டால்பின்கள்
குரங்குச் சேட்டை போல விளையாட்டுத் தனமான செயல்களுக்குப் பேர்போன
டால்பின்கள் மனிதர்களைப் போல அறிவுக்கு கூர்மை கொண்டவை. அறிவுக்கு கூர்மை
கொண்ட உயிரினங்களுள் மனிதனுக்கு அடுத்து
வருவது இந்த டால்பின்களே. பாலூட்டியான டால்பின்கள் பிற
கடல் வாழ் உயிரினங்களுடனும் மனிதர்களுடனும் நட்புணர்வுடன் பழக்க கூடியவை . கடலுக்குள் வாழும் பிற உயிரினங்களுடன்
விளையாட்டுக் காட்டவும் வேடிக்கை காட்டவும் செய்யும். டால்பின் அடிபட்ட
டால்பின்களுக்கு உதவி செய்கின்றது.
ஏறக்குறைய 40
வகையான டால்பின்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர் இனமறிந்துள்ளனர். டால்பின்கள்
பொதுவான மாமிச உண்ணி.இவைகளுக்கு கடல் மீள்கள் மிகவும் பிடித்த உணவு. .டால்பின்கள்
உணவை மென்று சாப்பிடுவதில்லை. உணவை அப்படியே விழுங்கி விடுகின்றன. அவை தங்கள்
பற்களை இரையைக் கவ்விப் பிடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன . டால்பினுக்கு
இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று உணவு சேமிப்புக்கும் மற்றொன்று செரிமானத்திற்கும்
பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது. போதிய உணவு
ஓரிடத்தில் கிடைக்கா விட்டால் டால்பின்கள் வேறிடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும்
டால்பின்கள் உண்மையில் திமிங்கல
வகைச் சார்ந்தது. Orcas மற்றும் Pilot திமிங்கிலங்கள்
அடங்கிய குடும்பத்தில் ஒரு பிரிவு என்று பரிணாமவியல் ஆராச்சியாளர்கள்
கூறுகின்றார்கள். 'கில்லர் வேல்ஸ் டால்பின் இனத்தில் மிகப்
பெரியதாகும் புட்டி மூக்கு டால்பின்கள் மிகவும் பிரபலமானவை
பொதுவாக 3 – 8 கிமீ / மணி என்ற
வேகத்தில் நீந்துகின்றது. சில 20 கிமீ / மணி என்ற
வேகத்தில் கூட நீத்தும். டால்பின்கள் 1000 அடிவரை கடலில்
மூழ்கி நீந்தக்கூடியவை. இதன் சராசரி
வாழ்நாள் 17 ஆண்டுகள்
என்றாலும் சில இனம் 50 ஆண்டுகள் வரை
வாழ்கின்றன. பல கடலில் வாழ்ந்தாலும்
அவற்றுள் சில நன்னீரிலும் வாழக் கூடியவை . சிறிய டால்பின் 3 - 4 அடி நீளமுள்ளது.
பெரியது 30 அடி வரை இருக்கும். டால்பின் குட்டிகள் தன்
தாயுடன் 3 - 8 ஆண்டுகள்
கூடவே இருக்கும் அதன் பிறகே பிரிந்து வாழும்
டால்பின்கள்
எழுப்பும் ஒலி அவற்றின் தனித்தன்மையாக இருப்பதால் டால்பின் சமிக்கை ஒலிமூலம் பிற டால்பின்களை
இனமறிந்து கொள்கின்றன
அவை தூங்கும் போது ஒரு பாதி மூளை விழிப்புடன்
இருக்கின்றது அதனால் அவை வேட்டை விலங்குகளுக்கு இரையாகி விடாமல்
பாதுகாப்புடன் இருக்க முடிகின்றது. தூங்கும் போது சுவாசிக்கவும் முடிகின்றது.
டால்பின்களுக்கு நேர்த்தியான தோல் உள்ளது. கடினமான பரப்பை மெதுவாகத் தொட்டால் கூட அதற்கு
காயம் படலாம். என்றாலும் அதற்கு ஏற்படும் இந்தக் காயமும் வெகு சீக்கிரத்தில்
குணமாகி விடுகின்றது.
No comments:
Post a Comment