Sunday, July 24, 2022

இருள்மை ஆற்றலும் இருள்மைப் பொருளும் - 1

 

இருள்மை ஆற்றலும் இருள்மைப் பொருளும் - 1

(Unfolding the secrets of Dark energy and dark matter)

                இன்றைக்கு நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் கற்பனைக்கும் எட்டாத மிகப் பெரியதொரு நெருப்புக் கோளம் வெடித்துச் சிதறியதால்  உருவானது என்று பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) கூறுகின்றது.ஒரு பெரிய நீர்மத் துளி சிதறுவதால் சிறு சிறு துளிகள் ஏற்படுவதைப்போல ,ஒரு விண்மீனிலிருந்து வெளியே வீசியெறியப்பட்ட வளிமம் அதைச் சுற்றிவரும் கோள்களாக உறைவதைப் போல அப்படியும் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. பெருவெடிப்புக் கொள்கை அவ்வளவு பெரிய நெருப்புக் கோளம் எப்படி உருவானது? ,அதன் மூலம் என்ன? அது ஏன் ஒற்றைக் கோளமாக உருவானது? போன்ற கேள்விகளுக்கு  விளக்கம் கொடுக்கவில்லை என்றாலும் விரிவடையும் பிரபஞ்சத்திற்கு காரணம் கற்பிக்கின்றது

         இந்த பிரபஞ்சத்தின் மூலம் ஆற்றலாக இருக்கலாம், அல்லது பொருளாக இருக்கலாம் அல்லது ஆற்றலும் பொருளும் சேர்த்தததாக இருக்கலாம். பெரு வெடிப்புக் கொள்கை பிரபஞ்சத்தின் மூலமாக ஆற்றலையும் பொருளையும் கருதுகின்றது ஏன் ஆற்றலாக இல்லை அல்லது பொருளாக இல்லை என்பதற்கு ஒரு விளக்கம் கொடுக்கவில்லை ஆற்றல் என்றால் என்ன ?பொருள் என்றால் என்ன ? அவற்றை வேறுபடுத்தும் வேறுபாடுகள் யாவை ? என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் . ஆற்றலும் பொருளும் ஒரே மூலத்தின் இருவேறு வடிவங்களே . ஆற்றல் திரண்டால் பொருள் பொருள் சிதைந்தால் ஆற்றல். .சார்புக் கொள்கை மூலம்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிறுவிய  E-mC2 என்ற சமன்பாடு ஆற்றலுக்கும் பொருளுக்குமுள்ள தொடர்பை உறுதிப்படுத்தி யிருக்கின்றது

ஆற்றல் , பொருள் இவற்றுள் எது அதிக நிலைப்புத் தன்மை கொண்டது?  ஒலி ,வெப்பம்   ஒளியாற்றல் போன்ற பாய்ம ஆற்றல்கள் பொருட்களால் உட்கிரகிக்கப்படும் வரை தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன..இதனால் திறந்த வெளியில் அவை  நிலையற்றவை போலத் தோன்றினாலும் உண்மையில் அவை இறுதிவரை  ஆற்றலாகவே நிலைத்திருக்கின்றன.

பொருளைப் பிரபஞ்சமாகக் கட்டமைக்க  ஆற்றல் வேண்டும். அதனால் பெருவெடிப்புக் கொள்கையில் ஆற்றலும் பொருளும் சேர்ந்த கலவையே பிரபஞ்சத்தின் மூலமாகக் கொள்ளப்பட்டுள்ளது . பொருளில் உறைந்த ஆற்றலை வெளிப்படுத்தாமல் பயனீட்ட முடியாது. பொருளைச்  சிதைந்து ஆற்றலைப் பெற்ற பின்னரே பிரபஞ்சத்தின் கட்டுமானத்தைத் தொடரமுடியும். ,ஆனால் பொருள் தானாகச் சிதைவதற்கு காரணமில்லை . ஏனெனில் பொருள் சிதைந்து ஆற்றலாக நிலைமாற வேண்டுமானால் பொருளும் எதிர்ப்பொருளும் அருகருகே இருக்கவேண்டும் . இது பொருளும் அதற்கு இணையான எதிர்ப்பொருளும் தொடக்கத்திலேயே பெரிய நெருப்புக்கோளத்திற்குள் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை  ஏற்படுத்துகின்றது .

பிரபஞ்சத்தின் மொத்த மின்னூட்டம்  எந்த நிலையிலும் சுழியாக இருக்கும். இது காலத்தால் மாறாத இயற்கையின் கொள்கை ..இது தொடக்க நிலையில் பிரபஞ்சத்தின் மூலம் ஆற்றலாக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கின்றது. பொருளாக இருந்தால் ,பிரபஞ்சத்தின் மொத்த மின்னூட்டம் சுழியாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு ஏற்ப அதில் பொருளும் எதிர்பொருளும் சம அளவில் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை உட்புகுத்துகின்றது .

