Thursday, October 17, 2019

creative thoughts


“10000 குத்துக்களை ஒரு முறை பழகியவனைக் கண்டு நான் அதிகம் பயப்படுவதில்லைஆனால் ஒரு குத்தை 10000 முறை பழகியவனைக் கண்டு நான் அதிகம்  பயப்படுகின்றேன்” - - (Bruce Lee)
பல விஷயங்களைப் பற்றித் தெரிந்திருப்பவனை விட ஒரு விஷயத்தை  அதிகம் தெரிந்திருப்பவன்  அதில் உண்மையிலேயே செயல்திறன் மிக்கவனாக இருப்பான். பிறரை எடைபோடுவதைப் போல அவனையும் எடைபோட்டுவிட முடியாது. பலவற்றைத் தெரிந்திருந்தால் தான் அறிஞன் என்று பலர் நினைக்கின்றார்கள். ஆனால் பயன்படுத்திக்கொள்ள வேண்டியனவற்றைத் தெரிந்திருப்பதை விட, அறிந்திருப்பதை விட புரிந்து வைத்திருப்பது முக்கியம். அப்போதுதான் அது நெருக்கடியான நேரத்திலும் ஒரு உரிமைப்பொருளாய் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் . 10000 குத்துக்களைப் பற்றி தெரிதிருப்பவனுக்கு போதிய பயிற்சி இல்லாததால் ஒரு குத்துக்கூட நெருக்கடியான நேரத்தில் பயன் தருவதில்லை ..ஏனெனில் அவனுடைய முயற்சி அதிகம் தெரிந்து கொள்வதுதான். ஆனால் ஒரே குத்தை 10000 முறை பயிற்சி எடுத்துக் கொண்டவனுக்கு அது அத்துப்படி .எந்தச் சூழ்நிலையில் அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தனிச்சைச் செயலை அவன் மட்டுமே அறிவான் .அவனை வெற்றிபெறுவது கடினம் என்று தற்காப்புக் கலையையே  தன் வாழ்வாதாரமாகக் கொண்ட  புரூஸ் லீ தன் அனுபவத்தை எடுத்துச் சொல்லுவது வழக்கம். 

Monday, October 14, 2019

god is everywhere


ஆன்மிகம் என்பது ஒரு விதத்தில் அறிவியலே . அது அறிவியலுக்கெல்லாம்  முன்பாக அறிமுகமான  சமுதாய அறிவியல் .இயல்பாய் வாழும் கலையை வாழும் போக்கிலேயே கற்றுக்கொடுக்கும் எல்லோருக்குமான கல்வி, இயற்கையைப் பார்த்துப்பார்த்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தானே வளப்படுத்திக் கொள்ளும் நெறிமுறை. அங்கு கடவுள் என்பது அவரவர் மனமே . மனம் கடவுள் வாழும் ஒரு கோயில் . மனம் கடவுளைப்போன்று அளவில்லாத ஆற்றலைக் கொண்டது. .கடவுளை போன்று அருவமானது .கடவுள் எங்கு இருப்பார் என்பது தெரியாதது போல  மனம் உடலுக்குள் எங்கு இருக்கும் என்பதும் தெரியாது . கடவுளைத் தேடித்தேடி காணமுடியாமல் இறுதியில் மனமே கடவுளானது .உண்மையில் கடவுள் ஒரு மனிதனுக்கு வெளியில் இல்லை. அவனுக்குள்ளேதான் இருக்கின்றார் . கடவுளை மனதில் பூட்டி வைத்துவிட்டு  புற வெளியில் தேடுபவர்கள் அவர்கள் முயற்சியில் தோற்றுத்தான் போவார்கள்  . ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு கடவுளாக இருக்கின்றார்கள் , ஏனெனில் கடவுளிடம் அவர்கள் எதைக் கேட்டுப்பெற நினைக்கிறார்களோ அதை கடவுள் அவர்கள் மூலமாகவே கொடுக்கின்றார். ஒருவர் பிறருக்கும் உதவி செய்யும் போது மற்றவர்களுக்கும் கடவுளாகின்றார் . கடவுள் இல்லாமல் தனிமனிதன் வாழலாம் ஆனால் சமுதாயம்தான் வாழமுடியாது . மனிதன் இல்லாமல் சமுதாயமும்  இல்லை ,கடவுளும் இல்லை . தனி மனிதன் , சமுதாயம் ,கடவுள் எல்லாம் ஒன்றுக்கொன்று உள்ளார்ந்த தொடர்பு கொண்டவை . அதை உணரத்தான் முடியும் ஒரு மொழியால் எடுத்துரைக்க முடியாது

 


creative thoughts


தாஜ்மகாலைக் கட்டியது யாரென்று கேட்டால் ஷாஜகான் என்பேன் , தஞ்சை பெரியகோவிலைக் கட்டியது யாரென்று கேட்டால் ராஜ ராஜ சோழன் என்பேன், உங்கள் வீட்டைக் கட்டியது யாரென்றால் எங்கள் முன்னோர்கள் என்பேன் .ஆனால் சூரியனையும் பூமியோடு அதைச் சுற்றி வரும் .கோள்களையும் ,அங்குமிங்குமாக எங்கும் இருக்கும் விண்மீன்களையும், எல்லையில்லையோ என்று வியக்கும் வண்ணம் விரிந்து கிடைக்கும் இந்த பிரபஞ்சத்தையும் படைத்தது யாரென்று கேட்டால் அதற்கு யார்  சரியான பதில் கூறமுடியும் .கடவுள் என்றால் அவர் எங்கே இருக்கின்றார் என்று கேட்பார்கள் .இயற்கை என்றால் அளவற்ற செயல்களை மிகத்  துல்லியமாகச் செய்து முடிக்கும் இந்த இயற்கையைக் கட்டுப்படுத்துவது யார் என்று கேட்பார்கள்
i
இயற்கை ஒரு முதுபெரும் பல்துறை விஞ்ஞானி . அது காலங்காலமாய் அனுபவத்தின் வாயிலாகவே அனைத்து விஷயங்களையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கின்றது  அனைத்துக் காரியங்களையும் கச்சிதமாகச் செய்து முடிக்கும் இயற்கையின் ரகசியங்களுள்.ஒன்று அது அணுக்களிடையேயான குறிமொழி ,அலைகளூடான சமிக்கை மொழி களைப் பயன்படுத்தி அவசரப்படாமல் நீண்டகால நெடுக்கையில் மட்டுமே காரியங்களைச் செய்வதாகும்
ஒவ்வொரு அணுவும் தன்னைச் சுற்றியுள்ள  அணுக்களை இனமறிந்து கொள்கின்றன..அதனால் தான் தனக்குப் பிடித்தமான அணுக்களோடு இணைவதையும், பிடிக்காத அணுக்களோடு விலகுவதையும் தனிச்சையாகச் செய்கின்றன. அவற்றின் விருப்பச் சேக்கைகளே விதவிதமான மூலக்கூறுகளாகின்றன  ,மூலக்கூறுகளின் உணர் நுட்பமும் ,தன்னிச்சையான இயக்கமும் பேரியல் உலகில் நிகழும் அனைத்து இயற்பியல் செயல்பாடுகளுக்கும் ,உயிரியல் உலகில் உயிர்ப் பொருளாகமாறும்/ மாற்றும் வேதியியல் செயல்பாடுகளுக்கும்   காரணமாகின்றன.
 இயற்கையின் இந்த வழிமுறையைப் பின்பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட  அமெரிக்கர்களான வில்லியம் ஜி கெலின்,கிரீக் எல். செமென்சா விற்கும் இங்கிலாந்து நாட்டவரான பீட்டர் ஜெ. ராட் கிளிப்  என்பருக்கும் 2019 ஆண்டு மருத்துவத்திற்கான  நோபல் பரிசுபகிர்ந்தளிக்கப்பட்டது உடலிலுள்ள உயிச் செல்களின் நுட்பமான உணர்திறன் பற்றியும் ,ஆக்சிஜனைப் பெற அவை செய்யும் வியத்தகு செயல்திறன் பற்றியும் இவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார்கள் . உயிர்ச் செல்களின் செயல்பாடுகள் அதற்குக் கிடைக்கக்கூடிய ஆக்சிஜனின் செறிவைப் பொறுத்து இருக்கின்றது என்ற இயற்கையின் ரகசியத்தை எடுத்துரைத்துள்ளார்கள். இயற்கையின் அளவில்லாத செய்முறைகளுக்கு ஒரு அறிவியல் விளக்கம் கொடுப்பதாக இவர்களுடை
ய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன .     

பிரபஞ்சத்தின் தோற்றம் , வளர்ச்சி , முடிவு  போன்றவை நம் பொதுஅறிவிற்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் . பொதுவாக நம்மால் விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அது கடவ உள் படைப்பு என்று ஒரே வார்த்தையில் சொல்லி தப்பித்துக்கொள்கின்றோம் .ஆனால் இயற்கையைப் பார்த்து இடைவிடாது அதன் வழிமுறைகளைப் பின்பற்றும் போது அதன் செயல்முறைகளுக்கான விளக்கம் கிடைக்கின்றது ,அங்கு கடவுள் அறிவியல் அவதாரம் எடுத்துக் காட்சி அளிப்பது போலத் தோன்றுகின்றது.

political thoughts


துயரம் கொள்ளாதே மனமே .

சான்றிதழ் வாங்கக் காசு,சாமி கும்பிடக் காசு  அனுமதி பெறக் காசு , கோப்பை நகர்த்த காசு ,பட்டா தர காசு,கடன் பெறக்  காசு ,மின்னிணைப்புப் க்கு காசு, குடிநீர் வழங்கக் காசு ,வண்டி பதிய காசு , நெடுஞசாலையின் போகarasuக் காசு , பணி நியமனத்துக்கு காசு, பணி ஒப்பந்தத்திற்கு காசு, முழுசா சம்பளம் தர காசு ,  அரசு செய்யவேண்டிய கடமைகளுக்கே காசை தினம் தினம் அள்ளிக் கொடுக்க சம்பாதிக்க வேண்டியிருக்கு. லஞ்சமாக க் காசைக் கொடுக்காமல் இந்த நாட்டிலே எதுவும் நடக்காது என்ற நிலையால் அனைத்துத் தரப்பினரும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். லஞ்சமாகப் பணம் கொடுத்துக் கெடுத்து இனிமேல்  அப்படி  லஞ்சம்  கொடுப்பதற்காகவே நேர்மையாக வாழ்பவர்களும் லஞ்சம் வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவருவது கவலைக்குரியது

இந்திய அரசியல்வாதிகளுக்கு அரசியல்  அறிவு கம்மி, அதனால செயல்  திறன்  மிக  மிகக்  குறைவு ஆசை அதிகம் அதனால  கை சுத்தமில்லை , கட்சியில் ஒரு  சிலருக்கு  பேச்சுத்  திறமை  மட்டும்  இருக்கும்  அதனால மற்றவர்களுக்கு    காதுவரை  நீண்ட   வாய். மக்கள் தங்களை நினைக்கவேண்டும் என்பதற்காக விளம்பரம் தேடுவார்கள் ,அரசாங்க செலவில் அனைத்தையும் அனுபவிக்க விரும்புவார்கள் . கொள்கை கொள்கை  என்பார்கள் ஆனால்   கொள்கை என்னவென்று தெரியாது. மக்களோடு கலந்து அவர்கள் குறைகளைக் கேட்டறியமாட்டார்கள் . மக்களைப் பாரத்தால் எதோ நேரமே இல்லாமல் வேலை செய்வதுபோல அங்குமிங்கும் நடப்பார்கள். தங்கள் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்திற்காகவும் . பொழுது போக்கிற்காகவும், குடும்ப நலனுக்காகவும் அரசின் வருவாயை வரம்பின்றிச் செலவழிப்பார்கள் . இது உண்மையில் மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு ஒப்பான செயலாகும் .

மயக்கும் மொழிகளால் அதைச் செய்தோம் ,இதைச் சாதித்தோம் ,என்றும் (நிறைவுற்று முழுமையாகப் பலன்தராத) ஐந்தாண்டுத் திட்டங்கள், தன்னிறைவு , 2020  ல் வல்லரசு .என்றும் அவர்கள் பேசும் பேச்சுக்கள் எல்லாம் காலங்கடந்து பொய்த்துப்போயின ..அதற்கும் மக்களையே குறை கூறுவார்கள் .. உண்மையில் இயற்கையாக என்ன முன்னேற்றம்  நிகழுமோ அவைதான் இவர்களுடைய கேடுகளையும் கடந்து  இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்றது .பெரும்பாண்மையான மக்களின் நலனுக்கு உகந்த சாதனையான முன்னேற்றம் என்று பெரிதாக ஏதுமில்லை . இந்த மனநிலையோடு இந்திய அரசியல்வாதிகள் தொடர்ந்து செயல்பாடுவார்களே ஆனால் நாட்டின் முன்னேற்றம் என்பது வெறும் கானல் நீர்தான்