சான்டாசெக்
(J.
Jandasek ) 3R31 வகைத் தொடர்புகளுக்கான ஒரு மாறியுடன் கூடிய ஒரு பொதுத் தொடர்பை த் தந்துள்ளார்,
n3 + (3n2+2n+1)3 +
(3n3+3n2+2n)3 = (3n3+3n2+2n+1)3
இதிலுள்ள இரண்டாவது உறுப்பு
சுழியானால் n -ன் மதிப்பு சிக்கலெண்ணாகிவிடுகின்றது n = [ (-1+ i√ 2)/3]. இதனால் தொடர்பில் உள்ள அனைத்து
உறுப்புக்களுக்கு முழு எண்ணாக இருப்பது தவிர்க்கப்படுகின்றது
ஆம்போனின் (Ampon) இது போன்ற பொதுத் தொடர்பும் இதே கருத்தை
சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.
(3n2)3 + (6n2+3n+1)3 +
(9n3+6n2+3n)3 = (9n3+6n2+3n+1)3
3R31 வகைத் தொடர்பிலுள்ள ஏதாவதொரு உறுப்பைச் சுழியாக்கினால் சார்பிலா
மாறி அல்லது மாறிகள் நிபந்தனைக்கு உட்பட்டு பின்ன அல்லது கூறுபடா அல்லது
சிக்கலெண்களை மட்டும் ஏற்பதால் பிற உறுப்புகள் முழு எண்களாக இருப்பதில்லை. இது முழு எண்களுடன் 3R31 வகைத் தொடர்பை
2R31 வகைத் தொடர்பாக மாறவே முடியாது என்பதை அழுத்தமாகத் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment