உங்கள் செய்திகள் கேட்போருக்கு ஏதாவதொரு வகையில் பயன் தரத் தக்கதாக இருக்கவேண்டும். அப்போது தான் உங்கள் பேச்சு கவனிக்கப்படும்.
Value added speech மிக முக்கியம். அதைப் பழகிக் கொள்ளாவிட்டால் சராசரி மனிதனைப் போல நாமும் வாழ்ந்து விட்டுப் போக நேரிடும்.பொதுவாக பெரும்பாலானோரின் பேச்சு 5 % வீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மீதி 95 % பயனற்றவையாகவே இருக்கும். அதனால் யாருக்கும் யாதொரு பயனும் விளைவதில்லை. இந்த 95 % ல் 2௦ சதவீதம் தவிர்க்க இயலாதது. மீதி 80 சதவீதம் தேவையில்லாதது. இந்த 80 % குறைத்துக் கொண்டால் பேச்சு பயனுள்ளதாக,எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருக்கும். எவ்வளவுக் கெவ்வளவு நம் சொல்லும்,செயலும் பயனுள்ளதாக இருக்கின்றதோ அவ்வளவிற்கு அவ்வளவு நம்முடைய மதிப்பு சமுதாயத்தில் அதிகமாக இருக்கும். i
U என்றால் utility ,usefulness
வித்தியாசமாகச் சிந்திப்பதில்லை தவறில்லை என்றாலும் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களினால் பயனில்லை. நீங்கள் வித்தியாசமாச் சிந்தித்த்தால் அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறையையும் தெரிந்திருக்க வேண்டும். அதுவும் பொருளாதாரச் சிக்கனமுள்ளதாக இருக்கவேண்டும். பழையன வற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கவும்,புதிய அனுகூலங்களைத் தருமாறும் இருக்கவேண்டும்.
S என்றால் Unexpected
இதற்கு யாருக்கும் தெரியாத புதிய செய்திகளைச் சொல்லவேண்டும் என்று அர்த்தமில்லை. பழைய செய்தியையே புதிய தோற்றத்தில், கோணத்தில்,நச்சுன்னு மனதில் பதியுமாறு சொல்ல வேண்டும். பட்டிமன்றத்தில் பேசுபவர்களைக் கவனித்தால் இந்த அணுகு முறை உங்களுக்கு கைவசப்படும்.புதுமைப்படுத்தி செய்திகளைச் சொல்லும் போது கேட்போரை வெகு எளிதில்,இயல்பாக எவ்விதக் கூடுதல் முயற்சியுமின்றி கவரமுடிகின்றது. எதிர்பாராமல் கிடைக்கின்ற நன்மை அதிக மகிழ்ச்சியைத் தரும். அது போல எதிர்பாராத செய்திகளும் மனதில் இனிய தாக்கத்தை ஏற்படுத்தும். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் கேட்போருக்கு ஆர்வம் வருவதில்லை.
பெரும்பாலான இளைஞர்கள் சமூக,சரித்திர நாவல்களை விட துப்பறியும் நாவல்களை அதிகம் படிக்க விரும்புகின்றார்கள். இதற்குக் காரணம் அதில் தான் எதிர்பாராத திருப்பங்கள்,போராட்டங்கள் எல்லாம் இருக்கும். நெடுந்தொடர் நாடங்களில். ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பாராத திருப்பத்துடன்(Suspense) முடிப்பார்கள். எனென்றால் அப்போதுதான் அந்தத் தொடரை மக்கள் மறுநாளும் பார்க்க வேண்டும் என்று ஆர்வப்படுவார்கள்
C
(1) என்றால் Clear and concrete
சொல்லப்படும் விஷயங்கள் தெளிவாகவும்,புரியும்படியாகவும் இருக்கவேண்டும். பிறரால் புரிந்து கொள்ள முடிந்தால் மட்டுமே அதனால் பயன் இருக்கும். பயன் இருந்தால் மட்டுமே உங்கள் பேச்சில் கவனம் இருக்கும். சொல்வதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள். அப்படிச் சொல்ல வேண்டுமானால் சொல்லவேண்டிய கருத்துக்களில் தெளிவும், புலமையும் இருக்கவேண்டும். அதுவே உங்கள் பேச்சுக்கு உயிர் மூச்சாகின்றது. குழப்பம் இருக்குமானால், இரு வேறுபட்ட சிந்தனைகள் பேச்சிலும் வெளிப்பட்டு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். எனவே சட்டியை முதலில் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். .சட்டி என்பது இங்கே உங்கள் மூளை.உங்கள் விருப்பத் துறை சார்ந்த விஷயங்களை உங்கள் மூளையில் சேமித்து வையுங்கள். தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் போது இவை இன்றில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் பயன்படும். இதற்கு நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். பணியில் சேர்ந்த பின்பும் கூட இது தொடரவேண்டும். அப்போது தான் நீங்கள் சமுதாயத்தின் தேவையை உடனறிந்து அதற்கு ஏற்ப உங்கள் பணிகளைச் செய்யமுடியும்.
