எழுதாத கடிதம்
நல்லது விளைந்திருப்பதாகக் கூறும் போது அதை விட அதிக அளவில் தீமைகளும் விளைந்திருக்கின்றன என்பது பலர் அறிந்தும் அறியாத உண்மையாகும் .நல்லவை பெரும்பாலும் விளம்பரப்படுத்தப் படுகின்றன வெறும் விளம்பரத்திற்காகவே நல்லவை செய்யப்படாமலேயே சொல்லப்படுகின்றன. ஆனால் தீமைகள் அப்படியில்லை,சொல்லப்படாமலேயே செய்யப்படுகின்றன நல்லனவற்றை விட அல்லவை அதிகம் விளையவும் அப்படி விளைய விளைய அப் போக்கு நிலைப்பட்டுப்போவதுடன் அது பின்னொரு காலத்தில் திருத்தவே முடியாத ஒரு அபாயமான சூழ் நிலை உருவாகும். அதுவே நம் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக அமையும். நீ வாழ்வதற்கு உன்னை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய உதவிகளைச் செய்வது நல்லது. அதற்குத் தேவையானவற்றை எல்லாம் தருவது அல்லது. காட்டில் ஒவ்வொரு மிருகமும் தனக்குத் தேவையான உணவைத் தன்னே தேடிக்கொள்ள வேண்டும் என்பது இயற்கையின் விதி. இந்த விதிகளுக்கு புறம்பாக நடப்பது மனிதர்கள் மட்டுமே. எவனொருவன் தனக்குத் தேவையானவற்றை குறுக்கீடின்றித் தானே தேடிக்கொள்ளும் பண்புள்ளவனாக இருக்கின்றானோ அவனே வாழத் தகுதியுள்ளவனாக இருக்கின்றான். வாழ்க்கையின் இலக்கணம் மாறிச் செல்வதை ஏன் இன்னும் அனுமதிக்கின்றோம்? இது அறியாமையின் ஒரு செயலா இல்லை வாக்கைப் போராட்டத்தின் ஒரு பரிணாம வளர்ச்சியா?
No comments:
Post a Comment