God-19
சொர்க்க லோகம் போன்ற ஓரிடத்தில் தனியறையில் ஓர் அழகான இளம் பெண்ணும் ,ஓர் இளைஞனும் மட்டும் இருக்கின்றார்கள் . அந்தப் பெண் தன் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்து விட்டு இறுதியில் முழு நிர்வாணமாக நிற்கின்றார் .மனப்போராட்டம் நடக்கின்றது. அதன் விளைவு மூன்று விதமாக இருக்கலாம். அந்த இளைஞன் காமத்தால் தூண்டப்பட்டு தவறு செய்யலாம். அல்லது கண்களை மூடிக்கொண்டு சலனப்படும் மணத்தைச் சமாதானப்படுத்தி திசை திருப்பலாம்.அல்லது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு எதுவும் நடக்காதது போல அமைதியாக இருக்கலாம்.இந்த மனா நிலையைத்தான் தமிழ்ச் சான்றோர்கள் மூன்று மனித நிலைகளாகச் சித்தரிக்கிறார்கள். மனதை அடக்கி ஆளமுடியாதவன் கணப்பொழுது சுகங்களுக்காக ஆசைப்பட்டு தவறு செய்யத் துணிகிறான் .இவன் மனிதருள் அரக்க குலத்திச் சேர்ந்தவன்.தனக்கு உரிமையில்லாத பொருள் தன்னுடைமையாகாது என்று அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி கண்களை மூடிக்கொண்டு கவனத்தைத் திசை திருப்புபவன் மனிதன் .நிர்வாணத்தைப் பார்த்தும் மனம் நிர்வாணமாகவே இருக்கின்றது என்றால் அவன் தேவன். இயற்கையில் ஒவ்வொரு மனிதனிடமும் இந்த மூன்று குணங்களும் விகிதாச்சார வேறுபாட்டுடன் இருக்கவே செய்கின்றது
No comments:
Post a Comment