.பெர்னார்டு அண்டம் (Barnard’s Galaxy)
பால்வெளி மண்டலத்திற்கு அருகாமையில் 1.6 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் நம்முடைய அண்டத்தில் 10ல் 1 பங்கு வடிவங் கொண்ட இது ஒரு குள்ள, சீரற்ற வடிவ அண்டமாகும். NGC 6822 , IC 4895, கால்டுவெல் (Caldwell) 57 endru குறிப்பிடப்படும் இந்த அண்டத்தை பெர்னார்டு (E.E.Barnard) என்ற வானியலார் 1884 ம் ஆண்டில் கண்டுபிடித்தார் இது நமது அண்டத்தின் வட்டாரத் தொகுதியில் உள்ளடங்கி , சக்கிடாரியஸ்
(Sagittarius) எனும் வட்டார விண்மீன் தொகுப்பில் காணப்படுகின்றது. இதன் விட்டம் 7000 ஒளியாண்டுகள் என்றும் இதனுள் ஒருகோடி விண்மீன்கள் இருக்கலாம் என்றும், இது நமது பால்வெளி மண்டலத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் அண்டங்களுள் ஒன்றும் என்றும் கண்டறிந்துள்ளனர். இதன் கட்டமைப்பும் சேர்மானமும் ஏறக்குறைய நமது அண்டத்திலுள்ள சிறிய மெக்லானிக் மேகம் போன்றதொரு தோற்றத்தைத் தருகின்றது
எட்வின் ஹபுள் என்பார் 1920- ல் இந்த அண்டத்தில் மூன்று விண்மீன் கொத்துக்களைக் கண்டறிந்தார், . பொதுவாக விண்மீன் கொத்துக்கள் ஒத்த வயதுடைவைகளாக இருக்கும் ஆனால் இவை மூன்றும் வெவ்வேறு வயதுடையவைகளாக இருந்தன. . இது வானியலாருக்கு பெரிதும் வியப்பளித்தது. . இதிலுள்ள ஹபுள்-7 எனப்படும் விண்மீன் கொத்து 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும், (இது ஏறக்குறைய நமது பால்வெளி மண்டலம் மற்றும் பேரண்டத்தின் வயதுமாகும்). ஹபுள்-8 என்ற விண்மீன்கொத்து 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும், ஹபுள்-6 (மிகவும் இளமையானது) 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் உருவாகியிருக்கலாம் என மதிப்பிட்டுள்;ளனர். பெர்னார்டு (E.E.Bernard) அண்டம் புதிய நிறைமிக்க விண்மீன் கொத்துக்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என் நம்பப்படுகின்றது.
NGC 6822 பெர்னார்டு அண்டம்
பெர்னார்டு அண்டத்திற்கு சுருள்
புயங்கள் ஏதுமில்லை , செறிவான
மையக்கருவும் இல்லை .இதில் காணப்படும் செந்நிற நெபுலாக்கள் புதிய இளம் விண்மீன்கள் உருவாகும் பகுதிகளாகும். வெப்பமிக்க விண்மீன்கள் புறவெளியிலுள்ள
வளிமங்களை வெப்பப்படுத்தி ஒளிர்வூட்டுகின்றன. இவ்வண்டத்தில் பொருள் திணிவு மிகவும்
குறைவாக உள்ளது. இது அருகாமையிலுள்ள நிறைமிக்க பெரிய அண்டங்களினால்
விழுங்கப்படுவதால் ஏற்பட்டிருக்கள்லாம் என்று கூறுகின்றார்கள்
No comments:
Post a Comment