இயற்கையைப் பார்த்தும் தொடரும் புரிதலின்மை
கடலிலிருந்து நீர் ஆவியாகி நாட்டு மக்களின் நலனுக்காக வானத்தில் மேகமாகி எங்கு பண்டமாற்றம் பெறுமோ அங்கு விரைந்து சென்று ,மலை முகட்டில் முட்டி மோதி குளிர்ந்து மழையாகப் பொழிகின்றது .
அது மலையிலே தங்கிவிடுவதில்லை.மலைக்கு இரக்கமுள்ள மனசு .
பள்ளத்தாக்குகள் கொஞ்சம் நீரைத் தேக்கிவைத்துக்கொள்கின்றது .
அதனால் குறிஞ்சி நிலப் பயிர்களும் ,பிற உயிரினங்களும் காலம் முழுதும் வாழ்கின்றன .
மீதி நீரை மலைச் சரிவில் ஓடவிட்டு மக்கள் வாழும் நிலப்பகுதியை அடையுமாறு செய்கின்றது. அதனால் நெய்தல் ,முல்லை நிலத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் கவலையின்றி வாழ்கின்றன.
மக்கள் பயன்பாட்டிற்கும் எஞ்சிய நீரே மீண்டும் கடலில் போய் கலக்கின்றது .
நீரின் இந்த வட்டச் சுற்று முறையில் இயற்கையால் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
கடல் நீர் என்பது மக்களிடம் உள்ள பணம் . வரி என்பது அதன் ஆவியாக்கம் . மலை என்பது ஆட்சியாளர்கள்
. மக்களின் பணம் ஆட்சியாளர்களை அடைந்ததும் அவர்களுடைய கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு
என்ற இரக்க குணத்தால் அவர்களுடைய மடியிலேயே தங்கிவிடாமல் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக
வடிந்து செல்லவேண்டும் . மலை நீர் என்பது மலைவாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்ல அதில் நெய்தல் முல்லை நிலங்களில் வாழும் உயிரினங்களுக்கும்
கூடுதல் பங்குண்டு . மலை என்பது மக்களுக்காக
சேவை செய்யும் ஒரு இடைஊடகம் மட்டுமே. அதுவே மழை நீரை விழுங்குவதில் லை
No comments:
Post a Comment