சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
பிறரை மதிப்பிடும் ஆர்வத்தில் பெரும்பாலானோர் சுய மதிப்பீடு செய்வதில் மெத்தனமாக இருந்து விடுகின்றார்கள் .பிறருடைய தனித் திறமைகளை கற்றுக்கொண்டு தேர்ச்சி பெறுவதற்காக இல்லாது , அவருடைய வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம் கெடுதல் செய்யலாம் என்பதற்காக புரிதலின்றி அவர்களை மதிப்பீடு செய்கின்றார்கள்.பலருக்கு சுய மதிப்பீடு செய்யத்தெரிவதில்லை . அது இருக்கும் பயன்தரு திறமை மற்றும் வாய்ப்புக்களின் பயனுறுதிறனை கணக்கிட்டு அறிவதாகும். சுய மதிப்பீடு செய்யத் தெரிந்தவர்கள் , இலக்குக்கு ஏற்ப திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள், அல்லது திறமைக்கு ஏற்ற இலக்குகளில் மட்டும் ஈடுபடுவார்கள்.சுய மதிப்பீடு ஒருவருடைய இயலாமையை அவரே ஏற்றுக்கொள்ளுமாறு உணர்த்திவிடுகின்றது . சரியாகச் சுய மதிப்பீடு செய்யாதவர்களே தங்கள் தகுதிக்கு மீறிய செயல்களை செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்
தெரிந்திருப்பதெல்லாம் திறமைகள் இல்லை. எந்த சூழ்நிலையும் பயன் பெறக்கூடிய திறமைகளே திறமைகள்.இனிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவருக்கும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. எந்த வொரு திறமையையும் முழுமையாக ஒரே முயற்சியில் அடைந்து விட முடியாது. ஒவொருநாளும் தொடர்ந்து பயற்சியெடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் தொடர் முயற்சியில் தோற்றுப்போய்விடுகின்றார்கள் இலக்கு முடிவு செய்யப்படாததால் அல்லது அடிக்கடி நிறம் மாறும் இலக்குகளால் எவை தேவையான திறமைகள் , எவை தேவையில்லாத திறமைகள் என்பது தெரியாமல் பலர் பல திறமைகளை வளர்த்துக் கொள்கின்றார்கள். சிலர் தேவையான திறமைகளை விட்டுவிட்டு தவறான திறமைகளை த் தேர்வு செய்து வளர்த்துக்கொண்டு விடுகின்றார்கள் சில திறமைகள் வாழ்க்கையில் பயன்படுத்தாமலே வீணாகி விடுவதும் உண்டு பெரும்பாலும் இதைக் காலங் கடந்தே அறிந்து கொள்வதால் இடையிலேயே திருத்திக் கொள்ள முடிவதில்லை திடமான முடிவுடன் கூடிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ள முடியாதவர்களே தெளிவின்றி பல திறமைகளையும் கற்றுக் கொள்கின்றார்கள் .இதனால் தேவையான திறமைகளைப் போதிய அளவு கற்றுக் கொள்ள முடியாமல் போவதுடன், தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள போதிய அவகாசம் கிடைக்காமல் போகின்றது , பொதுவான அடிப்படை திறமைகள் , இலக்கைத் தீர்மானித்த பின்பு , அதை அடைவதற்கான திறமைகள் இவற்றைத் தீர்க்கமாக முடிவு செய்து விட்டால் வீண் முயற்சிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்

No comments:
Post a Comment