Thursday, November 4, 2021

 தீபாவளித் திருநாளன்று sun TV ல் ஒளிபரப்பப்பட்ட  பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிப்பது ஆண்களா இல்லை பெண்களா என்ற தலைப்பில் சாலமன் பாப்பைய்யா  தலைமையில் ஒரு பட்டிமன்றம் பார்த்தேன். தாயின் பங்களிப்பே என்று தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அது மரபு வழியாக  நம் சமூகம் பின்பற்றி ஒழுகும் உணர்ச்சியின் வெளிப்பாடே அந்த உணர்ச்சியை யாரும் தரக்குறைவாக மதிப்பிடமுடியாது இடது கண் சிறந்ததா வலது கண் சிறந்ததா என்று கேட்டாலோ , ஓடும் வண்டியில் வலது சக்கரம் பயனுள்ளதா இடது சக்கரம் பயனுள்ளதா என்று கேட்டாலோ இயற்கை என்ன பதில் சொல்லும் 

 

எது சரியானது என்று சிந்தித்து வாழ்வியல் ஒழுக்கங்களை வரையறுத்த நம் முன்னோர்கள் இல்லறத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள கடமைகளைப் பிரித்துக் கொடுத்திருக்கின்றார்கள். ஒருவருடைய கடமைகள் மட்டுமே இல்லறத்தை முழுமையாகிவிடாது. .பிள்ளை வேண்டுமென்றால் ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வேண்டும். ஒருவரின்றி ஒருவரால் மட்டுமே இது நிறைவேறிவிடுவதில்லை.

பிள்ளை பிறந்தவுடன் பால் கொடுத்து வளர்க்க வேண்டிய  பொறுப்பு தாய்க்கும் ,அந்தத் தாய்க்கும் சேய்க்கும் வேண்டிய சத்துணவுகள் ,உடை மற்றும் அடிப்படை வசதிகளைக் கொடுக்கச் சம்பாதிக்க வேண்டிய பொறுப்பு தகப்பனுக்கும் உள்ளது.ஆண் உயர்ந்தவனா இல்லை பெண் உயர்ந்தவளா என்று கேட்டால் அது அவர்கள் செய்யும் கடமைகளில் எது மேலானது என்று கேட்பது போல ஆகிவிடும் .  

 

விதி விலக்கான உதாரணங்கள் எப்பொழுதும் இயற்கைக்கு முரண்பாடாகவே இருக்கும். ஒரு பெண் ஆணுக்கு நிகரானவள் என்று நிருபிக்க முயலும் போது வாழ்வியல் கடமைகள் புறக்கணிக்கப்படுகின்றன ..அவள் செய்யவேண்டிய வீட்டு வேலைகளை ஆண் செய்ய வேண்டியது தவிர்க்கயியலாததாகி விடுகின்றது..

 

கவிஞர் கண்ணதாசன் பாசமலரில்  மலர்ந்தும் மலராத  என்று ஒரு தாலாட்டுப் பாடல் ஈடு இணையில்லாதது  இமாமுக்கு கொடுக்கப்பட்ட விருது இசைக்கும் இசைப்பிற்கும் . பாடலுக்கு இல்லை .பாடல் எழுதியதுஒரு பெண்ணாக இருக்கலாம் . ஆனால் அந்தப் பெண்ணின் மூல வித்து ஆணிலிருந்து வந்ததே..

 

ஒரு பெண்தான் ஆண் பிள்ளையையும் பெறுகின்றாள்வளர்க்கும்  போது அதிக பங்களிப்புச் செய்த அந்தப் பெண் எங்கே தவறு செய்தாள் . அவன் தகப்பனாக மாறியபோது அவன் பங்களிப்பு குறைந்து  போனது . அப்படியானால் அவளுடைய வளர்ச்சியில் எதோ குறைபாடு உள்ளது என்று சொல்ல முடியுமா ? சமுதாய அவலங்களை இயற்கையோடு இணைக்கும் போது சில முரண்பாடான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடுகின்றோம் . என்னுடைய தீர்ப்பு 50-50 %.    .    .    

No comments:

Post a Comment