பொதுவிடத்தில் ஒருவரையொருவர் சண்டைபோட்டுக்கொண்டார்கள் .அப்போது ஒருவர் மற்றவரை ஓர் அறை அறைந்துவிட்டார். அப்போது அங்குவந்த காவலர் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கேவலமாகப் பேசி அடித்துத் துன்புறுத்தி , நான்கு சுவர்களுக்குள் ஆயிரம் அடிகள் அடித்து அவனை முடமாக்கிய அந்தக் காவலர்தான் சமுதாயத்தின் சட்டப்பூர்வமான காவலர்.மிகவும் வேடிக்கையான மோசமான நாகரிக வளர்ச்சி .காவலர்கள் இருந்தும் குற்றங்கள் எங்கும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. .ஓவ்வொருநாளும் புதுப்புது விதமாய் , கூட்டணியாய், விஞ்ஞானப் பூர்வமாய் . ஆதாரங்களை அழித்துவிடுகின்றார்கள் முடியாவிட்டால் ஆதாரங்களை விலைக்கு வாங்கிவிடுகின்றார்கள் அதுவும் முடியாவிட்டால் ஆதாரமாய் இருப்பவர்களையே அழித்துவிடுகின்றார்கள்.,தெரியவரும் குற்றங்களின் எண்ணிக்கையே அச்சமூட்டுகின்றது . தெரியாமல் மறைமுகமாய் நடந்தேறும் குற்றங்களும் தெரியவந்தால் நாம் ஒவ்வொருவரும் தூக்குப்போட்டுக்கொண்டு உயிரை மாய்த்துவிட்டு நேரிடும்
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Wednesday, November 25, 2026
Tuesday, November 24, 2026
நாட்டின் முன்னேற்றத்திற்கு விவசாய உற்பத்தி , பயன்தரு பொருட்கள் உற்பத்தி , இயற்க்கை வளத்தை மேம்படுத்துதல் போன்றவை மட்டுமே முதன்மையானது . விவசாய உற்பத்தியில் ஈடுபடுவோர் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றார்கள் . அவர்களுக்கு அவர்கள் குடும்பத்திற்கு வேண்டிய உணவுப்பொருள் கிடைக்கின்றது என்றாலும் தொடர்ந்து ஈடுபடுவதற்கு நம்பிக்கையும் தைரியமும் தரக்கூடிய கணிசமான லாபம் இல்லாததாலும், நவீன தொழிநுட்ப அணுகுமுறைகளில் அனுபவம் இல்லாததாலும் , செலவு மிக்கதாக இருப்பதாலும், போதிய நீர் ஆதாரம் கிடைக்காததாலும் , உழவுத் தொழில் நலிவடைந்து வருகின்றது . உணவுப் பொருள் உற்பத்திக் குறைவு , மக்கள் தொகைப்பெருக்கம் , போன்றவை இதை மேலும் சிக்கலாக்கி வருகின்றது . ஆயிரங் கோடி கணக்கில் செலவு செய்து செவ்வாய் கோளுக்கு செயற்கைக் கோள்அனுப்ப த் திட்டங்கள் தீட்டும் அரசு இதற்காக நாட்டின் தடையில்லாத உறுதியான முன்னேற்றத்திற்க்காக ஒரு திட்டமும் செயல்படுத்த முன்வரவில்லை உழைப்பவர்கள் , உண்மை யாகச் சேவை செய்பவர்கள் , போலியாகச் சேவை செய்பவர்கள், ஒன்றும் செய்யாமல் வாழ நினைப்பவர்கள் என மக்கள் நான்கு வகைப்படுவார்கள் . உழைப்பவர்களும் உண்மையாகச் சேவை செய்பவர்களும் குறைந்து வருவதாலும் , போலியாகச் சேவை செய்பவர்களும் ,ஒன்றும் செய்யாமல் வாழ நினைப்பவர்களும் அதிகரித்து வருவதாலும் இந்தியாவின் முன்னேற்றம் என்றைக்கும் திண்ணைப் பேச்சுதான் . உழைப்பவர்களைஆதரிக்காமல் , ஊக்குவிக்காமல் , வாய்ப்பளிக்காமல் முன்னேற்றத்தை எட்டவேமுடியாது . இந்த உண்மை ஏன் நம் அரசாங்கத்திற்கு புரியவே மாட்டேங்கிது
