·
கடுமையான
கோடையில் கூட ஒட்டகம் நீரே குடிக்காமல் ஒரு வாரம் வரை தாக்குப் பிடிக்கும் . நீர்
நிலையைக் கண்டு விட்டால் , அது உப்பு நீராக இருந்தாலும் கூட 50 - 60 லிட்டர் வரை குடிக்கும்
·
கங்காரு எலி என்ற
பாலைவன வாழ் விலங்கு நீரே குடிக்காது . தனக்குத் தேவையான நீரை சாப்பிடும் உணவுப்
பொருட்களிலிருந்தே பெறுகின்றது .
·
துருவக்கரடி,வால்ரஸ் போன்ற விலங்குகள் வட துருவமான ஆர்டிக் பகுதியில் மட்டும் வாழ்கின்றன பென்குவின் மற்றும் சிறு வேங்கை போன்ற விலங்குகள் தென்
துருவமான அண்டார்டிக் பகுதியில் மட்டும் வாழ்கின்றன. .ஆர்டிக் பகுதியில் மிதக்கும்
சிறிய பனி மலைகள் உள்ளன . இவை நிலையில்லாது இடம் பெயர்ந்து வருகின்றன. நீரிலும்
நிலத்திலும் மாறி மாறி வாழ்வதற்கு துருவக் கரடிகளுக்கும்,வால்ரஸ்சுக்கும் அனுகூலமாக இருக்கின்றது
அண்டார்டிக் ஓரளவு பெரிய பனிப் பிரதேசமாகும் .
·
பழங்காலத்தில்
புலிகளுக்கு வால்ரஸ் போல இரண்டு நீளமான பற்கள் இருந்ததாம் . இந்த இனம் 11௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே முற்றும் அழிந்து
காணாமற் போய்விட்டதாம்.
·
வெட்டுக்கிளி
பந்து போல மீள்திற மிக்க ஒரு வகையான பொருளின் உதவியால் தாவிச்செல்கின்றது .
காற்றில் சுண்டியடித்து 8 மீட்டர் தொலைவு வரை கடந்து செல்லும் வல்லமை கொண்டது.
·
செந்நிறக்
கங்காரு மணிக்கு 65 கிலோமீட்டர் தொலைவு ஓடக்கூடியது
·
பெரும்பாலும்
கழுகு, முயல் ,எலி போன்ற
பாலூட்டிகளையே இரையாக்கிக் கொள்ளும் . ஆனால் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு வகையான கழுகு
நீர் நிலைகளிலுள்ள மீன்களை லாவகமாகப் பிடித்து உண்ணும்.
·
கட்டில் பிஷ் (cuttlefish) என்ற ஒரு வகை கடல் வாழ் உயிரினம் மீன் போல
துடுப்புகள் இல்லாது இராக்கெட் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கிச் செல்கின்றது. பீச்சாங்குழல் போல நீரை வெளியேற்றி முன்னுக்கு
இடம் பெயர்ந்து செல்கின்றது.
No comments:
Post a Comment