சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
இலக்கு இதுதான் என்று முடிவுசெய்து அதை நோக்கிப் பயணிக்கத் தெரியாத நிலையில் ஒருவர் பல இலக்குகளை மனதிற் கொண்டு பல்துறை சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு கொள்வார் .ஒன்றாவது கைகொடுக்காதா என்ற நம்பிக்கை அவரது திறமையில் கொண்டுள்ள அவநம்பிக்கையையே சுட்டிக் காட்டுகின்றது ஏதாவது ஒரு துறையில் உயர் நிலையை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை திறமையை விட அதிர்ஷ்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே .திறமை என்பது சுய முயற்சி, நூறு சதவீதம் பலன் தரும் , அதிருஷ்டம் என்பது நல்வாய்ப்பு இதன் பலன் சுழி முதல் நூறு சதவீதத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . இருக்கும் திறமையைப் புறக்கணித்துவிட்டு உறுதியில்லாத நல்வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டே இருப்பவர்கள் புதிய முயற்சிகளைப் பற்றி சிந்திப்பதேயில்லை. அதனால் எட்டக்கூடிய வெற்றிவாய்ப்பை நழுவ விட்டுவிடுகிறார்கள் .ஒரே சமயத்தில் பல செயல்களில் காட்டும் ஆர்வம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட துறையில் கவனக் குறைவை ஏற்படுத்தக் காரணாமாகிவிடுகின்றது இது திறமையில் உள்ள நம்பிக்கையை அதிர்ஷ்டத்தின் பக்கம் திருப்பிவிடுகின்றது
உடல் நலக் குறைவு முயற்சியைத் தொடர விடாமல் செய்து விடுகின்றது .உடல் நலம் என்பது உடற் பயிற்சியை மட்டும் சார்ந்ததில்லை உண்ணும் உணவையும் பொறுத்தது . அதிக உணவை விட சத்தான உணவு உடல் நலத்தை சீராக வைத்திருக்க உதவும் . எனவே முழுமையான வெற்றிக்கு அடிப்படையான உடல் நலத்தை உடற் பயிற்சி மற்றும் சரிசமவிகித் உணவு மூலம் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் .
இலக்கை முறையாகத் தீர்மானிக்கத் தெரியாத சிறுவர்கள் , அவர்களிடம் தன் விருப்ப இலக்கைத் திணிக்க முயலும் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் தூண்டுதலால் செய்யும் முயற்சியை அடிக்கடி மாற்றிக் கொள்வதாலும், சுய விருப்பமின்றி ஈடுபாடு காட்டுவதாலும் முயற்சிகளின் பயனை முழுமையாக ப் பெறுவதில்லை

No comments:
Post a Comment