ஆணென்ன பெண்ணென்ன
இயங்கிக் கொண்டே செல்கிறது உலகம்
யுகம் யுகமாய்
இரவு பகலென
என்ன நிகழ்ந்தாலென்ன
அதிலொரு மாற்றமுமில்லை
வெறும் இரவே தொடர்வதில்லை
வெறும் பகலும் தொடர்வதில்லை
உழைப்புக்குப் பகலும்
ஓய்வுக்கு இரவும் இல்லாவுலகில்
உயிருக்கு உடலில்லை
நினைத்துக் கொண்டே வாழ்கிறது உள்ளம்
காலம் காலமாய்
ஆண் பெண்ணென
யார் பிறந்தாலென்ன
அதிலொரு வேற்றுமையில்லை
அதிலொரு வேற்றுமையில்லை
வெறும் பெண்ணினமே உலகமில்லை
வெறும் ஆணினமே உயர்வுமில்லை
ஆணுக்குப் பெண்னும்
பெண்ணுக்கு ஆணும் இல்லாவுலகில்
உடலுக்கு உயிரில்லை
இரவும் பகலும் இரண்டும் வேண்டும்
என்பது போல
ஒருவருக்கு ஒருவர் வேண்டும்
ஒருவருக்கு ஒருவர் வேண்டும்
ஓயா உறவுக்கு
உறவில்லா உலகில் வரவேது
ஆணும் பெண்ணும் இரண்டும் வேண்டும்
சாகாத சமுதாயத்திற்கு
அங்கே எது பிறந்தாலும்
சமுதாயத்திற்கு உரம்தான்
எல்லாம் இறைவன் தந்த கொடைதான்