3.டங்ஸ்டன்
வேதிக் குறியீடு w ;அணுவெண் –74 ; அணுநிறை 183.85 ; அடர்த்தி 19400 கிகி/க.மீ புரோட்டான் - 74 ; நியூட்ரான் --110 ; எலெக்ட்ரான் -74 ( 1s1 2s3 2p6 3s2 3p53d104s24p64d10 4f14 5s2 5p6 5d4 ) இணைதிறன் - +2,_3,+4- ,+5.+6 உருகு நிலை 3653 K ; கொதிநிலை 6200 K
கண்டுபிடிப்பு
வெள்ளியத் (tin)
தாதுவை உருக்கும் போது மூலப் பொருள் அளவில் இழப்பு காணப்பட்டது. மாயமாகிப்போன நிறைக்கு வேதியியலார் காரணம் தேடிக்கொண்டி ருந்தார்கள் . ஓர்ஓநாய் ஆட்டுக்குட்டியை
விழுங்குவது போல அந்தக்கல் வெள்ளியீயத்தை விழுங்குவதாக அப்போது அதைக் கற்பனை செய்ய
அத்தாது வூல்ப் ராமைட் (Wolframite)
என்ற பெயரைப் பெற்றது. 1781 ல் ஷீலே (Scheele)
என்ற சுவீடன் நாட்டு
வேதியியலார் டங்ஸ்டன் என்ற தனிமத்தை ஷீலைட் என்ற தாதுவிலிருந்து பிரித்தெடுத்தார்
. வூல்ப்ராமைட்டும் டாங்ஸ்டெனின் ஒரு தாதுவே . இது இரும்பு டங்ஸ்டேட் ஆகும்
.ஆனால் ஷுலைட் கால்சியம் டங்ஸ்டேட் ஆகும்
.அதனால் டங்ஸ்டன் சிலகாலம் வூல்ப்ரம் என்ற பெயராலே அழைக்கப்பட்டது
73 சதவீதம் டங்ஸ்டன் கனிமங்கள் சீனாவிலும்
எஞ்சியவை அமெரிக்காவின் கலிபோர்னியா ,வடக்கு
கரோலினா பகுதிகளிலும் தென் கொரியா பொலிவியா போர்ச்சுகல் இரஷ்யா போன்ற
நாடுகளிலும் கிடைக்கின்றன.
பண்புகள்
உலோகங்களில் அதிக
உருகுநிலை கொண்ட உலோகம் டங்ஸ்டனாகும்..இதை வெட்டவும். வெட்டியதைத் தகடாக
அடிக்கவும் , கம்பியாக நீட்டவும்
சுருளாக வளைக்கவும் முடியும் .எனினும்
தூய்மையற்ற டங்ஸ்டன் பட்டறைப்பயனுக்கு
இணக்கமாக இருப்ப தில்லை, எளிதில் நொறுக்கி விடுகின்றது
ஆவியழுத்தம் இதற்குத்தான் மிகவும் குறைவு 1923 K என்ற வெப்பநிலை எல்லையில்
மிக அதிகஅளவு மீட்சித்திறனைப் (tensile strength) பெற்றிருக்கின்றது .இது காற்றுவெளியில்; மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகின்றது .அதனால் உயர்வெப்பநிலைகளில் இதைத்
தடுக்க உலோகத்தைத் தகுந்தவாறு கலப்புச் செய்துகொள்ளவேண்டும் .அமிலங்களினால் மிகக்குறைந்த
அளவிலேயே தாக்கப் படுகின்றது. இதன் வெப்பவிரிவாக்கம்
போரான் சிலிகேட் கண்ணாடியின் மதிப்பிற்குச் சமமாக இருப்பதால் டங்ஸ்டனையும்
கண்ணாடியையும் இணைத்து முத்திரையிட முடிகின்றது
பயன்கள்
உயர் உருகு நிலையும்
மின்தடை எண்ணும் டங்ஸ்டனை மின்னிழை
விளக்குகளுக்கு உகந்த பொருளாக்கியிருக்கின்றன. மின்னணுவியல் சாதனைகளில்
பயன்படுத்தப்படும் அணைத்து வால்வுகளிலும் டங்ஸ்டன் பயன்படுகின்றது
டங்ஸ்டன் விரைவேக
எஃகு (high speed steel )போன்ற பல கடினமிகு
கலப்பு உலோகங்களைத் தந்துள்ளது . எஃகுடன் சிறிதளவு டங்ஸ்டனைச் சேர்க்க அது உயர்
வெப்பநிலையிலும் கடினத்தன்மையைத்
தக்கவைத்துக் கொள்வதுடன் கடினத் தன்மையை
மேலும் மிகைப்படுத்திக் கொள்கின்றது . தேய்மானத்தடையும் காந்தப்பண்பும்
மேம்படுகின்றன .இந்த எஃகில் 18 சதவீதம் டங்ஸ்டனும் 4 சதவீதம் குரோமியமும் 1 சதவீதம் வனேடியுமும் சேர்ந்திருக்கின்றன
.பிற கடினமிகு கலப்பு உலோகங்களுள் ஹேஸ்டலாய் (Hastalloys ) ஸ்டெலைட் (Stellite ) மாலிப் பிடின எஃகு
போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை
வெட்டுங்கருவிகள் துளையிடும் கருவிகள் .துரப்பனக் கருவிகள் பட்டறைக்கான இயந்திர உறுப்புகள் , மற்றும் துணைச் சாதனங்கள் விரைவாகத்
தொடர்ந்து செயல்படும் சக்கர இரம்பங்கள் , அறுவைச்
சிகிச்சைக்குரிய கருவிகள் போன்ற பலதரப்பட்ட பயன்பாட்டுக் கருவிகளைச் செய்யப்
பயன்படுகின்றன.
