Monday, September 6, 2021

 திறமையின்மை என்பது தகுதியின்மையின் ஒரு பிரிவேயாகும் ..முழுஅளவிலான திறமை வெறும் கல்வியால் மட்டுமே கிடைத்துவிடுவதில்லை..கல்வியால் திறமையை பரிபூரணமாக யாரும் பெற்றுவிடமுடியாது.  உண்மையில் அதைச்    சந்திக்கும் அனுபவங்களின் வாயிலாக  மட்டுமே மேம்படுத்திக் கொள்ள முடியும். அனுபவம் என்பது தொடர்ந்து ஈடுபடும் செயல்பாடுகளினால் வருவதாகும். யாரும் ஒரு செயலிலும் ஈடுபடாமல் பயனுள்ள அனுபவத்தைப் பெறமுடியாது.. ..பலவீனத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளும் போதுதான் பலவீனத்தால்  பாதிக்கப்படாத பலத்தை வசப்படுத்திக் கொண்டு வளப்படுத்திக் கொள்ள முடியும் .

 

திறமையின்மை வெளிப்படுவதற்குக் காரணம் உரிமையில்லாத கல்வியால் தங்களை பற்றித் தாங்களே உயர்வாக  நினைத்துக் கொள்வதாகும்  பயனற்ற, தவறான  திறமைகளைக் கூட ஒருவர் தனித் திறமையாகக் கருதலாம்.ஒருவர் தான் பெற்ற  திறமைகளை அவ்வப்போது  திருத்திக்கொண்டு புதிப்பித்துக் கொள்ளவேண்டும் . கால இடைவெளியுடன் தன்னைத் தானே சுய மதிப்பீடு  செய்து கொள்ளும்போது தனித் திறமைகளும் புதுப்பித்துக்கொள்ளப்படும் வாய்ப்பைப் பெறுகின்றன

 

சுயமதிப்பீடு செய்யும் வழிமுறைகள் பல உள்ளன. இதில் முக்கியமானது SWOT analysis ஆகும். இதன் மூலம் ஒருவர் தன்னுடைய பலத்தை மட்டுமின்றி பலவீனத்தையும் சேர்த்து  எடை போடமுடிகின்றதுபெரும்பாலானோர் அவர்களுடைய பலத்தை மட்டுமே அறிவார்கள் ,பலவீனத்தை சிறிதும் அறியமாட்டார்கள் .உண்மையில் பலத்தால் எவ்வளவு முன்னேற்றம் கண்டார்களோ அதைவிட அதிகமாகவே பலவீனத்தால் பின்னேற்றம் இருக்கும் .                       .               

No comments:

Post a Comment