Wednesday, September 1, 2021

 ஒழுக்கமின்மையின் வளர்ச்சி பரிணாமத்தோடு தொடர்புடையது. அதை ஒருவர் பிறருடைய வழிகாட்டலின்றித் தானாகவே அறிந்துகொண்டு பின்பற்றமுடியும் .ஒழுக்கமின்மையை எவ்வளவுதான் சமுதாயத்திற்குத் தெரியாமல் மூடி மறைத்தாலும் எவரொருவரும் தங்கள் குடும்பத்திற்குத் தெரியாமல் நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது . பொருளாதார வளர்ச்சியோடு பின்னிய  குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு முழுமுதல் காரணம் மறைவொழுக்கமாகப் பின்பற்றப்படும்  ,ஒழுக்கமின்மையே  என்பதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகிறார்கள் .அதனால் ஒழுக்கமின்மையை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதுடன் மறைவொழுக்கமாக செய்யவும்  துணிவு கொள்கின்றார்கள் .அப்போது அது பரிணாம வளர்ச்சி யுடன்  புதுவடிவம் பெறும் வாய்ப்பையும் கொண்டுள்ளது . 

பொதுவாக உல்லாசச் செலவு , போதைப்பொருள் பழக்கம், உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளில் விருப்பம் நவீன ஆடை அலங்காரங்களில்  நாட்டம்  , தேவையின்றி அளவுக்கு மீறி சொத்துச் சேர்த்தல், பெண் ,பொன் ,மண் மீது ஆசைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் ..இதனால் இளைஞர்கள் எதிர்காலத்திற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளத்  தவறிவிடுகிறார்கள். ஒழுக்கமின்மை யில்  கொண்டுள்ள விருப்பமும், நம்பிக்கையும் தகுதியை வளர்த்துக்   கொள்ளும் மனப்போக்கை முழுமையாகச் சீரழித்து விடுகின்றது.. 

ஒழுக்கமற்ற செயல்களால் ஒருவர் தகுதிக்கு மீறி அளவற்ற பொருள்     சம்பாதிக்க முடிந்தாலும்,அது சமுதாயத்தில்   மறைமுகமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதால் , தொடர்ந்து பல எதிரிகளையும்  சம்பாதிக்க வேண்டியிருக்கின்றது .இது   அவரை மட்டுமின்றி  அவருக்குப் பின் அவர் குடும்பத்தினரையும் காலம் நெடுக அச்சுறுத்திக்கொண்டே இருக்கும். 

ஒழுக்கமின்மை முன்னேற்றத்திற்காக முனைந்து பெற்ற  தனித் திறமைகளை நொடிப்  பொழுதில்அழித்து விட்டு குறுக்கு வழிகளை அறிமுகப்படுத்திவிடுகின்றது . ஏற்கனவே உழைப்பால் முன்னேறியவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே செல்ல இந்த குறுக்கு வழிகள் வழிகாட்டுவதால் ஒழுக்கமின்மையை கற்றுத் தேர்ந்தவர்கள் கூட எவ்விதத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள் ..குறுக்கு வழி  என்பது நேர் வழிக்கு ஒரு மாற்று வழி .          

No comments:

Post a Comment