டங்ஸ்டன் கார்பைடும்
டைட்டானியம் அல்லது நையோபியம் அல்லது
டாண்டலத்தின் கார்பைடும் கலந்து செர்மெட் (Cermet ) என்ற பீங்கான் உலோகத்தைத் தந்துள்ளன .இது பீங்கான் மற்றும்
உலோகம் என்ற சொற்களின் முதலெழுத்துச் சேர்க்கையால் உருவானது .இது 1300 K வெப்பநிலையில் கூட
கடினத்தன்மையை இழப்பதில்லை .உயர்வேக இயந்திரப் பொறிகளுக்குப் பயனுள்ளதாக
இருக்கின்றது டங்ஸ்டன் கார்பைடு சுரங்கம் தோண்டும் பணிகளுக்கும்
கனிமங்களை வெட்டி எடுப்பதற்கும் ,மலையைக் குடைந்து சாலைகளை அமைப்பதற்கும்
பாறைகளை உடைத்து கட்டுமானப் பணிகளில்
பயன்படுத்துவதற்கும் பயன்தருகின்றது.
சோடியம்
டங்ஸ்ட்டேட்டால் செறிவூட்டப்பட்ட துணி
உயர் வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கின்றது . அதனால் இது தீப்பற்றிக் கொள்ளாத
ஆடைகளைத் தயாரிக்கப் பயன்படுகின்றது .
டங்ஸ்டன் கூட்டுப்பொருட்கள் மஞ்சள் ,நீலம்
வைலைட் ,வெள்ளை மற்றும் பச்சைநிற வர்ணங்களின்
தயாரிப்பு முறையில் உபயோகப்படுத்தப் படுகின்றன.இந்த வர்ணங்களைக் கொண்டு பீங்கான்
பொருட்களுக்கும் நிறமூட்ட முடிகின்றது. டங்ஸ்டன்
டை சல்பைடு ஒரு வறண்ட,உயர் வெப்பநிலைக்கு
உகந்த மசகுப் பொருளாகும் .இது 775 K வரை வெப்பநிலையைத்
தாக்குப்பிடிக்கின்றது. குழல் விளக்குகளில்
ஊதா நிற ஒளியைப் பெற கால்சியம் டங்ஸ்டேட்டும் வெளிர் ஊதா நிற ஒளிக்கு மக்னீசியம்
டங்ஸ்டேட்டும் பயன்படுகின்றன
மின்பொறி
பிளாஸ்மா (arc plasma ) மூலம் டங்ஸ்டன்
கார்பைடு என்ற வைரத்தை ஒத்த கடினத்தன்மை
கொண்ட பொருளைப் படிகமாக வார்க்க முடியும். உலோகப் பரப்பிற்கு வழவழப்பும், பளபளப்பும்தர இதை ஒரு தேய்ப்புப்பொருளாகப்
பயன்படுத்து கின்றார்கள் . நகைகளில் வைரங்களுக்குப்
போலியாகவும் இதைப் பயன்படுத்துகின்றார் கள். டங்ஸ்டன்-மந்த வளிமம்
மின்பொறி பற்றிணைப்பு முறை உலோகங்களைப் பற்றவைத்துப் பொருத்தியிணைக்கப்
பின்பற்றப்படுகின்றது .இது செம்பு ,மக்னீசியம்
, எஃகு அலுமினியம் போன்றவைகளில்
பயனுள்ளதாக இருக்கின்றது .அரிமானத்திற்கு உள்ளாகி விடுபட்டுப் போகக் காரணமாக இருக்கும் இடுபொருட்களின்றியே பற்றவைக்க முடிவது இதன் சிறப்பாகும்
No comments:
Post a Comment