Tuesday, August 2, 2022

 

  மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே கிம் (Andre Geim ) மற்றும் கோன்ஸ்டன்டின் நோவோசெலோவ் (Konstantin Novoselov ஆகியோரால் கிராபீன் முதன் முதலில் கிராபைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது; இச்செயலுக்காகவும் கிராபீனைப் பற்றிய இயற்பியலை விளக்கியதற்காகவும் இவர்களிருவருக்கும் இயற்பியல் நோபல் பரிசு 2010-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பென்சீன் கட்டமைப்பைப் போல உள்ள இதில் கார்பன் அணுக்கள் எல்லாம் ஒரே தளத்தில் அமைந்திருக்கும் . கிராபீன் ,தேன்கூடு போன்ற படிக அணித்தளத்தில் ,ஒன்றை அணு தடிப்புடன் வெறும் கார்பன் அணுக்களின் பிணைப்பால் கட்டமைக்கப்பட்டது இதில் கார்பன்- கார்பன் பிணைப்பின் நீளம் .142 நானோ மீட்டராகும்       

        

.கிராபீன் தளங்களை அடுக்கி கிராபைட்டை உருவாக்கினால் அணித்தள இடைவெளி  0, 35 நானோ மீட்டராக இருக்கும்.இதன் வலிமையும் நிலைப்புத் தன்மையும் மிகவும் அதிகம் .  இவ்வளவு மெல்லியதாக இருந்தாலும் எக்கை காட்டிலும் உறுதியானதாக இருக்கின்றது. உண்மையில் கிராபீன் கிராபைட்டிலிருந்தே உருவாக்கப்பட்டது கிம்மும் நோவாசெலோவும் கிராபைட்டின் மேல் ஒட்டு நாடாவை (cellotape) மீண்டும் மீண்டும் ஒற்றி எடுப்பதன் மூலம் கிராபைட்டை செதில் செதிலாக்கி அச்செதில்களை ஆக்சிசனேற்றப்பட்ட சிலிகான் தளத்தின் மேல் வைத்து மீண்டும் ஒற்று வேலையைச் செய்ததன் மூலம் இறுதியில் கிராபீனைப் பிரித்தெடுத்தனர்.

கிராபீனின்  சிறப்பியல்புகள்

உலகிலேயே மிகவும் மெல்லிய பொருளான கிராபீன், உலகிலேயே மிகவும் உறுதியான பொருளும் கூட! (எஃகை விட இது 100 மடங்கு உறுதியானது)/ ஒரு மில்லிமீட்டர் தடிமனுள்ள கிராபைட்டில் மூன்று மில்லியன் கிராபீன் அடுக்குகளை வைக்க முடியும்; அவ்வளவு மெலிதான பொருள் இது. கிராபீனைக் கொண்டு சுழிப்பரிமாணப் பொருளான புல்லரீன், ஒரு-பரிமாணப் பொருளான கரிம நேனோகுழாய், முப்பரிமாணப் பொருளான கிராபைட் ஆகியவற்றை உருவாக்க இயலும். ஏறக்குறைய முழுமையான ஒளி-ஊடுருவுந் தன்மையுடன் இருந்தாலும், இது மிகுந்த அடர்த்தி கொண்டுள்ளதால், மிகச்சிறிய அணுவான ஒரு ஹீலியம் அணு கூட இதனுள் ஊடுருவ முடியாது..

இது தாமிரத்தையொத்த மின்கடத்துத் தன்மை கொண்டது; இதன் வழியாகப் பாயும் மின்னோட்டம் மிகச்சிறியளவு ஆற்றலையே இழப்பதாலும் கட்டமைப்பதற்கு எளியதாக  இருப்பதாலும் தொகுப்புச் சுற்றுகள் (integrated Circuits) உருவாக்குவதில் எதிர்காலத்தில் கிராபீன் பெருமளவு பங்களிக்கக் கூடும். என்று கூறுகின்றார்கள். கிராபீனின் அணித்தள விடை வெளியின் ஊடாக எலெக்ட் ரான்கள் மோதல்கள் ஏதுமின்றி எளிதாகக் கடந்து செல்கின்றன. .இதில் பாயும் எலக்ட்ரான்கள் ஒளித்துகளான போட்டானைப் போன்று செயல்படுகின்றன; அதாவது, கிட்டத்தட்ட நிறையற்ற துகளைப் போல. இதனால், மிகப்பெரிய துகள் முடுக்கிகள் பெரும் ஆற்றலைச் செலவிட்டு செய்யக்கூடிய வேலையை கிராபீனால் மிக எளிதில் செய்ய முடியலாம் என்று கூறுகின்றார்கள்

No comments:

Post a Comment