Sunday, November 22, 2026
இன்றைக்கு நாட்டின் எல்லா மாநிலங்களிலும் சாலைவிபத்து அதிகரித்து வருகின்றது .இதற்குச் சாலையின் தரக்குறைவு , ஓட்டுபவர்களின் கவனக் குறைவு , அவசரம் , சாலைவிதிகளை ப்பின்பற்றாமை மட்டும் காரணமில்லை. போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களின் நிர்வாகக் குறைபாடும் அலட்சிய ப்போக்கும் காரணமாகின்றது .எங்கும் போக்குவரத்து அதிகாரிகள் ,கண்காணிக்கும் காமிராக்கள் இருந்தும் சாலைவிபத்துக்கள் தினமும் எங்காவது சிலவிடங்களின் நடந்துவிடுகின்றன .போக்குவரத்து வாகனங்களின் அதிகரிப்பு , அதற்கு ஏற்ப சாலைகளை மேம்படுத்தாமை காரணம் என்று தப்பித்துக் கொண்டாலும் உண்மையில் இது அதை க்கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட அமைப்பின் கடமையாற்றாமையே .
அரசும்
அமைச்சும் இருந்தும் ஊழல் குற்றங்கள் மிகவும் மலிந்து வருகின்றன அரசு மக்களையும் மக்கள் அரசையும் ஒருவரையொருவர் மாறிமாறி குறைசொல்லிக்கொண்டிருக்கின்றார்களே
ஒழிய ஊழலை ஒழிக்க உருப்படியான நடவடிக்கையோ யோசனையோ யாரும் முன்மொழியவில்லை .ஊழல் ஒழிப்பு த் துறை இருந்தும்
எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க அது எப்படி மேலும் மேலும் அதிகரிக்கின்றது என்பதே புரியவில்லை . திருடர்களைத் திருடாதே
என்ற அறிவுரையை ஏற்றுக்கொண்ட காலம் மாறிவிட்டது . திருட்டை ஒழிக்க ,ஊழலை ஒழிக்க அதைச் செய்தால் நிச்சியம் தண்டிக்கப்படுவோம் என்ற
உள்ளார்ந்த அச்சம் அரசியல்
தலைவர்கள் , நீதிபதிகள் , காவலர்கள் , அரசியல்வாதிகள் , அதிகாரம் மிக்கவர்கள் மற்றும்
மக்கள் எல்லோரிடமும் சமமாக இருக்கவேண்டும் .
ஆசிரியர்கள்
,கல்வியாளர்கள் இருந்தும் உலகத் தரத்தில் இந்தியாவின் வளர்ச்சி , பொருளாதாரம் பின்தங்கியே இருக்கின்றது .கல்வி சரியானதாக இந்தியாவிற்கு ஏற்றதாக இல்லையா ,இல்லை கல்வி உரிமையுள்ளதாக இல்லையா ?
Thursday, November 19, 2026
குழந்தைகளையும் ,மாணவர்களையும் ,சுயமாகச் சிந்திக்கத் தூண்டுவதே கல்வியின் முதன்மையான குறிக்கோள் . இன்றைக்கு மக்களில் பெரும்பாலானோர் சுயமாகச் சிந்திக்கும் திறன் அற்றவர்களாக இருக்கின்றார்கள் . வளரும் சமுதாயத்தின் போக்கையும் நிலையையும் உற்றுக் கவனிக்கும் போது நாம் இதைச் சரியாகச் செய்யவில்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது .
மூளையில் தேவையில்லாத விஷயங்களை ச் பதிவு செய்து சேமித்து வைத்திருந்தால் . உரிமையுள்ள கல்வியை கல்வி தேடல் மூலம் பெறாதிருந்தால் ,கல்வியை கல்விக்காக கற்காதிருந்தால் ,கற்றதை இயற்கையோடு பொருத்தி மெய்ப்பொருளை புரிந்துகொள்ளாதிருந்தால் ,பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால் சிந்திக்கும் திறனை இழக்க வேண்டியிருக்கும் .
