ஹாப்னியம் (Hafnium)
வேதிக் குறியீடு Hf ;அணுவெண் –72 ; அணுநிறை 178.49 ; அடர்த்தி 13300 கிகி/க.மீ புரோட்டான் - 72
; நியூட்ரான் --108 ; எலெக்ட்ரான் -72
( 1s1 2s3 2p6
3s2 3p53d104s24p64d10
4f14 5s2 5p6 5d2 ) இணைதிறன் - +4- உறைநிலை 2423 K
;
கொதிநிலை 5700 K
கண்டுபிடிப்பு
ஹாப்னியம்
கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் அதுபோன்றதொரு தனிமம் இருக்க வேண்டும் என்று ஊகித்தனர் .
மெண்டலீவ் சிர்கோனியம் தனிமத்திற்குக்
கீழ் ஓரிடத்தை அதுநாள் வரை கண்டறியப்படாத ஒரு தனிமத்திற்காக விட்டுவைத்திருந்தார்
. அவருடைய மொழியில் சொன்னால் அது ஏக
சிர்கோனியமாகும் .மெண்டலீவ் முன்னறிவித்த ஏக போரான் ,ஏக சிலிகான் . ஏக
அலுமினியம் போன்றவை ஸ்காண்டியம்
.காலியம் ஜெர்மானியமாக இனமறியப்பட்ட
பின்பு இக்கருத்து பலரையும் ஆராய வைத்தது . நெதர்லாந்து நாட்டு நிறமாலை
வல்லுனரான கோஸ்டர் (D
.Coster ) மற்றும்
ஹங்கேரி நாட்டு கதிரியக்க வேதியலாரான வான் ஹேவசே (G .Von Hevesay )நீல்ஸ் போரின்
எலெக்ட்ரான்கூடு சார்ந்த கொள்கையைப்பின்பற்றி இப்புதிய உலோகம் சிர்கோனியத்தோடு
தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்று உறுதியாக நம்பினார்கள் . இறுதியாக
நார்வேயிலிருந்து கிடைத்த சிர்கானில் (Zircon ) எக்ஸ்கதிர் நிறமாலை
சார்ந்த பகுப்பாய்வு மூலம் இது இனமறியப் பட்டது . டென்மார்க் நாட்டின் கோபென்
ஹோகன்என்னுமிடத்தில் இக் கண்டுபிடிப்பு நிகழ்ந்ததால் இலத்தீன் மொழியில் அந்த
நகரத்தின் பெயரான ஹாப்பினியா என்ற
சொல்லிலிருந்து இத்தனிமத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. பெரும் பாலான சிர்கோனியத் தாதுக்களில் 1 முதல் 5 % வரை
ஹாப்னியம் உள்ளது
இரட்டை அமோனியம் அல்லது பொட்டாசியம்
புளூரைடுகளை மீண்டும்மீண்டும் படிக்கமாகுதல் மூலம் சிர்கோனியத்திலிருந்து ஹாப்
னியத்தைப் பிரித்தெடுக்கலாம் உலோக நிலையில் ஹாப்னியம் முதல் முதலாக வான் ஆர்க்கெல் மற்றும் டி போயர் போன்றவர்களால் உற்பத்தி செய்யப்பட்டது
பண்புகள்
Hf என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய இது வெள்ளி போன்ற பொலிவையும் கம்பியாக அடித்து நீட்டக்கூடிய தனமையையும் கொண்டுள்ளது .இதன் பண்பு அதில் வேற்றுப்பொருளாகக் கலந்துள்ள சிறிதளவு சிர்கோனியத்தால் பெருமளவு மாற்றம் பெறுகின்றது பிரித்தெடுக்கப்படும் எல்லாத் தனிமங்களிலும் மிகவும் கடினமானதாக இருப்பது சிர்கோனியமும் ஹாப்னியமும்தான் இதற்குக் காரணம் அவற்றின் வேதியல் பண்புகள் மிகவும் ஒன்றுபோல இருக்கின்றன என்பதுதான் சிர்கோனியத்தின் அடர்த்தி சற்றேறக்குறைய ஹாப்னியத்தில் பாதியாக உள்ளது
இது காற்றுவெளியில் தானாக எரிகின்றது 700 0 C. வெப்பநிலையில் ஹாப்னியம் ஹைட்ரஜனை விரைவாக உட்கவருகின்றது செறிவுற்ற காரங்களினால் ஹாப்னியம் பாதிக்கப்படுவதில்லை என்றாலும் உயர் வெப்பநிலையில் ஆக்சிஜன் நைட்ரஜன் ,கார்பன் போரான் கந்தகம் சிலிகான் ஹாலஜன் போன்றவற்றுடன் வினைபுரிகின்றது
பயன்கள்
ஹாப்னியம் வெப்ப
நியூட்ரான்களை உட்கிரகிக்கும் வாய்ப்பை குறிப்பிடும்படியாகப் பெற்றுள்ளது .இது
சிர்கோனியத்தை விட 500 மடங்கு அதிகமாக
உள்ளது. அதனால் இது அணுவுலைகளில் நியூட்ரான்களைக் கட்டுப்படுத்தும் உலோகத்தண்டாகப்
பயன்படுகின்றது .இது நீர்மங்களான அரிமானத்தை
எதிர்ப்பதாலும் பட்டறைப் பயன்பாட்டிற்கு இணக்கமாக இருப்பதாலும் பிற பயன்தரு
பொருட்களைக் காட்டிலும் இது
அனுகூலமிக்கதாக இருக்கின்றது .அணுவாற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இது பயன்படுத்தப் படுகின்றது. இன்றைக்கு அணுவாற்றலால்
இயங்கும் எவூர்திகளையும் விண்கலங் களையும் பயன்படுத்தத்
தொடங்கியிருக்கிறார்கள் . இது நீண்ட தொலைவு நீண்ட கால விண்வெளிப் பயணங்களைச்
சாத்தியப்படுத்தலாம்.
இரும்பு
டைட்டானியம் நையோபியம் டாண்டலம் போன்ற பல உலோகங்களுடன் கேர்ந்து ஹாப்னியம் கலப்பு
உலோகங்களை வழங்கியிருக்கின்றது . ஹாப்னியம் கார்பைடு , ஹாப்னியம் நைட்ரைடு உயர்வெப்பநிலையை 33100C வரை தாக்குப்பிடிக் கின்றன .வளிமம் நிரப்பப்பட்ட,மற்றும் மின்னிழை விளக்குகளில் ஆக்சிஜன் , நைட்ரஜனை வெளியேற்ற ஹாப்னியம்
பயன்படுகின்றது .ஹாப்னியப் பொடி வானவேடிக்கைக்கான
துணைப்பொருளாகக் கொள்ளப்படுகின்றது பல்ம மயமாக்க முறையில் ஹாப்னியம் ஒரு
வினையூக்கியாகச் செயல்படுகின்றது நுண்மின்னணுவியல் துறையில் ஹாப்னியம் ஆக்ஸைடு ஒரு மின்கடத்தாப்பொருளாகப்
பயன்படுத்தப்படுகின்றது
No comments:
Post a Comment