாபம் கிடைக்கும் என்பதற்காக அப்படிச் சொன்னேன் .
நம் நாட்டில் அரசியல் தலைவர்கள் இப்படியும் சொல்லலாம்
முன்னர் :பால் விலை யை உயர்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது.
பின்னர் : பசு மாடுகளுக்கு கூடுதல் தீவனம் வாங்கிக் கொடுக்கலாமே என்பதற்காகச் சொன்னேன் .
முன்னர்: பெட்ரோல் விலை அதிகரித்தது மன மகிழ்ச்சி யளிக்கிறது
பின்னர்: அதனால் கார் வாங்குவோர் குறைய சாலை விபத்துக்களும் குறையும் என்பதற்காகச் சொன்னேன்.
முன்னர்: ரயில் கட்டணம் உயர்த்தியது நல்லதற்கே
பின்னர்: ரயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சி மூட்டைப் பூச்சி இல்லாமல் சுத்தப்படுத்த பயன்படும் என்பதற்காகச் சொன்னேன்.
முன்னர்: மின்சாரக் கட்டணத்தை க் கூட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.
பின்னர்: மின்சாரத்தைக் குறைவாகப் பயன் படுத்துவதால் இனி மின் கசிவால் தீ விபத்துகள் இல்லாதிருக்கும் என்பதற்காகச் சொன்னேன்.
No comments:
Post a Comment