Wednesday, March 16, 2016

creative thoughts

பாரதியின் மனதை வாசியுங்கள்

ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது .ஆனால் அதற்கு முன்னால் மிகச் சாதரணமாகத் தினம் தினம் சமுதாய வீதியில் நிகழும் கொலைகள், கொள்ளைகள், போன்ற இன்ன பிற குற்றங்கள் தடுக்கப்படவேண்டும். . கொலை களுக்கு  சாதி  மட்டுமே காரணம் இல்லை. .சாதியின் அடிப்படையில் சமுதாயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வேறுபாடுகளே காரணம். இந்த வேறுபாடுகளே சாதி உணர்வை மேலும் மேலும் தூண்டி விடுகின்றது.

சாதி ஒழிப்பு ஆணவக் கொலைகளை ஒழித்து விடும் என்றாலும் அந்த உணர்வு குன்றிப் போய் விடாமல் பாதுகாப்பது யார் ?

பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் போது ஒழிக்கப்பட்ட சாதியைப் பற்றி ஏன் கேட்கப்பட வேண்டும் ?படிக்கும் போது உதவித் தொகை வழங்கும் போது ஏன் சாதியைப் பற்றிக் கேட்க வேண்டும்
வேலை தேடும் போது சாதி சார்ந்த முகவரியை ஏன் கேட்க வேண்டும் ? தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்கும் பதவிகள் பகிர்வுக்கும் சாதி முக்கியப் பங்கு வகிக்கும் போது ஒரு குறிப்பிட்ட சாதி சேர்ந்த மக்கள் அந்த உணர்வை எப்படி விட்டொழிப்பார்கள். சாதி ஒழிப்பு கலப்புத் திருமணத்தால் பாதிக்கப்படும் இளசுகளுக்கு மட்டும் தானா ?
நீங்கள்  மனது  வைத்தால், ஒதுங்கி வழிவிட்டால்  கீழ் சாதியில் பிறந்த ஒருவனை முதலமைச்சர் பதவியில் நீங்களே  அமர்த்தலாமே.

சாதியை விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் யார்? நிச்சியமாக் இன்றைய இளைய தலைமுறையினர் இல்ல. அப்படியென்றால் அது ஏன் இன்னும் தடுக்கப்படாமல் இருக்கின்றது ?
சாதி உணர்வு ,பதவி, வேலைவாய்ப்பு உதவித் தொகை ,போன்ற வற்றால் மக்களிடையே தக்கவைக்கப்    படுகின்றது. சாதி உணர்வு தங்கள் சமுகத்தின் உயர்வுக்கு ஒரு பாது காப்பு என்று மூத்த மக்கள் நினைக்கின்றார்கள். அதனால் அது இரத்த பாசத்தின் மூலம் இளைய தலை முறையினரிடம் ஊட்டப்பட்டு விடுகின்றது.  இந்த உணர்வு இன்னும் அழியாமல் இருப்பதற்கு அது அகத்தே  புதுப்பிக்கப்பட்டு வருவதுதான். காதல் மட்டும் விதி விலக்காக  இருப்பதால் அதனால் பாதிக்கப் படும் போது இளசுகளுக்கு ஆதரவாக சாதி ஓழிப்பு அரசியல் வாதிகளால்  சமுதாயத்தில் பேசப்படுகின்றது.

சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பா

வேஷம்  போடும்  அரசியல் வாதிகளே  பாரதியின் மனதை வாசியுங்கள்.


creative thoughts

இன்னும் விடியவில்லை

நான் முதலமைச்சரானால் ......
முதல் கையெழுத்தாக மது  ஒழிப்புச் சட்டம்தான்
ஆணவக் கொலைகள் நடைபெறாது தடுப்பேன் .
விவசாயிகளின் துயர் துடைப்பேன்
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதுடன் மேம்படுத்துவேன்
மாநிலத்தில் மின் வெட்டே இருக்காது
விலை வாசி உயர்வைக் கட்டுக்குள் வைத்திருப்பேன்
குடிநீர் பிரச்னையை ஒழிப்பேன் 

இப்படி முறையான செயல் திட்டமுமின்றி , ஆக்கப் பூர்வமான வழி  முறையுமின்றி  ,மனம் போன போக்கில் ,நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வாக்குறுதிகளை அள்ளி அள்ளி விடுவார்கள் இந்திய  அரசியல்வாதிகள். இதைத்தான் இந்திய மக்கள் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். ஒரு நம்பிக்கையுடன்.
.
ஒரு நாள் நான் செவ்வாய் கிரகத்தில் குதிப்பேன். அங்கு எல்லோருக்கும் முன்பாகக் குடியேறி விவசாயம் பண்ணுவேன். விலை பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து விலை வாசியை கட்டுப் படுத்துவேன்.

