Tuesday, July 27, 2021

சுயமுன்னேற்றத்தில் அகத்தடைகள்

 ஒவ்வொருவருடைய  முன்னேற்றத்திற்கும்  தடைகள் இருப்பதுதுண்டு.எந்த   சாதனைகளும்  தடைகளைத் தாண்டி   செல்லும் முயற்சிகளுக்கு அப்பால் தான் படைக்கப்படுகின்றன,பொதுவாகத்  தடைகள் இருவகைப்படும் அவற்றை புறக்தடை என்றும் அகத்தடை என்றும் கூறுவார்கள். புறத்தடைகள் மற்றவர்களாலும் புறக்காரணங்களினாலும் ஏற்படுத்தப்படுவது .ஒருவருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட்டு மனம் பொறுக்காமல் அதைத் தடுக்க  பிறரால் ஏற்படுத்தப்படும் கெடுதல்கள் புறத்தடைகளுள் முதன்மையானதும் மோசமனாதுமாகும் .பொதுவாக இவற்றை நாம் சுய அறிவு மற்றும் அனுபவத்தின்  மூலம் யூகித்தறிந்து கொண்டு தவிர்த்துக் கொள்ள முடியும்  .உடல் நலக்   குறைவு, விபத்துக்கள் ,இயற்கைப் பேரிடர்கள் , குறித்த காலத்தில் கிடைக்காத உதவிகள்  புறக்காரணங்களினால் ஏற்படும் தடைகளாகும் .நுண்ணறிவினால் இவற்றை ஓரளவு முன்னறிந்து கொண்டு  தடுத்துக் கொள்ள முடியும் ஒருவர் தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடையாக இருப்பது அகத்தடையாகும். அகத்தடைகளை யாரும் அகத்தடைகளாகவே  நினைப்பதில்லை மாறாக இனமறியப்படாத யாரோ ஒருவராலும் அல்லது தனக்குப் பிடிக்காத  உறவினராலும் செய்யப்படும் ஒரு செயலாகவே நினைக்கின்றார்கள்.பொதுவாக எல்லோரும் தாங்கள்  மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெற்றுவிட்டால் அதைத் தனது சாதனை என்றும் தோற்றுவிட்டால் அது பிறரால் செய்யப்பட்ட  சதி என்றும் கூறுவார்கள்.  

 

No comments:

Post a Comment