Wednesday, November 18, 2026
தேசிய நூலக வார விழா என்பது அறிவுத் திருவிழா.இது ஓராண்டில் ஒரு வாரம் மட்டும்
நடக்கும் ஒரு விழாவாக இருக்கக்கூடாது. ஒவ்வொருநாளும் நடக்கும் விழாவாக இருக்கவேண்டும்.
ஏனெனில் கல்வி தேடல் என்பது வாழ்க்கையின் ஒரு முதன்மையான முக்கியமான செயலாக இருக்கின்றது
I often come to public library since my boyhood. I read books of my interest
and stored useful information. It helped me during my profession to write
articles to teach subjects with more subject related information and write
research papers and after retirement to write popular science books. I get self
confidence without any external source , self encouragement without any external force, because of this
storage.
Saturday, November 14, 2026
சமுதாய முன்னேற்றத்தில் அக்கறைகொண்டவர்கள் சமுதாய மாற்றங்களை ப்பற்றி அதிகம் சிந்திப்பார்கள் அடிக்கடி பேசுவார்கள் ஆனால் அதைச் செயல்படுத்த வழியின்றித் தடுமாறுவார்கள் .அதற்குக் காரணம் சமுதாய மாற்றத்தை மற்றவர்களுக்காக மட்டுமே விரும்புவார்கள் அதிகம் இருக்கின்றார்கள். நீண்ட காலம் துன்பப் பட்டவர்கள் அதிலிருந்து விடுதலை கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் அந்த மாற்றத்தை பெரும்பாலான மக்கள் ஆதரிப்பார்கள் . நீண்டகாலம் அனுபவித்துக்கொண்டிருக்கும் பயன் பாதிக்கப்படலாம் என்பதால் சிலர் அதை எதிர்ப்பார்கள் . எதிர்ப்பவர்கள் எல்லோரும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் ஒரு சிலருடைய முடிவே முடிவாகிறது
I
am pleased to announce the publication of my latest research-oriented book, Optimization
of Bohr's Theory of Hydrogen Atom, published today by Blue Duck
Publishers, Srinagar.
About
the Book:
Building upon foundational atomic physics, this work re-examines Niels Bohr’s
classic model of the hydrogen atom by accounting for the relativistic variation
of the orbital electron's mass. Because orbital electrons move at speeds
comparable to the velocity of electromagnetic waves, incorporating relativistic
mass effects reveals how potential energy loss converts into both orbital
kinetic energy and atomic binding energy—offering deeper analytical clarity
into electronic transitions and electromagnetic radiation.
Who
It Is For:
Designed for physics educators, researchers, and postgraduate students, this
book bridges classical semi-empirical models and relativistic atomic mechanics,
serving as a foundation for extending Bohr’s framework to multi-electron
systems.
Thank
you to my colleagues, students, and readers for your continued encouragement in
advancing scientific literature.
📖
Available via: Blue Duck Publishers,Srinagar,J & K ISBN:978-93-6418-067-2
Link:www.blueduckpublications.in
Today the book written by me on the topic ‘Optimization
of Bohr’s Theory of Hydrogen atom’ is released. It extends Bohr’s
Semi-Classical Theory of Hydrogen atom to Multi-Electron Systems via Relativistic
Correction and Orbit Coupling.
The
key novel concepts introduced are
1.
Mass-Energy
Redistribution:
Mapping how potential energy transitions into a localized relativistic mass
increase during atomic binding.
2.
Hyper-Excitation
& Hyper-De-Excitation: Proposing simultaneous two-electron state
transitions to account for electron-electron interactions without relying on
complex multi-dimensional calculus.
3.
Half-Half
Mixing of States: A
geometric framework utilized to accurately predict the observed spectral line
transitions of Helium.
This
optimized approach bridges the pedagogical gap between classical Newtonian
mechanics and advanced quantum wave equations, maintaining an intuitive
physical model of the bound system. I welcome feedback and discussions from
fellow physicists, researchers, and students in quantum mechanics and chemical
physics.
Copy
of the book can be had from Dr.M.Meyyappan, author of the book with a discount
of 10 %.
Saturday, November 7, 2026
அரசியலில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும் பொதுவாக மக்கள் எல்லோருடைய எண்ணமாக இருக்கின்றது.ஆனால் அது மக்களின் கைகளில் இல்லை. அரசியல்வாதியை ,ஆட்சியாளர்களை மாற்றிவிட்டால் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்ற அவர்களுடைய நம்பிக்கை ஏமாற்றமே தருகின்றது. அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் நேர்மையாக முயன்றால் மட்டுமே முடியும்.. நீண்ட காலம் அரசியலில் எதிர்பார்க்கப்படுகின்ற மாற்றம் ஏற்படாமல் போகின்றது என்றால் அது மக்களின் தவறு இல்லை. அரசியல் வாதிகள் செய்யும் குற்றம். குறுகிய காலத்தில் , கூடுதல் உழைப்பு ஏதுமின்றி பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற அவ்வப்போது நடக்கும் போராடாமே இந்திய அரசியல். எல்லோரிடமும் ஒரே நோக்கமிருப்பதால் ஆட்சியாளர்களை மாற்றினாலும் மாற்றம் ஏற்படாமல் போகின்றது. இதைச் சரிசெய்வதற்கு என்னிடம் ஒரு யோசனை இருக்கின்றது . பஞ்சாயத்து , பேரூராட்சி , நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்களை அந்தந்த பகுதி மக்கள் தேர்வுசெய்வார்கள் . இப்பவும் அப்படித்தான் நடக்கின்றது . பஞ்சாயத்தில் தலைவர் , பேரூராட்சியில் தலைவர் ,துணைத்தலைவர் என்று இருவர் , நகராட்சியில் தலைவர் , துணைத்தலைவர் இருவர் என மூவர் , மாநகராட்சியில் தலைவர், துணைத்தலைவர்கள் மூவர் என நால்வர் இவர்களுடன் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் , கல்லூரி முதல்வர்கள் , பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் , நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் , பத்ம விருது பெற்றவர்கள் ,போன்றவர்களுக்கு ஓட்டுரிமை அளித்து அந்ததந்த ப் பகுதிக்குரிய MLA , மற்றும் MP க்களை தேர்வு செய்யலாம் . பகுத்தறி வின்றி வெறும் உணர்வின் அடிப்படையில் ஓட்டுப்போட்டு அமையும் அரசாங்கம் ஓவ்வொரு முறையும் ஏமாற்றம் தருகின்றது . மாற்றம் வேண்டும் என்று மட்டும் சொல்லாதீர்கள் . அந்த மாற்றம் எப்படி இருக்கவேண்டும் என்று கூறுங்கள் . அது ஒன்றே மாற்றத்தை இப்பொழுது இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் கொண்டுவந்து தரும் . உணர்வுப்பூர்வமான மாற்றத்தை விட அறிவுப்பூர்வமான மாற்றம் எல்லோருக்கும் நற்பயனளிக்கும்.
Thursday, November 5, 2026
kavithai-3
குறிக்கோளின்றி பிரபஞ்ச வெளியில்
சுற்றித்
திரிந்த கரும் பொருளொன்று
உலகிலோர்
உயிரினமாய் பிறக்கவேண்டுமென்று
ஒருநாள்
இறைவனிடம் கெஞ்சிக் கேட்டது
ஓரறிவு ,
ஈரறிவு ,மூவறிவு
போதுமா ,
நாலறிவு,ஐந்தறிவு,ஆறறிவு வேண்டுமா?
.
