எழுதாத கடிதம்
ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டு கொஞ்சம் மன நிம்மதியோடு வாழமுடியுமா என்று யோசித்து ஆட்சியை வேறொருவரிடம் ஒப்படைத்தார்கள். நீண்ட காலத்திற்குப் பின் பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா ஆட்சியைப் பெற்றது .நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றார். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் போலத் தெரிகின்றார். நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கொஞ்சம் அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. (
யார் யார் கண்பட்டதோ .முழுமையாகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்குமுன் மனித வள மேம்பாட்டுத் துறை காபினெட் அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கலவித் தகுதி கேள்விக் குறியதாகிப் போனது. கோபிநாத் முன்டே சாலை விபத்தில் இறந்து போனார் .ஸ்மிருதி இராணி யின் கல்வித் தகுதியை வெளிப்படுத்திய டெல்லி பல்கலைக் கழக
அலுவலர்கள் நான்கு பேரைத் தற்காலியமாகப் பணி நீக்கம் செய்தார்ர்கள். இது மிகப் பெரும் தவறு. பொது வாழ்வில் தவறு செய்யும் யாரையும் குடி மக்கள் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்ட உரிமையுண்டு. இந்த உரிமையை எளியோராய் இருந்தால் அச்சப்படுத்தியும் வலியோராய் இருந்தால் சரிக்கட்டியும்
தவறுகள் வெளிப்படாதவாறு செய்து விடுகின்றார்கள். இதனால் தவறுகள் திருத்தப்படாமல் வளர்வதற்கும் ,திருத்துவதற்கு யாருமில்லாமலும் போய்விடுவதால் பிற்காலத்தில் இதன் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்.ஆதாரத்துடன் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதை தடுப்பதால் மக்களின் மன நிலை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்மையால் அச்சப்பட்டு அச்சப்பட்டு அவர்கள் தவறுகளை எதிர்க்கும் மனப்பான்மையையே விட்டு விடுகின்றார்கள். அண்மையில் மும்பையில் நகரப் பேருந்தின் ஒரு பெண் ஓட்டுநருக்கும் ஒரு பயணிக்கும் சச்சரவு வர அப் பயணி பெண் ஓட்டுநரை அடித்து நொறுக்கிவிட்டார். அப்போது கூடியிருந்த கோடி மக்களில் எவரும் எதிர்க்கவும் இல்லை தடுக்கவும் இல்லை. சினிமாக் காட்சியை ரசிப்பது போல கண்டு களித்தனர். இதுதான் இன்றைக்கு உண்மை நிலை. இதில் மாற்றம் வராமல் எந்த மாற்றம் வந்தாலும் பயனில்லை.
No comments:
Post a Comment