Saturday, June 27, 2026

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு ஆயிரக்கணக்கான திட்டங்களை ச் சொல்கின்றார்கள் . அவை பெரும்பாலும் நடைமுறைக்கு வருவதில்லை. வந்தாலும் முழுமை பெறுவதில்லை. செலவுக்கணக்கை சமர்ப்பிக்க மட்டுமே அவை உதவுகின்றன. இது வரம்பின்றி வளரும்போது கூடுதல் வரிவிதிப்பு சட்டமாகின்றது .ஆட்சியை இழந்தபிறகு மௌனமாகி விடுகின்றார்கள். மக்களைவிட வெற்றிபெற்ற எதிர்க்கட்சியினரை எதிர்ப்பதே அவர்கள் முக்கிய வேலையாகிவிடுகின்றது. ஆளுங் கட்சியினரும் எதிர்கட்சியினரும் மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்ற சுய விருப்பத்துடன் அரசியலுக்கு வந்தவர்கள் . இதைத் தனித்தனி யாகச் செய்தாலென்ன சேர்ந்து செய்தாலென்ன . சுய லாபம் கருதும்போது இது விடுபட்டுப்போகின்றது . உயிரினும் மேலான மக்களாவது மண்ணாங்கட்டியாவது
நீதியைப் பாதுகாப்பது அனைவரின் கடமை என்றாலும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு மக்களுடையதைக் காட்டிலும் அதிகம் என்றே நான் சொல்வேன், நீதிபதிகளுக்கு அது கட்டளை.சமுதாயத்தின் நலன் காக்க தீயவைகளை அழிக்கவேண்டிய பொறுப்பு அவர்களுடையது . மக்கள் தீய செயல்களை ச் செய்யாமல் இருக்கவேண்டும் .இழப்பு ஏற்பட்டால் தீயவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். மக்கள் அப்படிச் செயல்படும் வாய்ப்பு குறைந்துவருகின்றது. அதற்குக் காரணம் அவர்கள் செல்வாக்கு மிக்க தீயவர்களால் அச்சுறுத்தப்படுகின்றார்கள்/ தீயவர்களின் கூட்டணி அவர்களுக்கு எதிரான எல்லாச் செயல்களையும் முறியடித்து விடுகின்றார்கள் . அங்கு நீதியின் விலை நேர்மியான ஒரு தனிநபரின் ஆயுட்கால சமபாதியத்தை விட அதிகமாக இருக்கின்றது.இழப்பை ஏற்கனவே ஏற்பட்ட இழப்போடு நிறுத்திக்கொள்வதேஇனிவரும் எல்லையில்லா இழப்பை தடுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மக்களை ஒரு குற்றத்திற்கு எதிராக புகார் அளிக்க முடியாதிருக்கிறது

Monday, June 15, 2026

நேர்மையானவன் தான் குற்றவாளியைத் தண்டிக்கும் தகுதியைக் கொண்டிருக்கின்றான் . குற்றவாளிகளே குற்றவாளிகளைத் தண்டிக்கவும் , மன்னித்துவிட்டு குற்றம் புரிய கூட்டாளியாக்கிக்கொள்வதும் இங்கு வெகு இயல்பாக அனுமதிக்கப்படுவதால் குற்றங்கள் மறைவொழுக்கமாக வளர்ந்து வருகின்றன .நீதிமன்றத்தின் நோக்கம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை . குற்றம் இல்லாத சமுதாயம் என்றால் அங்கு நீதிமன்றத்திற்கு வேலையில்லை . வருமானம் வேண்டுமென்றால் குற்றவாளிகள் தொடர்ந்து வந்துகொண்டேஇருக்கவேண்டும். இதில் வழக்கறிஞர்கள் எதை விரும்புவார்கள் . குற்றவாளிகள் நிறைந்த சமுதாயாமே அவர்களுக்கு வாழ்வாதாரம் .

Wednesday, June 10, 2026

ஒரு அரசியல்வாதி ஊழல் புரியாமல் நேர்மையாகத் தன் கடமைகளைச் செய்கின்றார் என்று அவரைப் பாராட்டக்கூடாது . ஒரு ஆசிரியர் தினம் தினம் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துகின்றார் என்பதற்காக , ஒரு ஓட்டுநர் பேருந்தை நேரந்தவறாமல் ஓட்டினார் என்பதற்காக . ஒரு தபால் காரர் ஒவ்வொருநாளும் தபாலை உரியவரிடம் சேர்க்கிறார் என்பதற்காக, ஒரு கடைக்காரர் எடை குறையாமல் நிறுத்துப்போடுகின்றார் என்பதற்காக, ஒரு ஊழியர் ஒப்புக்கொண்ட படி ஒரு வேலையைச் செய்து முடித்தார் என்பதற்காக யாரும் யாரையும் பாராட்டவேண்டியதில்லை. கடமைகளுக்கு அப்பாற்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதாபிமானத்துடன் செய்யப்படும் சில செயல்களுக்கு பாராட்டலாம் . அப்பொழுதுதான் அது போன்ற நல்ல செயல்களை செய்ய எல்லோரும் முன்வருவார்கள் சமுதாயத்திற்கு பயன்தராத ஒருவருக்கு மட்டும் பயன்தருகின்ற தவறான புகழ்ச்சி உரைகளை எல்லோரும் தவிர்க்கவேண்டும்
ஒருவர் தன்கடமையைச் சரிவரச் செய்யவேண்டும் . அதற்கு அவர் பாராட்டை எதிர்பார்க்கக்கூடாது . கடமைகளுக்கு அப்பாற்பட்டு தவறுகளை ச் செய்ய அவர்க்கு அதிகாரமும் செல்வாக்கும் இருக்கும்போது அதைச் செய்யக்கூடாது . செய்யும் கடமைகளில் சாதனை படைக்கும் போது பாராட்டலாம் . அனால் இன்றைக்கு அரசியல்வாதிகள் கடமைகளை ச் சரிவரச் செய்வதில்லை. தவறுகள் பல செய்கின்றார்கள் . அதை மறைத்து விட்டு அடிமைத் தொண்டர்களின் அறியாமையைப் பயன்படுத்தி இவர்கள் புகழ் பாடவைத்து மக்களுக்கு எதோ நல்லது பண்ணியதைப்போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றார்கள் .விளம்பரத்திற்காகவே ஒரு தொலைக்காட்சி சானல் . பத்திரிக்கை யாளர்களுக்கு ஊக்கத் தொகை . உரிமையில்லாத அறிவுள்ளவர்களால் இந்த நாடு ஒரு சில தீயவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு வருகின்றது. வரும் ஆபத்தை உணர்ந்து எல்லோரும் இணைத்து செயல்பட்டாலே சமுதாய முன்னேற்றம் சாத்தியம் . நாம் மேலும் மேலும் பிரிவதற்கான காரணங்களை த் தேடிக்கொண்டிருக்கும் போது இது காணாமற் போய்விடுகின்றது

Monday, June 8, 2026

ஒரு ஊருக்கு ஒரு கோயில் போதும். கடவுள் கற் சிலையோடு உள்ள ஒரு சிறு பகுதி மட்டும் எப்போதும் எல்லோருக்கும் திறவலாக இருந்தால் போதும் . ஓராண்டில் சில விழாக்கள் நடத்தலாம் . அப்போது முழு கோயிலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் . கடவுளை த் தொழுவதற்கு வேண்டிக்கொள்வதற்கும் ஒரு இடைத்தரகர் தேவையில்லாதது . நம்முடைய ஒவ்வொரு செயலும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு வழியில் பயனுள்ளதாக இருக்கவேண்டும். இது ஆக்கப்பூர்வமான ஒத்த சிந்தனையுடைய வர்களால் மட்டுமே முடியும் அர்ச்சகர்கள் இறைப்பணியை முழு நேரப்பணியாகக் கொள்ளாமல் பிற சமுதாயப்பணிகளில் ஈடுபடலாம் . சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.அதனால் தான் நம்முடைய உண்மையான முன்னேற்றம் வெறும் வாயளவில் இருக்கின்றது