அறிவிற்கும்
பிறப்பிற்கும் என்ன தொடர்பு
அடியேனுக்கு
விளக்கம் வேண்டுமே
மெய்யுணர்வு
மட்டும் என்றால் ஓரறிவு
புல்லாய்
பிறந்து உணவாய் மடிவாய்
உலகைச் சுற்றிப்பார்க்க
உனக்கு வழியில்லை
பிறப்புமுதல்
இறப்புவரை ஒரே இடம்
மெய்யுணர்வோடு
சுவையும் சேர்ந்தால் ஈறறிவு
சிப்பியாகப்
பிறந்து முத்தாய் இறப்பாய்
ஊர்ந்து
ஊர்ந்து உலகைச் சுற்றிவர
ஒருவர்க்கு
ஒரு பிறப்பு போதாது
இவற்றோடு
மோப்பமும் இணைந்தால் மூவறிவு
எறும்பாய்
பிறந்து கூட்டமாய் அழிவாய்
உயிர்
உடலைவிட்டுப் பிரியும் வரை
உழைப்பதைத்
தவிர சுகமொன்றும் இல்லை
காணும்
திறனும் கூடினால் நாலறிவு
நண்டாய்ப்
பிறந்து நாரைக்கு உணவாவாய்
தேனீயாய்ப்
பிறந்து சுறுசுறுப்பாய்ச் சுற்றினாலும்
தேடித் சேர்த்த
தேனுக்குச் சொந்தமில்லை
செவியுணர்வும்
சேர்ந்துக்கொண்டால் ஐயறிவு
விலங்காய்ப்
பிறந்து விரும்பிய இடம் போகலாம்
விரைந்து
பறக்க பறவையாய்ப் பிறக்கலாம் .
இனப்பெருக்கம்
மட்டுமே
இல்வாழ்க்கை
பகுத்தறிவும்
பங்குகொண்டால் ஆறறிவு
மனிதனாய்ப்
பிறந்து மனம்போல வாழலாம்
குறையறிவு
கொண்டோரை அடக்கி ஆளாமல்
நிறையறிவால்
பகுத்து வாழ்வதே சிறப்பு
Tuesday, November 3, 2026
ஆணும் பெண்ணும் சமம் ஒருவர்க்கொருவர் தாழ்ந்தவரில்லை . சட்டத்திற்கும் எல்லோரும் சமம் . ஏழைகளுக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்றில்லை. மக்களுக்கு ஒரு சட்டம் ,மக்களவை உறுப்பினருக்கு ஒரு சட்டம் என்றில்லை .சட்டம் சரியாக இருந்தாலும் அதை நிர்வகிப்போர் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள். மக்களிடம் தவறு செய்யும் நபர்களை யாராக இருந்தாலும் தண்டிக்கும் சட்ட ரீதியிலான அதிகாரம் அல்லது கூட்டணி வலிமை இல்லை.
Saturday, October 31, 2026
ஆதாரமே இல்லாமல் ஊழல் புரியும் நுட்பத்தில் கைதேர்ந்தவர்களாக இன்றைய அரசியல்வாதிகள் மாறிவருகின்றார்கள். இதற்கு ஓட்டுப் போட்ட மக்கள் மட்டுமே காரணம் என்று கூறிவிடமுடியாது. ஜனநாயக ஆட்சி முறையில் அளவில்லா அதிகாரம் ஒருவரிடம் மட்டுமே இருக்கக்கூடாது. கட்சிக்கும் ஆட்சிக்கும் சுய விளம்பரம் இருக்கக்கூடாது .அல்லது அவை ஒரு வரம்பிற்கு உட்பட்டிருக்கவேண்டும் . நீதித்துறையை யும் காவல் துறையையும் தூய்மைப்படுத்தவேண்டும் .இலவசங்களால் நாட்டில் உற்பத்தி யைப் பெருக்கவேமுடியாது. .மக்கள் உழைப்பும் இல்லாமற் போகும் . மேலும் மேலும் அரசின் இலவசத்தை நம்பியே வாழும் சூழல் ஏற்படும். அதுமட்டுமல்ல பிற்காலத்தில் இலவச த்தை நிறுத்தவே முடியாது . அரசியல் ஞானிகளே மக்களுக்கான அரசியல் சட்டங்களை த் திருத்தி அமையுங்கள் . ஆட்சியாளர்களின் உல்லாச வாழ்க்கையை மட்டுப்படுத்துங்கள் .
