Tuesday, June 2, 2020

உரத்த சிந்தனையும் உயர்ந்த வாழ்க்கையும்


உரத்த சிந்தனையும் உயர்ந்த வாழ்க்கையும்
ஒருவருடைய வாழ்க்கை என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் கொடுக்கப்பட்ட காலத்தில் அவருடைய அனுபவங்களின் கால வாரியான தொகுப்பாகும். அவை வேறு சம்பவங்களாகவே மறைவதும்சரித்திரமாக வாழ்வதும் அவர்களுடைய கையில் தான் இருக்கின்றது ..வாழ்க்கையைச் சிறந்த வாழ்க்கையாக்கிக் கொள்வதையும் ,கொள்ளாததையும் முடிவு செய்வது ஒருவருடைய எண்ணங்களே ..சிறந்த வாழ்க்கை என்பது தனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்குமாறு வாழ்வதாகும்  . அது மட்டுமே பின் வருவோருக்கு பயன்தரக்கூடிய நல்ல அனுபவங்களைப் பாடமாகக்  கற்பிக்கக் கூடியது. . சாகாத சமுதாயத்தை நிலைத்திருக்கச் செய்வது.
பிள்ளைகளை பிள்ளைகளுக்காகப் பெற்று வளர்க்கவேண்டும். ஆனால் இன்றைக்கு பிள்ளை என்பது ஒரு விபத்தாகவோ அல்லது பின் விளைவாகவோ இருக்கின்றது .பிள்ளை பெறுவது வாழ்க்கையில்  பிள்ளை பெறுவதற்காக மட்டுமே வாழ்க்கை  கொடுக்கப்படவில்லை.அது சாகாத சமுதாயத்தை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்வதாகும். .பிள்ளைக்கு உண்மையான பெற்றோராக இருந்தால்தான்  பிற்காலத்தில் பெற்றோருக்கு பிள்ளை உண்மையானவனாக இருப்பான். இளமைப்  பருவத்தில் பிள்ளைகளுக்கு க் கொடுக்கும்   பாதுகாப்பு  என்பது முதுமைப்பருவத்தில்  பிள்ளைகளால் ஒரு பாதுகாப்பைப் பெறுவதற்கு  செய்யும் ஓர் இயற்கை   ஒப்பந்தம்.