Monday, October 14, 2019

creative thoughts


தாஜ்மகாலைக் கட்டியது யாரென்று கேட்டால் ஷாஜகான் என்பேன் , தஞ்சை பெரியகோவிலைக் கட்டியது யாரென்று கேட்டால் ராஜ ராஜ சோழன் என்பேன், உங்கள் வீட்டைக் கட்டியது யாரென்றால் எங்கள் முன்னோர்கள் என்பேன் .ஆனால் சூரியனையும் பூமியோடு அதைச் சுற்றி வரும் .கோள்களையும் ,அங்குமிங்குமாக எங்கும் இருக்கும் விண்மீன்களையும், எல்லையில்லையோ என்று வியக்கும் வண்ணம் விரிந்து கிடைக்கும் இந்த பிரபஞ்சத்தையும் படைத்தது யாரென்று கேட்டால் அதற்கு யார்  சரியான பதில் கூறமுடியும் .கடவுள் என்றால் அவர் எங்கே இருக்கின்றார் என்று கேட்பார்கள் .இயற்கை என்றால் அளவற்ற செயல்களை மிகத்  துல்லியமாகச் செய்து முடிக்கும் இந்த இயற்கையைக் கட்டுப்படுத்துவது யார் என்று கேட்பார்கள்
i
இயற்கை ஒரு முதுபெரும் பல்துறை விஞ்ஞானி . அது காலங்காலமாய் அனுபவத்தின் வாயிலாகவே அனைத்து விஷயங்களையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கின்றது  அனைத்துக் காரியங்களையும் கச்சிதமாகச் செய்து முடிக்கும் இயற்கையின் ரகசியங்களுள்.ஒன்று அது அணுக்களிடையேயான குறிமொழி ,அலைகளூடான சமிக்கை மொழி களைப் பயன்படுத்தி அவசரப்படாமல் நீண்டகால நெடுக்கையில் மட்டுமே காரியங்களைச் செய்வதாகும்
ஒவ்வொரு அணுவும் தன்னைச் சுற்றியுள்ள  அணுக்களை இனமறிந்து கொள்கின்றன..அதனால் தான் தனக்குப் பிடித்தமான அணுக்களோடு இணைவதையும், பிடிக்காத அணுக்களோடு விலகுவதையும் தனிச்சையாகச் செய்கின்றன. அவற்றின் விருப்பச் சேக்கைகளே விதவிதமான மூலக்கூறுகளாகின்றன  ,மூலக்கூறுகளின் உணர் நுட்பமும் ,தன்னிச்சையான இயக்கமும் பேரியல் உலகில் நிகழும் அனைத்து இயற்பியல் செயல்பாடுகளுக்கும் ,உயிரியல் உலகில் உயிர்ப் பொருளாகமாறும்/ மாற்றும் வேதியியல் செயல்பாடுகளுக்கும்   காரணமாகின்றன.
 இயற்கையின் இந்த வழிமுறையைப் பின்பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட  அமெரிக்கர்களான வில்லியம் ஜி கெலின்,கிரீக் எல். செமென்சா விற்கும் இங்கிலாந்து நாட்டவரான பீட்டர் ஜெ. ராட் கிளிப்  என்பருக்கும் 2019 ஆண்டு மருத்துவத்திற்கான  நோபல் பரிசுபகிர்ந்தளிக்கப்பட்டது உடலிலுள்ள உயிச் செல்களின் நுட்பமான உணர்திறன் பற்றியும் ,ஆக்சிஜனைப் பெற அவை செய்யும் வியத்தகு செயல்திறன் பற்றியும் இவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார்கள் . உயிர்ச் செல்களின் செயல்பாடுகள் அதற்குக் கிடைக்கக்கூடிய ஆக்சிஜனின் செறிவைப் பொறுத்து இருக்கின்றது என்ற இயற்கையின் ரகசியத்தை எடுத்துரைத்துள்ளார்கள். இயற்கையின் அளவில்லாத செய்முறைகளுக்கு ஒரு அறிவியல் விளக்கம் கொடுப்பதாக இவர்களுடை
ய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன .     

பிரபஞ்சத்தின் தோற்றம் , வளர்ச்சி , முடிவு  போன்றவை நம் பொதுஅறிவிற்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் . பொதுவாக நம்மால் விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அது கடவ உள் படைப்பு என்று ஒரே வார்த்தையில் சொல்லி தப்பித்துக்கொள்கின்றோம் .ஆனால் இயற்கையைப் பார்த்து இடைவிடாது அதன் வழிமுறைகளைப் பின்பற்றும் போது அதன் செயல்முறைகளுக்கான விளக்கம் கிடைக்கின்றது ,அங்கு கடவுள் அறிவியல் அவதாரம் எடுத்துக் காட்சி அளிப்பது போலத் தோன்றுகின்றது.

No comments:

Post a Comment