Friday, October 30, 2026
kavithai-2
இருள் சூழ்ந்திருந்தால் கண்களுக்கு வேலையில்லை
ஒளியே கண்களுக்கு மொழி
மௌனமே மொழியானால் காதுகளுக்கு வேலையில்லை
ஒலியே காதுகளுக்கு மொழி
நீரே உணவானால் நாக்கிற்கு வேலையில்லை
சுவையே நாக்கிற்கு மொழி
ஓய்வே வாழ்க்கையானால் கைகளுக்கு வேலையில்லை
உழைப்பே கைகளுக்கு மொழி
kavithai
ஒவ்வொருநாளும் விடியும் காலைப்பொழுது
அன்று ஏனோ விடியவே விடியவில்லை
இறைவன் தூங்கிவிட்டானா இல்லை
இயற்கையின் புதிய விளையாட்டா .
தம்பி நீ விழித்துவிட்டாய் ஆனால்
உன்மனம் இன்னும் விழிக்கவேயில்லை
உலகிற்கு ஒளி ஊட்டும் சூரியனை
ஒரு சின்ன வடிவமே மறைத்துவிடும்
உன் மனம் அதுபோல உறங்கிவிட்டால்
உணர்வுகளும் புதிர் காட்டும்
Thursday, October 29, 2026
போலித்தனமான வாக்குறுதிகளால் மக்களை நம்பவைத்து அப்புறம் ஏமாற்றுகிறார்கள் . நடித்து மக்களை முட்டாளாக்குகின்றார்கள் .ஆதரவு இருப்பதாகக் காட்டிக்கொள்ள த் தொண்டனாக்கி மக்களை அடிமையாக்குகின்றார்கள் .வரியை உயர்த்தி ,விலைவாசியை உயர்த்தி மக்களை ஏழையாக்குகின்றார்கள் . இலவசங்களுக்காக அலையும் பிச்சையாக்குகின்றார்கள் . இருட்டுக் குகையில் விடியலைத் தேடி அடைப்பட்டிருக்கின்றோம்.
Wednesday, October 28, 2026
அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு ச் சேவை செய்வதாகக் கூறிக்கொண்டு அரசின் நிதியை கொஞ்சம் கொஞ்சமாக த் தனதாக்கிக்கொண்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் .இது மக்களுக்கு அவர்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகம் .குற்றச் செயல்களை மறைவொழுக்கமாகச் செய்கின்றார்கள் . தவறான வழிகளில் ஈட்டும் பணத்தில் கொஞ்சம் அரசு அதிகாரிகளுக்கும் கொடுத்து கூட்டணி யை ஏற்படுத்திக்கொண்டு குற்றச் செயல்கள் வெளியே தெரியாமல் புதைத்து விடுகின்றார்கள் . ஊழலில் லஞ்சம் வாங்கி அவர்களுக்கு இவர்கள் அடிமைகளாக வாழ்கின்றார்கள் .
பாவப்பட்ட பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்காக இவர்கள் வேலை செய்தால் அந்தப் பாவம் காலங் கடந்து இவர்களையும் பாதிக்கும் . இவர்களுடைய பிள்ளைகள் ஒழுக்கமின்றி வளர்வார்கள் . வருங்காலத்தில் இளைய தலைமுறையினர் எல்லோரும் ஒழுக்கமின்றி , ஒரு திறமையுமின்றி ஒருவருக்கொருவர் குறையை மட்டுமே கூறிக்கொண்டு வாழும் போக்கைத்தான் பெறுவார்கள்
Tuesday, October 27, 2026
தம்பி , நாவற்பழம் கொஞ்சம் பறித்துப்போடுப்பா , என்று கேட்ட ஒவ்வைப் பிராட்டியாருக்கு , சுட்டப்பழம் வேண்டுமா ,சுடாத பழம்வேண்டுமா என்று கேட்டத்தைப்போல ஒரு நகைச்சுவை
தம்பி உன் திருமண ம் தொட்டுக் கல்யாணமா ,தொடாக் கல்யாணமா? அது என்ன தொட்டுக் கல்யாணம் ,தொடாக் கல்யாணம் ? தொட்டுக் கல்யாணம் என்றால் love marriage தொடா க் கல்யாணம் என்றால் arranged marriage .
