Tuesday, June 18, 2024

 இயற்கையின் படைப்பில் எல்லோரும் சமம் . புறவேறு பாடுகளே நம்மை ஒருவருக்கொருவர் வேறுபடுத்திக் காட்டுகின்றன. பிறக்கும் போது நாம் எல்லோரும் ஒரேமாதிரியாகத்தான் படைக்கப்பட்டோம். வாழ்வதற்குத் தேவையான திறமைகளைப் பெறுவதற்குத் வேண்டிய உடல் உறுப்புக்கள் வேறுபாடின்றி எல்லோருக்கும் ஒன்றுபோல. ஆனால் வாழ்க்கைச் சூழல் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதாலும்  வளர்ப்பு முறை வேறுபட்டிருப்பதாலும் எல்லோரும் ஒத்தகருத்துக் களைக் கொண்டிருப்பதில்லை. ஒருவரே எல்லாச் சமயங் களிலும் ஒரேகருத்தையும் கொண்டிருப்பதில்லை. தனக்காக ஒரு கருத்தையும் மற்றவர்களுக்காக ஒரு கருத்தையும் கொண்டிருப்பார்கள். எது தனக்கு அனுகூலம் மிக்கதாக இருக்கின்றதோ அது தவறாக, எதிர்மறையாக இருப்பினும் அதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள் . எது தனக்கு அனுகூலமின்றி இருக்கின்றதோ அது நேர்மறையாக இருப்பினும் அதை மறைமுகமாக மறுக்கின்றார்கள். ஒருவரால் ஏற்றுக்கொள்ளத்  தக்க கருத்து என்பது சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளத் தக்க கருத்தாக இருக்கவேண்டும் . அப்படிப்பட்ட கருத்துக்களை மட்டுமே நன்னெறிகளாக நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்து வழிகாட்டியிருக்கின்றார் கள். இன்றைக்கு தவறான கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர் களை அறிவுரைகள் மூலம் திருத்த முடிவதில்லை. ஏனெனில் தவறான கருத்துக்களினால் சுகம் காண்பவர்களைத் தடுக்காமல் ,தண்டிக்காமல் நீண்டகாலமாக அனுமதித்துவிட்டோம் . இனி அவர்கள் அவர்களாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் இப் போக்கின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே முடியாது .

No comments:

Post a Comment