Monday, February 15, 2016

creative thoughts

இந்தியாவின்  நிலையான , சீரான முன்னேற்றத்திற்குப்  பெரிதும் தடையாக இருப்பவர்கள்……….

அரசியல்வாதிகளே
நிர்வாக அதிகாரிகளே
பொதுமக்களே

என்று ஒரு பட்டிமன்றம் நட த்தினால் நடுநிலையான ஒரு நடுவரின் தீர்ப்பு எப்படி
இருக்கும் ?

அரசியல்வாதிகளைக்  கேட்டால் அவர்கள் பொதுமக்களின்  பூரண ஆதரவின்மை நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழையாமை பற்றி குறிப்பிட்டுப் பிறரைக் குறை கூறுவார்கள். பொதுவாக பொதுமக்களின் ஆதரவும் நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழைப்பும்  தன்னலங் கருதாமல்
தொண்டாற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படிப்பட்ட அரசியல்வாதிகளே இல்லாத நிலை ஏற்பட்டுப் போனதால் ஆதரவும் ஒத்துழைப்பும் அருகிக் கொண்டே வருவதுடன் எதிர்மறையான மாற்றங்களும் தூண்டப்பட்டு மக்களிடையே நிலைப்பட்டு வருகின்றன. வாழ்க்கையில் தடையில்லாத முன்னேற்றத்திற்கு எதிர்மறையான  அணுகு முறைகளே
மேலானது என்ற கொள்கையில் மக்கள் மயக்கம் கொண்டு மாற்றமுடியாத மனநிலையைப்
பெற்று வருகின்றார்கள். எதிர்மறைக் கொள்கையில் மாற்றமுடியாத மனநிலையைப் பெற்ற
மக்கள் ஒரு நாட்டிற்கு எதிர்த்து வெற்றி கொள்ளமுடியாத  உள்ளெதிரியாகி விடுகின்றார்கள்.
நேர்மையான அரசியல் வாதிகள் உருவாக  சமுதாயம் முயல வேண்டும். அதற்கு அரசியல்வாதிகளுக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதி, வயது வரம்பு  இருக்க வேண்டும் .. கொள்கை, நோக்கம், இலக்கு, லட்சியம் போன்றவற்றில் கருத்துக் கொண்டிருக்க வேண்டும்.. பொது நலங்கருதி ஒட்டுமொத்த
சமுதாயமும்  போராடினால் நேர் மறையான  மாற்றங்களுக்கு மூலமான ஒரு மாற்றத்தை
ஏற்படுத்த முடியும்.

அதிகாரிகளைக் கேட்டால் அவர்கள் அவர்களைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். அரசியல்வாதிகளிடம் மக்களைப் பற்றியும் மக்களிடம் அரசியல்வாதிகளைப் பற்றியும் குறை சொல்லுவார்கள் .பொதுவாக அதிகாரிகள் அதிகார வர்க்கத்தில்  இருப்போரின் தயவோடு சுய லாபம் பெற நினைகின்றார்கள். செய்யக் கூடாத செயல்களுக்காக வாங்கக் கூடாத வருமானங்களால் வாழ நினைக்கும் அதிகாரிகள் எப்போதும் அப்படி நினைப்பவர்களாகவே மாறி  ருகின்றார்கள். நாட்டின் உண்மை நிலையை அரசியல்வாதிகள் அறிவதில்லை. அறிய  முயற்சிப்பதும் இல்லை..அவர்களை அதிகாரிகள் அறிவுறுத்துவதுமில்லை. எல்லால் சித்தம் போக்கு சிவம் போக்கு தான். அதிகாரிகளைக் கண்கானிக்க வேண்டிது அரசியல்வாதிகளே  ஒழிய மக்க ளில்லை.

மக்களைக் கேட்டால் அவர்கள் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் குறை கூறுவார்கள்.ஆனால் தங்களுடைய சொந்தக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள  தவறான அணுகு முறைகளைப் பின்பற்றத் தயக்கம் காட்டத் தவறுகின்றார்கள் இந்தப் பழக்கம் இன்றைக்கு நிலைப்பட்டுப் போய் விட்டது. காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் மக்களும் சுய லாபம் பெறும்  ஆர்வத்தில்  அதிகாரிகளும் இந்தப் பழக்கத்தைக் கைவிட றுக்கின்றார்கள்.. அரசியல்வாதிகளை அண்டிப் பிழைக்கும் கும்பல் பெருகி வரும் இன்றைக்கு  இந்தச் சூழலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாதிருகின்றது. பொது மக்களிடம் கொள்கை ரீதியிலான உண்மையான மன மாற்றத்தை ஏற்படுத்தாத  செய்முறைளெதுவும்  நேர்மையான மாற்றங்ளுக்கு ழிகாட்டுவதில்லை. இந்தியாவின்  நிலையான , சீரான முன்னேற்றத்திற்குப்  பெரிதும் தடையாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள் தான் என்று நான் கூறுவேன். ஏனெனில் நாட்டின் நலனுக்காக உண்மையான மாற்றத்தை முடுக்கி வி அவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்பு உள்ளது . அரசியல்வாதிகள் மக்களுக்கு வழிகாட்டிகள் என்பதை மறந்து விடக்கூடாது. ஒருபோதும் முரண்பாடாக நடந்து கொள்ளவே கூடாது இயலாமைக்கு புறக் காரணங்களை மட்டுமே கூறுவதை விட்டுவிட்டு அதை களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். திட்டகளைத் தீட்டலாம்  அதை சொல்லலாம். அனால் அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி அதன் பயனுறு திறனை மேம்படுத்த வேண்டும். அதில் தான் உண்மையான அரசியல்வாதிகளின் உண்மையான செயல்பாடு வெளிப்படுகின்றது.

No comments:

Post a Comment