C (2) என்றால் credible
C என்றால் confidence (நம்பிக்கை), clarity
.compitable (முரண்பாடின்றி ஏற்றுக்கொள்ளுதல்)
என்றாலும் நம்பகத் தன்மை முக்கியமானது.
நீங்கள் சொல்லும் எந்தக் கருத்துக்கும் ஒரு நம்பகத் தன்மை இருக்கவேண்டும். .இதற்கு இயல்வாழ்க்கைச் சான்றுகளை எடுத்துக் கூறலாம். பொன் மொழிகள், பழமொழிகள்,இலக்கிய வரிகள். அறிஞர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றை எடுத்தாளலாம். நம்பகத் தன்மைக்காக புள்ளி விவரங்களைக் கூறலாம் என்றாலும் அது கேட்போரின் தகுதியைப் பொருத்தது. . பொது மக்கள் என்றால் புள்ளி விவரங்கள் அதிகம் தேவையில்லை. தொழிநுட்ப வல்லுநர்கள் என்றால் தேவையான புள்ளி விவரங்களும் இருக்கலாம்.
பொதுவாக உங்கள் கருத்தே மற்றவர்களின் கருத்தாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துகள் மாறுபடும் போது விவாதம் ஏற்படலாம். அப்போது உங்கள் கருத்தை நியாயப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அல்லது அவர்கள் கருத்தை ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்படலாம்.
தவறுகள் இருப்பின் அதை ஏற்றுக் கொள்ளுவதே மனிதப் பண்பு.
E என்றால் explicit,extraordinary ,enchanting என்று குறிப்பிட்டாலும் emotional
முக்கியமானது.
நம்முடைய பேச்சு மற்றவர்களின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அது உயர்வாகக் கருதப்படும். எந்த சினிமா நம் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றதோ அது நீண்ட நாட்களுக்கு நம்
மனத்தை விட்டு அகழுவதில்லை.
நம்முடைய உணர்ச்சி மற்றவர்களின் உணர்ச்சியோடு ஒத்ததிர்ந்து போக குரலில் ஏற்றத் தாழ்வுகள் ,இடைவெளி இருக்க வேண்டும்.
S என்றால் Story
எந்தக் கருத்தைக் கூறினாலும் அதைக் கேட்போர் உள்வாங்கிக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழி அக்கருத்தை வழியுறுத்தி ஒரு கதையைப் புனைந்து கூறுவதுதான். உண்மைச் சம்பவங்கள் ஏற்படுத்தும் தாக்கம் இன்னும் அதிகமாக அழுத்தமாக இருக்கும்.
S என்றால் Sense of humour
நகைச்சுவையை விரும்பாதவர்கள் யாரும்
இருக்கமுடியாது
கதையை நகைச்சுவை உணர்வோடு கூறினால் அது நல்ல பலனை அளிக்கும். பட்டிமன்றங்களில் பேச்சாளர்கள் நகைச் சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். t
No comments:
Post a Comment