நெகிழியின் தீமைகள்
நெகிழிப் பொருள்களில் அதிகம் தீங்கு தரும் வேதிப் பொருள்கள்
சேர்க்கப்படு வதால்
பல்வேறு தீமைகளுக்குக் காரணமாகின்றன.நெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில்
மறு சுழற்சி செய்யும் போதும், உருகும்போதும் வெளியேறும் வாயுக்கள் நத்தன்மை
உடையதால் ஆலைத் தொழிலாளர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம்
பாதிக்கப்படுகின்றனர்.
பாலித்தீன் பைகளால் சுற்றுச் சூழல்
பாதிப்பு ஏற்படுகிறது. ஒருமுறை
பயன்படுத்தியபின் குப்பையாகத் தூக்கி
எறியப்படும் பாலிதீன் பைகள் தீமையே தருகிறது. நீர்
வழிந்து செல்லும் கால்வாய்களை அடைத்துக் கொள்வதால் .மழைக் காலங்களில்
வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகின்றது.. சாக்கடைகள் அடை பட்டுத் தேங்கும் நீரால் துர்நாற்றமும் கொசு
உற்பத்தியும் ஏற்படுகின்றது இது வேறு பல பிரச்சனைகளுக்குக் காரணமாகின்றது நெகிழிகள்
பிற பொருட்களைப் போல மக்குவதில்லை . அது நிலைமாறாமல் நீண்ட காலம் அப்படியே இருப்பதால் மண்ணில் தங்கி
விடுகின்றன. இது நிலத்தடி நீரை மழைக் காலத்தில் புதுப்பித்துக் கொள்வதில் தடை
ஏற்படுகின்றது. நிலத்தின் வளத்தை சீரழிப்பதால் ,தாவரங்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது .
மேலும் இரையோடு பாலிதீன் பைகளையும்
சேர்த்து உண்ணும் கால்நடைகளின் உடல்
நலம் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.• . சிலருக்கு தொட்டால் கூட ஒவ்வாமை (allergy)
ஏற்படுகிறது. தோல்நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களைத் தூண்டுவதற்கு
நெகிழி காரணமாக இருக்கின்றது. நெகிழி உறைகள்சுற்றப்பட்டு வரும் சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழியிலுள்ள வேதிப் பொருளான பென்சீன் வினைல் குளோரைடு கலந்து
விடுகிறது. இதனால் புற்று நோய் ஏற்படக் காரணமாகிறது ஏற்படுகின்றது என்று மருத்துவ ஆய்வறிக்கை
கூறுகின்றது .மூச்சுக்
குழாய் பாதிப்பு, குடல்
புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக்
கூடும் எனவும் இவ்வாய்வுகள் கூறுகின்றன.
நெகிழிப் பொருட்களை எரிப்பதால் டையாக்சின்
என்ற நச்சுப் புகை வெளிவருகிறது. இது வளிமண்டலத்தைப் பெரிதும்
மாசுபடுத்திகின்றது. வளிமண்டலத்தில் அதிகம் சேரும் கார்பன் டை ஆக்ஸைடு புவியின்
வெப்பநிலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. இதனால் பருவ மாற்றங்கள்
தூண்டப்படுகின்றன. துருவப் பகுதிகளில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகள் உருகி கடலின்
நீர்மட்டத்தை உயர்த்திவிடுகின்றது .இதனால் தாழ்ந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கிவிடும் அபாயம் ஏற்படுகின்றது
No comments:
Post a Comment