சோம்ரிரோ அண்டம் (Sonbrero Galaxy)
மெசியரின் ஒளிப்படத் தொகுப்பில் M 51என்றும்NGC 4594 என்றும் குறிப்பிடப்படுகின்ற அண்டம் இவ்வகையானதாகும் . இது தனிச் சிறப்பான தோற்றம் கொண்டிருக்கின்றது. வழக்கத்திற்கு மாறாக பருத்த, பெரிதும் வீங்கிய உள்ளகத்துடன் இது ஒரு மாபெரும் சுருள்புய அண்டமாக இருந்தாலும் செறிவு மிக்க பல நூற்றுக்கணக்கான கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களையும், தெளிவாகவும், அழுத்தமாகவும் கண்ணுக்குப் புலப்படுகின்ற இருள் வரிப் பட்டையையும் கொண்டுள்ளது. இது கண்காணப் பொருள்(Dark matter) காரணமாக அப்படித் தோற்றம் தருவதாகக் கூறுகின்றார்கள். இதனால் இந்த அண்டம் மெக்சிகோ நாட்டினர் அணியும் ஒரு வகையான தொப்பி போலக்காட்சி தருகின்றது. 1781 ல் பியரி மக்கெயின்(Pierre Mechain) என்பார் ஏறக்குறைய 50 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள இவ்வண்டத்தைக் கண்டறிந்தார் . அண்டங்கள் தற்சுழல்வதை முதன்முதலாக இந்த அண்டத்தைக் கொண்டே அறிந்தனர். அதிக அளவிலான செம்பெயர்ச்சி கொண்டிருப்பதையும் அப்போது அளவிட்டறிந்தனர். அண்மைக் கால ஆய்வுகள் இந்த அண்டம் மிகப் பரந்து விரிந்த மங்கலான அண்ட வட்டத்தையும், மையத்தில் மீநிறையுள்ள கருந்துளை விண்மீனையும் கொண்டிருக்கலாம் என்றும் அதன் அறிகுறியாக மிதமாகக் கிளர்ச்சியூட்டப்பட்ட கருவையும் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளன.
சோம்ரிரோ அண்டம் விர்கோ மற்றும் கோர்வஸ் (corvus) வட்டாரங்கள் எல்லையில் 32 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு
அப்பால் ( 9.6 Mpc) உள்ளது. இதன் உருவ அளவு நமது பால் வழி மண்டத்தில் 10 ல் 3
பங்கு தான்.. இதன் அண்டக் கருவில் சுமார் 2000
கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளார்கள். இக்கொத்து விண்மீன் கூட்டங்கள் ஏறக்குறைய 10-13 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை இது பால்வழி மண்டலத்தில் காணப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களை விட 10 மடங்காகும் இந்த அண்டத்தின் மையத்தில் மீனிறைமிக்க கருந்துளை இருப்பதை அறிந்துள்ளனர். இதனருகில் இருக்கும் விண்மீன்களின் இயக்கங்களை அளவிட்டறிந்து கருந்துளையின் நிறை நமது சூரியனைப்போல 109
மடங்கு என மதிப்பிட்டுள்ளனர். இதன் செம்பெயர்ச்சியை அளவிடறிந்து இந்த அண்டம் நம்மை விட்டு விலகிச் செல்கின்றது என்பதை உறுதிசெய்தனர் ..
பேரண்டம் விரிவடைகிறது என்ற உண்மை தெரிய வந்தது இதன் மூலம்தான்
இதில் ஒரு மங்கலான பட்டை அண்டத்தின் எல்லைவரை பரவியிருக்கிறது. இதில்
முக்கியமாக குளிர்ச்சியான ஹைட்ரஜனும்
தூசுகளும் உள்ளன.. இது புதிய
விண்மீன்கள் உருவாவதற்கு அனுகூலமான பகுதியாக இருக்கின்றது என்று சிலரும் , இதன்
கருவில் புதிய விண்மீன்கள் உருவாவதற்கு அதிக வாய்ப்பில்லை என்று வேறு சிலரும்
கூறுகின்றார்கள்
No comments:
Post a Comment