மாற்றம் என்றால்……..
ஊழல் இல்லாத அரசு
அமைய வேண்டுமென்றால் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சட்டசபைத் தேர்தல்
வரும் போது ஆட்சியாளர்களைத் தவிர்த்த பிற க ட்சியினர் மேடைதோறும் முழக்கமிடுகின்றார்கள்
இவர்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள்? மாற்றம் என்றால் அதன் உட்பொருள் என்ன ? என்ன மாற்றத்தை
மனதில் நினைத்துக்கொண்டு இப்படிச் சொல்லுகின்றார்கள்?
பொருளாதார நிலையில்
மாற்றமா? அப்படியென்றால் யாருடைய பொருளாதார
நிலையில் மாற்றம்? பொருளாதார நிலையில் மாற்றம் என்பது சட்டென வந்து விடுவதில்லை. அதற்கு
முறையான திட்ட ங் களும் செயல்பாடுகளும் வேண்டும். வெறும் மாயா ஜாலத்தால் வருவதில்லை. இந்தப்
பொருளாதார ஏற்றம். மாற்றம் வேண்டும் என்று சொல்பவர்கள் அந்த மாற்றம் நிகழ்வதற்கான செயல் திட்டங்களை தீட்டி
வைத்திருக்க வேண்டும். வழிமுறைகள் இல்லாத எதுவும் வெற்றுப் பேச்சாகத்தான் அமையும் . கற்பனைத் திட்டங்கள் மக்கள் மனதில் கவர்ச்சி
யூட்டலாம் ஆனால்l ஒரு காலத்திலும் மக்களுக்குப்
பயன் தருவதில்லை
தொழில் துறையில்
மாற்றமா ? அல்லது இவைகளுக்கெல்லாம் ஆதாரமான கல்வித்துறையில் மாற்றமா?. அரசு நிர்வாகத்
துறையில் மாற்றமா?. ஊழலை ஒழிப்பதில் மாற்றமா? . மதுவை ஒழிப்பதில் மாற்றமா? எதில் ,
என்ன மாற்றம்? மாற்றம் என்று மொட்டையாகச் சொன்னால்
என்ன புரியும் ?
ஊழலில் யாரும் ஈடுபடக் கூடாது என்று சொல்வதாலோ அல்லதுசட்டம் இயற்றுவதாலோ
அது ஒழிந்து விடுவதில்லை..அதற்கு எல்லோரும்
ஏக மனதாக கட்டுப்படவேண்டும். அரசியல் வாதிகளுக்கு ஒரு நியாயம் மக்களுக்கு ஒரு நியாயம்
என்று இருக்கும் வரை இந்த ஒருமித்த மன நிலை எட்டப்படுவதில்லை. என்பதை
அரசியல் வாதிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் . ஊழல்
இந்நாட்டில்
இன்னும் நிலைத்து மேலோங்கி இருக்கின்றது.
அதற்கு உண்மையான காரணம் இந்தப் போலியான புரியாமையே. மது ஒழிப்பும் இது போலத்தான்.
அரசுக்கு வருமானம் என்று சொல்லி சுய
இலாபம் பெறுபவர்களே அதன் வளர்ச்சியை ஊக்குவித்துக்
கொண்டிருக்கின்றார்கள். ஒரு காலத்தில் வளர்த்த
கிடா மார்பில் பாயும் போது உணர்வார்கள்.. காலங் கடந்த உணர்தலால்
எல்லோருக்கும் தீமையே. ஊழலும் மதுபோதையும்
நீண்ட காலமாகவே மறைமுக ஆதரவடனும் ,தன்னலச் சிந்தனையுடனும் வெகுவாக வளர்க்கப்பட்டுவிட்டன ஊழலுக்கு எதிராகச் சட்டமிருந்தும்
அது இன்னும் எங்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதனால் ஊழல் தடுப்பு என்ற
பெயரில் செலவினம் வேறு. தப்பான வருமானம்
தப்பான செலவினம்
ஆட்சிi மாற்றம்
வேண்டும் என்று விரும்புகின்றார்கள் மாற்றம்
என்று என்ன சொல்ல நினைக்கின்றார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும் . அப்படியில்லாத
போது
அது மக்கள் நலனில்
உண்மையான அக்கறையின்மையையே காட்டும். முறையான மக்கள் நலத் திட்டங்களால் பயன் பெறும் வழிமுறைகளைச் சொல்லி மக்களின் நன் மதிப்பைப் பெற்று அவற்றைச்
செயல் படுத்த வாய்ப்புத் தேடுபவர்களாக இருக்க வேண்டும் . இன்றைய இந்தியாவில்
அப்படிப்பட்ட தலைவர்களோ
அரசியல்வாதிகளோ யாருமிலர். இதுகூடப் பரவாயில்லை. அப்படிப்பட்ட தலைவர்களோ அரசியல்வாதிகளோ
இனித் தோன்றுவார்கள் என்பதற்கான சாத்தியக்கூ
றுகள் இல்லாதிருப்பதே மிகவும் மோசமானது. இது இந்தியாவின் நிரந்தரமாகிவிட்ட ஒரு தூரதிருஷ்ட்டம்.. இதனால் எதிர் காலத்தில்l
மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ முடியாத சூழலே உருவாகும்.எங்கும்
குழப்பம் ,சண்டை .போட்டி , பொறாமை இவைகளே மேலோங்கி இருக்கும். இதனால் நாட்டின் வளர்ச்சி சூன்ய
மாவதுடன் இவற்றைக் களைவதே ஒரு முக்கியமான செயலாக அமைந்து விடும்.மக்கள் மனதில் ஆக்கப்பூர்வமான
ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் அப்படி ஒரு மாற்றம் தலைவர்கள் மனதிலும் ஏற்படவேண்டும்.
.அந்த நலமான மாற்றம் ,நலமான மாற்றம் விரும்பிகளின் மனதில் இல்லாமல் மற்றவர்கள்
மனதில் ஏற்படுவ தில்லை . உண்மையில் உருப்படியான செயல்
திட்டங்கள் தீட்டியவர்கள் அவற்றைi செயல்படுத்தி பொதுநலன் ஈட்டவே வாய்ப்பு
கேட்பார்களே ஒழிய மற்றவர்களின் பலவீனங்களையும் குற்றங்களையும் முன்வைத்து வாய்ப்புக்
கேட்க மாட்டார்கள்.. தேர்தல்பரப்புரையில்l அவரவர்க்குரிய செயல் திட்டங்களைச் சொல்லி
வாய்ப்புக் கேட்க வேண்டுமே ஒழிய மற்றவர்களை இழுக்கக்கூடாது..
எல்லோரும் ஒரே
குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் இருக்கின்றார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது.
No comments:
Post a Comment