Friday, April 22, 2022

vinveliyil ulaa

 

சோம்ரிரோ அண்டம் (Sonbrero Galaxy) 

 மெசியரின் ஒளிப்படத் தொகுப்பில் M 51என்றும்NGC 4594 என்றும் குறிப்பிடப்படுகின்ற அண்டம் இவ்வகையானதாகும் . இது தனிச்  சிறப்பான தோற்றம் கொண்டிருக்கின்றது. வழக்கத்திற்கு மாறாக பருத்த, பெரிதும் வீங்கிய உள்ளகத்துடன்  இது ஒரு மாபெரும் சுருள்புய அண்டமாக இருந்தாலும் செறிவு மிக்க பல நூற்றுக்கணக்கான கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களையும், தெளிவாகவும், அழுத்தமாகவும் கண்ணுக்குப் புலப்படுகின்ற இருள் வரிப் பட்டையையும் கொண்டுள்ளது. இது கண்காணப் பொருள்(Dark matter) காரணமாக அப்படித் தோற்றம் தருவதாகக் கூறுகின்றார்கள். இதனால் இந்த அண்டம் மெக்சிகோ நாட்டினர் அணியும் ஒரு வகையான தொப்பி போலக்காட்சி தருகின்றது. 1781 ல் பியரி மக்கெயின்(Pierre Mechain) என்பார் ஏறக்குறைய 50 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால்  உள்ள இவ்வண்டத்தைக் கண்டறிந்தார் . அண்டங்கள் தற்சுழல்வதை முதன்முதலாக இந்த அண்டத்தைக் கொண்டே அறிந்தனர். அதிக அளவிலான செம்பெயர்ச்சி கொண்டிருப்பதையும் அப்போது அளவிட்டறிந்தனர். அண்மைக்  கால ஆய்வுகள் இந்த அண்டம் மிகப் பரந்து விரிந்த மங்கலான அண்ட வட்டத்தையும், மையத்தில் மீநிறையுள்ள கருந்துளை விண்மீனையும் கொண்டிருக்கலாம்  என்றும் அதன் அறிகுறியாக மிதமாகக் கிளர்ச்சியூட்டப்பட்ட கருவையும் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளன.    

சோம்ரிரோ அண்டம் விர்கோ மற்றும் கோர்வஸ் (corvus) வட்டாரங்கள் எல்லையில் 32 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் ( 9.6 Mpc) உள்ளது. இதன் உருவ அளவு நமது பால் வழி மண்டத்தில் 10 ல் 3 பங்கு தான்.. இதன் அண்டக் கருவில் சுமார்  2000 கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளார்கள். இக்கொத்து  விண்மீன் கூட்டங்கள் ஏறக்குறைய 10-13 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை  இது பால்வழி மண்டலத்தில் காணப்படும் கோளகக் கொத்து விண்மீன்  கூட்டங்களை விட 10 மடங்காகும் இந்த அண்டத்தின் மையத்தில் மீனிறைமிக்க கருந்துளை இருப்பதை அறிந்துள்ளனர். இதனருகில் இருக்கும் விண்மீன்களின் இயக்கங்களை அளவிட்டறிந்து கருந்துளையின் நிறை  நமது சூரியனைப்போல 109 மடங்கு என மதிப்பிட்டுள்ளனர். இதன் செம்பெயர்ச்சியை அளவிடறிந்து இந்த அண்டம் நம்மை விட்டு விலகிச் செல்கின்றது என்பதை உறுதிசெய்தனர் .. பேரண்டம் விரிவடைகிறது என்ற உண்மை தெரிய வந்தது இதன் மூலம்தான்




 

இதில் ஒரு மங்கலான பட்டை அண்டத்தின் எல்லைவரை பரவியிருக்கிறது. இதில் முக்கியமாக  குளிர்ச்சியான ஹைட்ரஜனும் தூசுகளும் உள்ளன.. இது புதிய விண்மீன்கள் உருவாவதற்கு அனுகூலமான பகுதியாக இருக்கின்றது என்று சிலரும் , இதன் கருவில் புதிய விண்மீன்கள் உருவாவதற்கு அதிக வாய்ப்பில்லை என்று வேறு சிலரும் கூறுகின்றார்கள்

vinveliyil ulaa

 


. நெருப்பு வளைய அண்டம் (Ring of fire Galaxy) 

      ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த விண்வெளி  ஆராச்சியாளர்கள் குழு ஒரு புதிய வகையான அண்டத்தைக் கண்டறிந்தனர். R 5519 என்று குறிப்பிடப்படுகின்ற இது 10,8  பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால்  விண்வெளியில் ஒரு நெருப்பு வளையம்போலக்  காட்சியளித்தது . இதை டைட்டானிக் வடை (titanic donut)  என்றும் கூறுவார்கள். இது ஏறக்குறைய பால்வழி மண்டலத்தைப் போல நிறைகொண்டுள்ளது முதன்முதலாக ஓர் அண்டம் எப்படி உருவானது என்பதற்கான விளக்கத்தில்  இது மாற்றங்களை ஏற்படுத்தியது. R 5519 மீனிறை மிக்கது.. இதில் காணப்படும் மோதிரம் போன்ற வளையtத்தின் விட்டம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவைப் போல   2 பில்லியன் மடங்கு. பேரண்டம் தோன்றிய தொடக்க காலத்தில் இந்த வளையம் இருவேறு அண்டங்களின்  மோதலுக்குப் பிறகு புதிய அண்டமாக உருவாகியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள் 


Thursday, April 21, 2022

Vinveliyil Ulaa

 

.பெர்னார்டு அண்டம் (Barnard’s Galaxy)

 

     பால்வெளி மண்டலத்திற்கு அருகாமையில் 1.6 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் நம்முடைய அண்டத்தில் 10ல் 1  பங்கு வடிவங் கொண்ட இது ஒரு குள்ள, சீரற்ற வடிவ அண்டமாகும்.  NGC 6822 , IC 4895, கால்டுவெல் (Caldwell) 57 endru குறிப்பிடப்படும் இந்த அண்டத்தை பெர்னார்டு (E.E.Barnard) என்ற வானியலார்  1884 ம் ஆண்டில் கண்டுபிடித்தார் இது நமது அண்டத்தின் வட்டாரத் தொகுதியில் உள்ளடங்கி , சக்கிடாரியஸ் (Sagittarius)  எனும் வட்டார விண்மீன் தொகுப்பில் காணப்படுகின்றது. இதன் விட்டம் 7000 ஒளியாண்டுகள் என்றும் இதனுள் ஒருகோடி விண்மீன்கள் இருக்கலாம் என்றும், இது நமது பால்வெளி மண்டலத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் அண்டங்களுள் ஒன்றும் என்றும் கண்டறிந்துள்ளனர். இதன் கட்டமைப்பும் சேர்மானமும் ஏறக்குறைய நமது அண்டத்திலுள்ள சிறிய மெக்லானிக் மேகம் போன்றதொரு தோற்றத்தைத் தருகின்றது

 

       எட்வின் ஹபுள் என்பார் 1920- ல் இந்த அண்டத்தில் மூன்று விண்மீன் கொத்துக்களைக் கண்டறிந்தார், . பொதுவாக விண்மீன் கொத்துக்கள் ஒத்த வயதுடைவைகளாக இருக்கும் ஆனால் இவை மூன்றும் வெவ்வேறு வயதுடையவைகளாக இருந்தன. . இது வானியலாருக்கு  பெரிதும் வியப்பளித்தது. . இதிலுள்ள ஹபுள்-7 எனப்படும்   விண்மீன் கொத்து 15  பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும், (இது ஏறக்குறைய நமது பால்வெளி மண்டலம் மற்றும் பேரண்டத்தின் வயதுமாகும்). ஹபுள்-8 என்ற விண்மீன்கொத்து 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும், ஹபுள்-6 (மிகவும் இளமையானது) 100 மில்லியன் ஆண்டுகளுக்கு  முன்னரும் உருவாகியிருக்கலாம் என மதிப்பிட்டுள்;ளனர். பெர்னார்டு (E.E.Bernard) அண்டம் புதிய நிறைமிக்க விண்மீன் கொத்துக்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என் நம்பப்படுகின்றது.

 

'image.png' failed to upload. TransportError: There was an error during the transport or processing of this request. Error code = 103, Path = /_/BloggerUi/data/batchexecute

                                                                                 NGC 6822 பெர்னார்டு அண்டம் 

பெர்னார்டு அண்டத்திற்கு சுருள் புயங்கள் ஏதுமில்லை , செறிவான மையக்கருவும் இல்லை .இதில் காணப்படும் செந்நிற நெபுலாக்கள் புதிய இளம்  விண்மீன்கள் உருவாகும் பகுதிகளாகும்.  வெப்பமிக்க விண்மீன்கள் புறவெளியிலுள்ள வளிமங்களை வெப்பப்படுத்தி ஒளிர்வூட்டுகின்றன. இவ்வண்டத்தில் பொருள் திணிவு மிகவும் குறைவாக உள்ளது. இது அருகாமையிலுள்ள நிறைமிக்க பெரிய அண்டங்களினால் விழுங்கப்படுவதால் ஏற்பட்டிருக்கள்லாம் என்று கூறுகின்றார்கள்