இந்தியா முன்னேறுமா முன்னேறாதா ?
1.அரசு அலுவலகங்கள் எல்லாம் பொருளின்றி வியாபாரம் செய்யும் வளாகங்களாக இருக்கும் வரை
2.அரசுப் பணியில் சேருவதற்கும், அரசு சார்ந்த திட்டப் பணிகளை நிறைவேற்ற வாய்ப்புப் பெறுவதற்கும் கமுக்கத் தேர்வு மூலம் வேண்டியவர்களைத் தேர்வு செய்வது நீடிக்கும் வரை
3. ஆளுமையற்ற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உழைப்பின்றி பொருள் குவிக்கும் வழிமுறை நிலைத்திருக்கும் வரை
4. நெடுநாள் வேலையின்றி மனம் நொந்து தவறான வழிமுறைகளைப் பின்பற்றத் துணியும் இளைஞர்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த திட்ட மிடாத வரை
5. எல்லாவற்றையும் தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு , காசைமட்டும்
தானே எண்ணும் மனப்போக்கை அரசியல்வாதிகள் கைவிடாத வரை
6. எதையும் கண்காணிக்காமல் விட்டுவிட்டதால் பெருகிப் போன ஊழலைத் தடுத்து நிறுத்த
உருப்படியான வழிமுறையைப் பின்பற்றத் துணிவில்லாத வரை
7.நாட்டு நலத் திட்டங்களும் பணிகளும் மக்களைச் சென்றடைகின்றதா என்பதைப் பற்றி ஏதும் கவலைப்படாமல் தன்நலத்தை மட்டும் சுவைக்கும் கொடுஞ் செயலை விடாத வரை
8.மதுவால் மக்களை மனத்தால் முரடர்களாகவும் செயலால் திறமையற்றவர்களாகவும் உருவாக்கி வரும் சூழலைத் தடுக்க முயலாத வரை
இந்தியாவில்வேலியே பயிரை மேயும் நிலை ஒருபோதும் நின்று போய்விடுவதில்லை
No comments:
Post a Comment