சிறந்த மாணவனாக வளர்வது எப்படி?
ஒரு குழந்தை பிறந்தவுடன் தாயின் உதவியுடனே எதையும் கற்றுக்கொள்ளத் தொடங்குகின்றது . தானாகக் கற்றுக்கொள்ள போதுமான அறிவு வளர்ச்சி இல்லாததால் முதலில் தாய் பின்னர் அதன் நெருங்கிய உறவினர்கள் மூலம் நல்லது கெட்டது என எல்லாவற்றையும் ஒரு வேறுபாடு இன்றி கற்றுக்கொண்டு விடுகின்றது .குழந்தை வளர்ப்பில் தாய் காட்டும் அக்கறையும், தாயன்பும் தாயின் மீது ஒரு குழந்தை அசைக்க முடியாத நம்பிக்கையை இயல்பாக வளர்த்துக் கொண்டு விடுகின்றது. பிறர் செய்வதைப் பார்த்தும் , தாய் சொல்லிக் கொடுப்பதையும் காரணம் கேட்காமல் கற்றுக்கொள்ளும் எந்தப் பழக்கத்தையும் காரணம் தெரியாமல் விட்டுவிடுவதில்லை . முழுமையாகப் புரிந்து கொள்வதற்குப் போதுமான அறிவு வளர்ச்சி குழந்தைகளிடம் இல்லாததால் பெற்றோர்களின் வெறும் அதிகாரமும் அறிவுரையும் பயன் தருவதில்லை. அறிவு வளர்ச்சியால் புரிதல் ஏற்படும் வரை , பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீயன விலக்கி நல்லனவற்றை மட்டும் தெரிந்து கொண்டு பழகுமாறு வழிகாட்ட வேண்டும். இதற்கு ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தை அழுது அடம் பிடிக்கிறான் என்றும் , வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்கின்றான் என்றும் இன்றைக்கு பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் கைபேசியை கொடுத்து இஷ்டம் போல விளையாட அனுமதிக்கிறார்கள் . தொலைக் காட்சியை மணிக்கணக்கில் பார்க்க விட்டு விடுகின்றார்கள். நல்லதை கற்றுக்கொள்வதற்கு முன்பாகவே தீயனவற்றை கற்றுக் கொண்டு விடுவதால் பிற்பாடு நமக்கு வேண்டும் போது குழந்தையை நல்வழிப் படுத்துவது கடினமாகி விடுகின்றது . குழந்தை சுய அறிவால் சுயமாக முடிவெடுக்கும் நிலைவரை . நல்லன வற்றைமட்டுமே தெரிந்து கொள்ளுமாறு கற்றுக்கொடுக்க வேண்டும். நல்லவற்றை கற்றுக் கொண்டு நடக்கும் போது சமுதாயத்தில் சுய மதிப்பு மிகுந்து வருவதை பெற்றோர்கள் குழந்தைக்கு கொடுக்கும் பாராட்டுக்களால் உணர்த்தவேண்டும் .ஒரு குழந்தையின் உறுதியான அடித்தளத்துடன் தொடரும் அறிவு வளர்ச்சியின் புரிதல் காரணமாக வளரும் போது தீயன தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் இயல்பாகவே இருப்பதில்லை. இதனால் குழந்தை கற்றுக்கொண்டு கைவிடாத பழக்கங்களை விட்டுவிடுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக பெற்றோர்கள் குழந்தையின் ஆக்கப் பூர்வமான வளர்ச்சியில் அக்கறை எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது

No comments:
Post a Comment