Friday, January 31, 2025

 எதிர்கட்சியினர் யாராக இருந்தாலும் , புதிதாக க் கட்சி ஆரம்பித்து அரசியல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எல்லோரும் ஆளுங்கட்சியினரை விமர்ச்சிப்பதையே அவர்களுடைய முழுநேர வேலையாகக் கொண்டுள்ளனர் .அவர்களை மக்களின் வளமான எதிர்காலத்திற்கான உருப்படியான திட்டங்கள் ஏதும் அறியாதவர்களாவே இருக்கின்றார்கள். . பிறரை விமர்சிப்பதற்கு முன்னர் முதலில் தன்னை நேர்படுத்திக்கொள்ளவேண்டும் . மேலும் அரசியலை அரசியலுக்காகச் செய்யாத போது ஒட்டுமொத்த சமுதாயமும் சீரழிந்து போகும் . மக்கள் வறுமையில் மடிந்த பிறகு நாட்டில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை ? அரசியல்வாதிகள் அரசில்வாதிகளை ஆளும் நிலை வந்தால் அப்போது இப்போது இருக்கும் நிலையைவிட பலமடங்கு துயரங்களைத்தான் சந்திக்க நேரிடும் .

All reactions:
Meyyappa Meyyappan

Tuesday, January 28, 2025

 மக்களாகிய  நாம் அறியாமையால்  மக்களாட்சியில் செய்யும் மிகப் பெரிய தவறு  சமுதாயத்தின்  பாதுகாப்பிற்காகவும்  நலனுக்காகவும்  மக்களால் கண்காணிப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  ஆட்சிப்பொறுப்பும் , அதற்காக மக்களால் கொடுக்கப்பட்டதும் அவர்களாக எடுத்துக்கொண்ட  அளவில்லாத அதிகாரமும், போலியான வார்த்தைகளை நம்பி மக்கள் அளவின்றி கொடுக்கும் செல்வாக்கும் ஒன்றிணைந்து அவர்களை மறைவொழுக்க நாயகர்களாக மாற்றி இருக்கின்றது . பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைக் கண்டு அச்சப்பட்டு மவுனிகளாக இருக்கின்றார்கள் . பயன் துய்த்தவர்கள் அல்லது பயனை எதிர்பார்ப்பவர்கள் ஆட்சியார்களுக்கு தவறான விளம்பரமாக இருக்கின்றார்கள் 

ஆட்சியாளர்கள் சமுதாயத்தின் நலனுக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலைமை என்றாலும் துறை சார்ந்த  புலமையால்  செயலாளர்கள்  இல்லை என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறார்கள் . ஒவ்வொரு துறைக்கும்  அனுபவமிக்க அறிஞர்களால் ஆனகுழுவை நியமித்து  பணிநியமனம் , துறைசார்ந்த வளர்ச்சி , பிரச்சனைகளின் தீர்வு போன்றவற்றை முடிவு செய்யவேண்டும் .இந்தக்குழு ஆட்சியார்களின் கைப்பாவையாகச் செயல்படாதிருக்க  குழு உறுப்பினர்கள் கட்சி சார்பில்லாதவர்காளாக இருக்கவேண்டும் .மேலும் தேர்வு விதிமுறைகள்  வெளிப்படையாக  இருக்கவேண்டும் . 

காவல் துறையும் ,நீதித்துறையும் மட்டுமே சமுதாயத்திற்கு சட்ட றீதியான பாதுகாப்பைத் தரமுடியும்  . இவர்கள் ஆட்சியாளர்களின் தவறான எண்ணங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது  எப்போதும் ஆட்சியர்களின் எண்ணங்களையே எதிரொலிப்பதால் அரசியல் குற்றங்களின் உண்மைத்தன்மையை அரிதிந்த்துக்கொள்ளமுடியாமல் போகின்றது திருத்தப்படாத குற்றங்களால் குற்றங்கள் குறைவதற்கு வழியில்லை . மாறாக அவை அடுத்த கட்டத்தை நோக்கி  பரிணாம வளர்ச்சி பெறும். அதன் பின்விளைவுகளை நினைத்துப் பார்க்கவே மனம் அச்சம் கொள்கின்றது                