துருவப் பகுதிகளில் உறைந்துள்ள பனிப் பாறைகளை உருக்கி குடி நீர்ப் பிரச்சனையை விரைந்து தீர்ப்பேன். .இது கேட்பதற்கு  தான் நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறையில் ஒரு பயனுமில்லை. ஒரு துறை சார்ந்த வல்லுனர் ஆராய்ச்சியின் அடிப்படையில் இல்லாது தன் கருத்தைச் சொல்வாரேயானால் அது வெறும்  கம்தான். .இதைத்போலத்தான் இன்றைக்கு இந்திய அரசியல் வாதிகள் தங்கள் பரப்புரையில் அர்த்தமில்லாமல் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கின்றர்ர்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவது விவசாயமும்  தொழில் உற்பதியும்தான் . அவற்றைத் தொடர்ந்து செய்வதுடன் மேலும் மேலும் புதுமைப் படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
இதற்கு நாட்டின் கனிம மற்றும் ஆற்றல் வளங்களை  மேம்படுத்தி பயன் படுத்திக் கொள்ள
வேண்டும் .இதை ஒரு சேர இயக்கிச் செல்வது கல்வியும் ஆராய்ச்சியும்தான் . இவற்றை மேம்படுத்திக் கொண்டாலே  பிற யாவும் தானாகவே வளம் பெறும். குறைபாடில்லாத அணுகுமுறை உறுதியாக இருக்கும் பொழுது இது 100 % பயனளிக்கக் கூடியது.
எதிர் கால வளமான இந்தியாவிற்கு இன்றைய இளைஞர்களைத் தயார்படுத்திக் கொள்வது ஒன்றே
மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றது சமுதாயத்தில் இந்த நம்பிக்கை துளிர்த்து ஆல விருட்சமாக விரிவடைய வேண்டுமானால் ,கண்ணியம் ,கடமை, கட்டுப்பாடு (உண்மையான ) எண்ணத்தில் தூய்மை ,பேச்சில் வாய்மை ,செயலில் நேர்மை இவற்றோடு செயல்பட வேண்டியது அவசியமாகும். நம்முடைய பொறுப்புமாகும். இந்தப் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும் .இனியும் ஒரு அரசியல்வாதி பொறுப்பற்று செயல் படுவதும் பேசுவதும் நாட்டின் வளர்ச்சிக்கு அழகல்ல. பொது நலம்  கருதி அதை இனியும் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றைக்கும் என் பொறுப்புக்களை உணர்ந்து செயல்படுவேன். நான் மக்களின் சேவகனே ஒழிய முதலாளி இல்லை .
என்று யாரவது ஒரு அரசியல்வாதி தன் பரப்புரையில் முழக்கமிடுவார் என்று எதிர்பார்த்தேன். எப்போதும் போல ஏமாற்றம் தான். இன்னும் விடியவில்லை போலும்.


Monday, March 14, 2016

creative thoughts

மாற்றம் என்றால்……..

ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டுமென்றால் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சட்டசபைத் தேர்தல் வரும் போது ஆட்சியாளர்களைத் தவிர்த்த பிற க ட்சியினர்  மேடைதோறும் முழக்கமிடுகின்றார்கள்
 இவர்கள் என்ன மாற்றத்தை  எதிர்பார்க்கின்றார்கள்?  மாற்றம் என்றால் அதன் உட்பொருள் என்ன ? என்ன மாற்றத்தை மனதில் நினைத்துக்கொண்டு இப்படிச் சொல்லுகின்றார்கள்?
பொருளாதார நிலையில் மாற்றமா?  அப்படியென்றால் யாருடைய பொருளாதார நிலையில் மாற்றம்? பொருளாதார நிலையில் மாற்றம் என்பது சட்டென வந்து விடுவதில்லை. அதற்கு முறையான திட்ட ங் களும்  செயல்பாடுகளும் வேண்டும். வெறும் மாயா  ஜாலத்தால் வருவதில்லை. இந்தப் பொருளாதார ஏற்றம். மாற்றம் வேண்டும் என்று சொல்பவர்கள்  அந்த மாற்றம் நிகழ்வதற்கான செயல் திட்டங்களை தீட்டி வைத்திருக்க வேண்டும். வழிமுறைகள் இல்லாத எதுவும் வெற்றுப் பேச்சாகத்தான்  அமையும் . கற்பனைத் திட்டங்கள் மக்கள் மனதில் கவர்ச்சி யூட்டலாம்    ஆனால்l ஒரு காலத்திலும் மக்களுக்குப் பயன் தருவதில்லை 
தொழில் துறையில் மாற்றமா ? அல்லது இவைகளுக்கெல்லாம் ஆதாரமான கல்வித்துறையில் மாற்றமா?. அரசு நிர்வாகத் துறையில் மாற்றமா?. ஊழலை ஒழிப்பதில் மாற்றமா? . மதுவை ஒழிப்பதில் மாற்றமா? எதில் , என்ன மாற்றம்?  மாற்றம் என்று மொட்டையாகச் சொன்னால் என்ன புரியும் ?