               அடிப்படைத் துகள்களானாலும் சரி ,பேரளவிலான பொருளானாலும் சரி அவைகளுக்குள் ஏற்படும் எந்த மாற்றங்களும் மின்னூட்டம் மாறாக் கோட்பாட்டிற்கு உட்பட்டே நிகழ்கின்றன . பேரண்டத்தின்  ஒவ்வொரு பகுதியும் கூட மின்னூட்டம் மாறாக் கோட்பாட்டிற்கு உட்பட்டிருக்கின்றன என்றாலும் மிகத் தற்காலிகமாக சிறிய அளவில் மின்னூட்டம் மாறுபடலாம் ..இவை  குறைக்கடத்தியில் நேர்மின் துளை போல செயல்பட்டு காலப்போக்கில் மின்னூட்டத்தை சமன் செய்து கொண்டு விடுகின்றன மின்னூட்ட நடுநிலை என்பது பொருட்களைவிட ஆற்றலுக்கு இயற்கையாகவே இருக்கின்றது ஆற்றலுக்கு உள்ள சுதந்திரம் பொருளுக்கு இல்லை. ஆற்றல் மற்றொரு ஆற்றலாக மாறலாம். மின்னூட்டம் எதுவாக இருந்தாலும் பொருள் மீது உறையலாம் .ஆனால் பொருளுக்கு அப்படிப்பட்ட சுதந்திரம் இல்லை.. ஒரு பொருள் அழியவேண்டுமானால் அதற்கு இணையான எதிர்ப்பொருள் வேண்டும்..ஒரு பொருள் உருவாகும் போதும் மின்னூட்டம் மாறாக் கோட்பாட்டிற்கு ஏற்ப பொருளும் எதிர்ப்பொருளுமாகவே உற்பத்தி செய்யப்படவேண்டும் . இதைப் பருப்பொருளாக்கம் (materialization)  என்பர் . பொருள் பருப்பொருளாக்கம் மற்றும் ஒளியால் உற்பத்தி (photo production ) போன்ற வினைகளால் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும். இவ்வினைகளில் பொருளும் எதிர்பொருளும் இணைந்தே உற்பத்தி செய்யப்படுகின்றனபொருளாக்க வினைகளில் துகள் எதிர்த்துகள் (எலெக்ட்ரான் - பாசிட்ரான் , புரோட்டான் -எதிர் புரோட்டான் )  மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது .நேர்மின் துகள் எதிர்மின் துகள்  புரோட்டான் -எலெக்ட்ரான் ) உருவாக்கம் ஏற்படுவதில்லை  ஆற்றலும் பொருளும் ஒரு சமநிலையில் இருக்கும் போது அவை களுக்கிடையே பரிமாற்ற வினைகள் தூண்டப்படுவதில்லை.சமநிலையற்ற அமைப்புக்கள் பிரபஞ்சத்தில் அதிக காலம் நிலைத்திருப்பதில்லை என்பதால் அவை தானாகவே ஒரு சமநிலையை அடைய முயன்று சமநிலையைப் பெற்று நிலைப்படுகின்றன அதனால் ஆற்றலும் பொருளும் சேர்ந்தகலப்பு நிலை பிரபஞ்சத்தின் மூலமாக இருக்கமுடியாது என்று கருதலாம்.

பிரபஞ்சம் ஆற்றலிலிருந்தே தோன்றி விரிவடைந்திருக்க வேண்டும்  ஏனெனில் பொருளுக்கு இருக்கும் நிபந்தனைகள் ஆற்றலுக்கு இல்லை

பொருள் உலகில் எதிர்பொருளும் , எதிர்ப்பொருள் உலகில் பொருளும் நிலைத்திருக்க முடியாது .அவை அவைகளுக்கிணையான எதிர்பொருட்களை நாடி இணைந்து ஆற்றலாக மாறிவிடுகின்றதுஅதாவது பருப்பொருளாக்கத்திற்கு முன்பிருந்த நிலையையே மீண்டும் அடைகின்றது. இது பொருளைவிட ஆற்றலுக்குக் கூடுதல்  நிலைப்புத்தன்மை உண்டு என்பதைத் தெரிவிக்கின்றது மேலும் ஆற்றல் புறத் தூண்டலின்றி பொருளாக மாறுவதில்லை. ஆனால் பொருளும் எதிர்ப்பொருளும்  புறத் தூண்டலின்றியே ஆற்றலாக மாறுகின்றது . இணையான எதிர்ப்பொருள் அருகில் இல்லாமையால் ஒரு பொருள் நிலையானது போலத் தோன்றலாம். ஆனால்  இணையான எதிர்ப்பொருளைக் கண்டுவிட்டால் பொருள் உடனடியாக முழு அழிவாக்கத்தில் ஈடுபடுகின்றது. பருப்பொருளாக்க வினையை விட முழுஅழிவாக்க வினை விரைந்து நிகழ்கின்றது. இது பொருளை விட ஆற்றலே நிலைப்புத் தன்மை மிக்கது என்பத்தைத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கின்றது    .     

No comments:

Post a Comment