Thursday, January 16, 2025

 சிறுவன் பைக் ஓட்டி வீதியில் விபத்து ஏற்பட்டால் அப்பாவிற்குத் தண்டனை

மாணவன் தவறு செய்து பள்ளியில் விபத்து ஏற்பட்டால் தலைமை ஆசிரியருக்குத் தண்டனை . போலீஸ் காரர் தவறு செய்தால் இன்ஸ்பெக்டருக்குத் தண்டனை . அமைச்சர் ஊழல் புரிந்தால் தலைவருக்குத் தண்டனை . காலம் மாறிவிட்டது . சட்டங்களும் மாற்றப்பட்டுவிட்ட ன. எல்லாம் பொறுப்புத் துறப்பு. சரியான நிர்வகிக்க நேர்மையான ஆளுமைமிக்க தலைமை இல்லை.

Tuesday, January 14, 2025

 இந்தியாவிலுள்ள பொருளாதார நிபுணர்கள் கற்ற கல்வியை அரசியல் வாதிகளிடம் விற்றுவிடுகின்றார்கள் . மக்களிடம் பணப் புழக்கம் அதிகமாகும் போது உற்பத்தியும் நாட்டுப் பொருளாதாரமும் தானாகவே வளம் பெறும். அரசாங்கத்தில் சேர்ந்தால் அது திட்டத்தில் கால் பங்கு காணாமல் போவது முக்கால் பங்காக இருக்கின்றது . காணாமல் போவ்தற்காகவே இங்கே திட்டங்கள் போடப்படுகின்றன. அரசாங்கம் எவ்வழி மக்கள் அவ்வழி . ஒரு சமுதாயத்தை பால்படுத்திவிட்டு அதை நேர் செய்வதென்பது எளிதில் இயலாதது. அந்தவகையில் நாம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம். .அரசியல்வாதி ஆட்சியைப் கைப்பற்ற ஆட்சியாளர்களை குறைகூறுகின்றான் . ஆட்சியார்களோ ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இல்லாத தையெல்லாம் சொல்கின்றான் .இருவருமே மக்களை மறந்துவிட்டார்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் . மக்கள் சேவை செய்ய யாராவது சண்டை போடுவார்களா ? எல்லாம் பணம் படுத்தும் பாடு .

Like
Comment
Share

Friday, January 3, 2025

 நாட்டில் நீதியை நிலைநாட்ட விரும்பினால் அது நீதித்துறை மற்றும் காவல் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் மட்டுமே முடியும். இவ்விரு துறைகளும் நேர்மையான அரசாங்கத்திற்கு உட்பட்டு செயல்படுவது நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் நல்லது . ஆனால் ஆட்சியாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்களாக இருக்கும் போது இந்த துறைகள் நேர்மையாகச் செயல்படும் வாய்ப்பு ஊக்குவிக்கப்படுகின்றது .அதிகாரிகள் விலைக்கு வாங்கப்பட்டுவிடுகின்றார்கள் .இல்லை இடமாற்றம் , பணி உயர்வுகுத் தடை ,உயிருக்கு ஆபத்து ,போன்ற இடையூறுகள் .  ஆட்சியார்களின் பிரதிநிதிகளுடன்  நேர்மையான மேன்மக்களும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு இவ்விரு துறைகளையும் சேவை மனப்பான்மையுடன் நிர்வகிக்கவேண்டும் . அப்பொழுதுதான்  குற்றப்பின்னணி உடைய அரசியல்வாதிகளும் அனைவருக்கும்  பொது வான நீதியின் வளையத்திற்குள் வருவார்கள் . பொதுமக்கள் சமுதாயத்திற்கு வேண்டிய சட்டங்களை கேட்டுத்தான் பெறவேண்டியிருக்கின்றது .