எழுதாத கடிதம்
தவறு செய்பவனைக் காட்டிலும் திரும்பத் திரும்ப அதே தவறுகளைச் செய்பவன் மோசமானவன். அவன் திருந்துவதை விட தவறு செய்வதே நல்லது என்று நினைப்பதால் திருந்துவதற்கு விரும்புவதில்லை. செய்யும் தவறுகளை மறைவாக இன்னும் நுட்பமாகச் செய்யும் கலைகளைக் கற்றுக்கொள்கின்றான்.தவறு செய்பவன் பொருளாதாரத்தால் முன்னேறலாம் ஆனால் சமுதாயம் பின்னேறுகின்றது. அதனால் அவனும் காலங்கடந்து பின்னேற்றத்தையே சந்திக்கின்றான்.
தவறு செய்பவனைக் காட்டிலும் செய்யவேண்டிய தன் கடமைகளைச் செய்யாமல் இருப்பவனே
பெருந் தவறு செய்தவனாகின்றான். பெரும்பாலான அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் இந்த வட்டத்திற்குள் வந்து விடுகின்றார்கள். தவறு செய்பவர்களால் சமுதாயத்தில் தவறுகள் தூண்டப்பட்டு அது பெருக்கமடைகின்றது. அந்த வகையில் தவறு செய்பவர்களைக் காட்டிலும் தன் கடமைகளைச் செய்யாமல்
தவறு செய்பவர்களே
கூடுதல் தவறுசெய்தவர்க ளாகின்றார்கள். தவறு செய்தவன் தண்டிக்கப்படவும் கூடுதல் தவறு செய்பவன் தண்டிக்கப்படாமல் இருப்பதும் இந்நாட்டில் சாதாரணம் .அது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள இப்போது யாருக்கும் அக்கறை இல்லை. அகக் கட்டமைப்பு ,தனி நபர் வருமானம் மட்டுமே ஒரு வளமான மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதில்லை. மக்களின் மனப்பாங்கு மாறுமாறு மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும் அக்காலம் இந்தியாவில் இனி வருமா?
No comments:
Post a Comment