Subject: New Publication Announcement: Semi-empirical formula for the ionization energy of helium–like ions
rjpn.org
Retired Professor of Physics
Karaikudi, Tamil Nadu, India
Monday, October 26, 2026
அரசியல்வாதிகள் மறைவொழுக்கங்களால் அரசின் செலவுகளில் பொய் கணக்கு காட்டி மக்களின் வரிப்பணத்தை தனதாக்கிக் கொண்டுவிடுகின்றார்கள். அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை, தண்டனை கொடுக்கும் சட்டத்துறை யும் தண்டனை கொடுப்பதில்லை .அதனால் அவர்களுடைய முயற்சி நாளுக்குநாள் புதிய எல்லையத் தொடுகின்றது .தண்டிக்கப்படமால் இருக்க இவர்கள் பாவஞ்செய்து சம்பாதித்த பணத்தை தாராளமாக வழங்குவார்கள் .பாவப்பட்ட அந்தப் பணத்தை வாங்கி கொண்டு அவர்களுக்காகக் வேலை செய்தால் அந்தப்பாவம் காலங்கடந்து அவர்களுடைய குடும்பத்தையும் கெடுக்கும் .வருங்காலத் தலைமுறையினர் எல்லாம் ஒழுக்கமின்றி ,ஒரு திறமையும் இன்றி ஒருவருக்கொருவர் குறைகளைமட்டுமே சொல்லிக்கொண்டு சமுதாய ப் பொறுப்பற்ற வாழ்க்கையை மட்டுமே மேற்கொள்வார்கள் .அப்போது மக்கள் எவ்வளவு வரிப்பணம் செலுத்தினாலும் , அரசாங்கம் எவ்வளவு இலவசம் கொடுத்தாலும் சமுதாயத்தை திருத்தி வளர்ச்சிப் பாதையில் வாழவைக்கமுடியாது
Saturday, October 24, 2026
மனித முயற்சிகளின்றி எந்தவொரு செயலும் தானாக நிகழ்வதில்லை .சில செயல்கள் தானாக நிகழ்ந்தது போலத் தோன்றினாலும் உண்மையில் அவையாவும் அது அப்படி நிகழ்ந்ததில்லை. அறியப்படாத மனிதர்களின் பின்னணியில் அல்லது இயற்கையின் ஆற்றல் மூலங்களின் ஆக்கத்தில்; நிகழ்ந்தவையாகத்தான் இருக்கும் .கடவுள் அனைத்துச் செயல்களையும் மனிதர்கள் மூலமாகவோ அல்லது இயற்கையின் பரந்த ஆற்றல் மூலங்களின் வாயிலாகவோ செய்து முடிக்கின்றார். அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் நிகழ்வதில்லை . அறிவியலுக்கு உப்பட்ட செயல்களை மனிதர்கள் செய்துமுடிக்கின்றார்கள் என்றும் அப்பாற்பட்ட செயல்களை கடவுள் செய்கின்றார் என்றும் நமக்கு நாமே முடிவு செய்துவைத்திருக்கின்றோம். செயல்கள் இயற்கையால் செய்யப்படும்போது அது தானாக நிகழ்ந்தது போலத் தோன்றினாலும் அவையாவும் முன்திட்டமிட்ட ஒரு நெறிமுறைக்கு உட்பட்ட ,எங்கும் நிறைந்த இயற்கையின் பரந்த ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன .அதன் பலனைத் தனதாக்கிக்கொள்ள மனித முயற்சிகள் வேண்டும். அது இயற்கைக்கு முரண்பட்டதாக இருந்தால் , அதன் பலனை அனுபவிக்க முடியாமல்போகும் மனிதர்களின் எதிர்ப்பால் முயற்சிகளில் தடை தவிர்க்க இயலாததாக இருக்கும்



