Tuesday, April 2, 2024

மக்களாட்சி மக்களுக்கு மன்னராட்சி மக்கள் சொன்ன கதை

 

ஒரு சின்னக் கதை

மக்களாட்சி மக்களுக்கு மன்னராட்சி மக்கள் சொன்ன கதை

அருகருகே இரண்டு குட்டிநாடுகள் . குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தன . ஒரு நாட்டில் மன்னர் இறந்து போக , அவருடைய வாரிசுகள்  பட்டம் சூட சண்டை போட்டுக்கொண்டார்கள். மன்னரின் ஒரு மகன் மற்றவவர்களை ஏமாற்ற ஒரு தந்திரம் செய்தான் . நாட்டு மக்களுக்கு எல்லாம் இலவசமாகத் தருவதாகவும் தன்னையே  பட்டம்  சூட்டிக்கொள்ள மக்கள் ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டான் இதை நம்பி மக்களும் அவனையே மன்னராக்கிக் கொண்டனர். சில காலம் அவனும் மக்களுக்கு உணவுப்பொருட்கள் ,துணிமணிகள் என்று கொடுத்தான். .வரவு இல்லாமால் எப்படி ஒருவர் செலவு செய்யமுடியும் . போகப்போக இலவசம் இளைத்துப் போனது . கொஞ்ச காலம் இலவசங்களைப் பெற்று மகிழ்ந்த மக்கள் உழைக்க மறந்தனர் .அவர்கள் அரசன் தரும் இலவசத்தை நம்பி சுய சம்பாத்தியத்தை இழந்தனர் அரசாங்கத்திற்கு வேண்டிய வரவை மக்களிடமிருந்து வாங்குவதற்கு வழியில்லாமல் இருந்தது .வறுமையிலும் பஞ்சத்திலும் பரிதவித்த நாடு காலத்தால் மாண்டுபோனது .

இலவசம் என்பது வரப்போகும் ஒரு பெரிய ஆபத்தின் அறிகுறி  என்பதை மக்கள் உணரவேண்டும் .       

No comments:

Post a Comment