திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
ஒரு திருடன் முதலில் அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் களவாடினான். அது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனால் அதில் ஆர்வம் கொண்டான். பின்னர் சின்னத் சின்னத் திருட்டுக்கள்.. அப்புறம் அதையும் விட்டுவிட்டு வீடு புகுந்து கொள்ளை அடிக்கத் தொடங்கினான். அதை நியாயப்படுத்திக் கொள்ள கொள்ளை அடித்த பொருளில் ஒரு பங்கை படிப்பறிவில்லா ஏழைகளுக்கும் பிழைக்க வழிி தெரியாமல் தடுமாறுபவர்களுக்கும் கொடுத்தான்.. கோயில் உண்டியலில் கொஞ்சம் சேர்த்தான்..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த உதவியால் அந்தத் திருடன் அவர்களுக்கெல்லாம் தெய்வம் ஆனான். அப்புறமென்ன அவர்களே அந்தத் திருடனுக்கு விளம்பரமானார்கள். ஊரே துதி பாட ஆரம்பித்துவிட்டது. நதி மூலம் ரிஷி மூலம் அறியாத அல்லது அறிய விரும்பாத சமுதாயம் இருக்கும் வரை வளர்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை மாறாக வீழ்ச்சியே ஏற்படும். ஊருக்கு எவ்வளவு இழப்பு வந்தாலும் பரவாயில்லை. தனக்கு கொஞ்சமாவது ஆதாயமிருந்தால் சரி என்ற எண்ணமிருக்கும் வரை சமுதாயத்தில் சீரழிவு தொடரவே செய்யும்.
.ஊழலுக்கு எதிரான கருத்துக்களை வாய் பேசினாலும் உள் மனம் என்னவோ அந்த ஊழலைச் செய்து பலன் பெறவே தூண்டப்படுகிறது. கைகள் ஊழலுக்கு அதரவாகச் செயல் படுவதைத் தடுத்துக் கொள்ள முடிவதில்லை. சட்டத்தை எழுதியவர்கள் ,பாதுகாவலர்கள் அதை மீறிச் செயல் படும் போது படிப்பவர்களும் பார்த்தவர்களும் என்ன புத்தனாகி விடவா முடியும்..?
இந்திய அரசியலின் போக்கு இதுதான். இதேதான்.
No comments:
Post a Comment