மக்களாகிய நாம் அறியாமையால் மக்களாட்சியில் செய்யும் மிகப் பெரிய தவறு சமுதாயத்தின் பாதுகாப்பிற்காகவும் நலனுக்காகவும் மக்களால் கண்காணிப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பும் , அதற்காக மக்களால் கொடுக்கப்பட்டதும் அவர்களாக எடுத்துக்கொண்ட அளவில்லாத அதிகாரமும், போலியான வார்த்தைகளை நம்பி மக்கள் அளவின்றி கொடுக்கும் செல்வாக்கும் ஒன்றிணைந்து அவர்களை மறைவொழுக்க நாயகர்களாக மாற்றி இருக்கின்றது . பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைக் கண்டு அச்சப்பட்டு மவுனிகளாக இருக்கின்றார்கள் . பயன் துய்த்தவர்கள் அல்லது பயனை எதிர்பார்ப்பவர்கள் ஆட்சியார்களுக்கு தவறான விளம்பரமாக இருக்கின்றார்கள்
ஆட்சியாளர்கள் சமுதாயத்தின் நலனுக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலைமை என்றாலும் துறை சார்ந்த புலமையால் செயலாளர்கள் இல்லை என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறார்கள் . ஒவ்வொரு துறைக்கும் அனுபவமிக்க அறிஞர்களால் ஆனகுழுவை நியமித்து பணிநியமனம் , துறைசார்ந்த வளர்ச்சி , பிரச்சனைகளின் தீர்வு போன்றவற்றை முடிவு செய்யவேண்டும் .இந்தக்குழு ஆட்சியார்களின் கைப்பாவையாகச் செயல்படாதிருக்க குழு உறுப்பினர்கள் கட்சி சார்பில்லாதவர்காளாக இருக்கவேண்டும் .மேலும் தேர்வு விதிமுறைகள் வெளிப்படையாக இருக்கவேண்டும் .
காவல் துறையும் ,நீதித்துறையும் மட்டுமே சமுதாயத்திற்கு சட்ட றீதியான பாதுகாப்பைத் தரமுடியும் . இவர்கள் ஆட்சியாளர்களின் தவறான எண்ணங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது எப்போதும் ஆட்சியர்களின் எண்ணங்களையே எதிரொலிப்பதால் அரசியல் குற்றங்களின் உண்மைத்தன்மையை அரிதிந்த்துக்கொள்ளமுடியாமல் போகின்றது திருத்தப்படாத குற்றங்களால் குற்றங்கள் குறைவதற்கு வழியில்லை . மாறாக அவை அடுத்த கட்டத்தை நோக்கி பரிணாம வளர்ச்சி பெறும். அதன் பின்விளைவுகளை நினைத்துப் பார்க்கவே மனம் அச்சம் கொள்கின்றது
No comments:
Post a Comment