 ஊழலில் யாரும் டுபடக் கூடாது என்று சொல்வதாலோ அல்லதுசட்டம் இயற்றுவதாலோ அது ஒழிந்து  விடுவதில்லை..அதற்கு எல்லோரும் ஏக மனதாக கட்டுப்படவேண்டும். அரசியல் வாதிகளுக்கு ஒரு நியாயம் மக்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும் வரை இந்த ஒருமித்த மன நிலை எட்டப்படுவதில்லை. என்பதை அரசியல் வாதிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் . ஊழல்
 இந்நாட்டில்   இன்னும் நிலைத்து  மேலோங்கி இருக்கின்றது. அதற்கு உண்மையான காரணம் இந்தப் போலியான புரியாமையே. மது ஒழிப்பும் இது போலத்தான். அசுக்கு  வருமானம் என்று சொல்லி சுய இலாபம்  பெறுபவர்களே அதன் வளர்ச்சியை ஊக்குவித்துக்  கொண்டிருக்கின்றார்கள். ஒரு காலத்தில் வளர்த்த  கிடா  மார்பில் பாயும் போது உணர்வார்கள்.. காலங் கடந்த  உணர்தலால்  எல்லோருக்கும் தீமையே. ஊழலும்  மதுபோதையும் நீண்ட காலமாகவே மறைமுக ஆதரவடனும் ,தன்னலச்  சிந்தனையுடனும் வெகுவாக  வளர்க்கப்பட்டுவிட்டன ஊழலுக்கு எதிராகச் சட்டமிருந்தும் அது இன்னும் எங்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதனால் ஊழல் தடுப்பு என்ற பெயரில் செலவினம் வேறு.   தப்பான  வருமானம்  தப்பான செலவினம்
ஆட்சிi மாற்றம் வேண்டும் என்று  விரும்புகின்றார்கள் மாற்றம் என்று  என்ன  சொல்ல நினைக்கின்றார்கள்  என்பதை மக்களுக்குத்  தெளிவாக  விக்க வேண்டும் . அப்படியில்லாத போது
அது மக்கள் நலனில் உண்மையான அக்கறையின்மையையே காட்டும். முறையான மக்கள் நலத்   திட்டங்களால்  பயன்  பெறும் வழிமுறைகளைச் சொல்லி மக்களின் நன் திப்பைப் பெற்று  அவற்றைச் செயல் படுத்த வாய்ப்புத் தேடுபவர்களாக இருக்க  வேண்டும் . இன்றைய இந்தியாவில்
அப்படிப்பட்ட தலைவர்களோ அரசியல்வாதிகளோ யாருமிலர். இதுகூடப் பரவாயில்லை. அப்படிப்பட்ட தலைவர்களோ அரசியல்வாதிகளோ  இனித் தோன்றுவார்கள் என்பதற்கான சாத்தியக்கூ றுகள் இல்லாதிருப்பதே மிகவும் மோசமானது. இது இந்தியாவின்  நிரந்தரமாகிவிட்ட ஒரு தூரதிருஷ்ட்டம்.. இதனால் எதிர் காலத்தில்l மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ முடியாத சூழலே உருவாகும்.எங்கும் குழப்பம் ,சண்டை .போட்டி , பொறாமை  இவைகளே  மேலோங்கி இருக்கும். இதனால் நாட்டின் வளர்ச்சி சூன்ய மாவதுடன் இவற்றைக் களைவதே ஒரு முக்கியமான செயலாக அமைந்து விடும்.மக்கள் மனதில் ஆக்கப்பூர்வமான ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் அப்படி ஒரு மாற்றம் தலைவர்கள் மனதிலும் ஏற்படவேண்டும். .அந்த நலமான  மாற்றம் ,நலமான  மாற்றம் விரும்பிகளின் மனதில் இல்லாமல் மற்றவர்கள் மனதில் ஏற்படுவ தில்லை  . உண்மையில் உருப்படியான செயல் திட்டங்கள் தீட்டியவர்கள் அவற்றைi செயல்படுத்தி பொதுநலன்  ட்டவே  வாய்ப்பு கேட்பார்களே ஒழிய மற்றவர்களின் பலவீனங்களையும் குற்றங்களையும் முன்வைத்து வாய்ப்புக் கேட்க மாட்டார்கள்.. தேர்தல்பரப்புரையில்l அவரவர்க்குரிய செயல் திட்டங்களைச் சொல்லி வாய்ப்புக் கேட்க வேண்டுமே ஒழிய மற்றவர்களை இழுக்கக்கூடாது..

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் இருக்கின்றார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது.