Monday, October 14, 2019

god is everywhere


ஆன்மிகம் என்பது ஒரு விதத்தில் அறிவியலே . அது அறிவியலுக்கெல்லாம்  முன்பாக அறிமுகமான  சமுதாய அறிவியல் .இயல்பாய் வாழும் கலையை வாழும் போக்கிலேயே கற்றுக்கொடுக்கும் எல்லோருக்குமான கல்வி, இயற்கையைப் பார்த்துப்பார்த்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தானே வளப்படுத்திக் கொள்ளும் நெறிமுறை. அங்கு கடவுள் என்பது அவரவர் மனமே . மனம் கடவுள் வாழும் ஒரு கோயில் . மனம் கடவுளைப்போன்று அளவில்லாத ஆற்றலைக் கொண்டது. .கடவுளை போன்று அருவமானது .கடவுள் எங்கு இருப்பார் என்பது தெரியாதது போல  மனம் உடலுக்குள் எங்கு இருக்கும் என்பதும் தெரியாது . கடவுளைத் தேடித்தேடி காணமுடியாமல் இறுதியில் மனமே கடவுளானது .உண்மையில் கடவுள் ஒரு மனிதனுக்கு வெளியில் இல்லை. அவனுக்குள்ளேதான் இருக்கின்றார் . கடவுளை மனதில் பூட்டி வைத்துவிட்டு  புற வெளியில் தேடுபவர்கள் அவர்கள் முயற்சியில் தோற்றுத்தான் போவார்கள்  . ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு கடவுளாக இருக்கின்றார்கள் , ஏனெனில் கடவுளிடம் அவர்கள் எதைக் கேட்டுப்பெற நினைக்கிறார்களோ அதை கடவுள் அவர்கள் மூலமாகவே கொடுக்கின்றார். ஒருவர் பிறருக்கும் உதவி செய்யும் போது மற்றவர்களுக்கும் கடவுளாகின்றார் . கடவுள் இல்லாமல் தனிமனிதன் வாழலாம் ஆனால் சமுதாயம்தான் வாழமுடியாது . மனிதன் இல்லாமல் சமுதாயமும்  இல்லை ,கடவுளும் இல்லை . தனி மனிதன் , சமுதாயம் ,கடவுள் எல்லாம் ஒன்றுக்கொன்று உள்ளார்ந்த தொடர்பு கொண்டவை . அதை உணரத்தான் முடியும் ஒரு மொழியால் எடுத்துரைக்க முடியாது

 


No comments:

Post a Comment