Friday, June 16, 2023

Emaatraathe

 மக்களிடம் திட்டத் செலவு என்று சொல்லி வரிக்கு மேல் வரி வாங்கி அரசியல்வாதிகள் தங்களுடைய  சுயநலன்களுக்காக அதிகம் செலவழித்துவிட்டு திட்டத்ததை முழுமையாக முடிக்காமல் விட்டுவிடுகிறார்கள் வரிகள் மக்கள் நலனுக்காகவே செலவழிக்கப்படுவதில்லை .வளர்ச்சித் திட்டங்களில் செல்வழிக்கப்படுவதில்லை. ஒரு ரூபாய் செலவழித்தால் 2ரூபாய் லாபம் கிடைக்குமாறு திட்டங்கள் இருக்கவேண்டும். எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமாறு இருக்கவேண்டும். கல்வியினையும் மனித வளத்தையும் மேம்படுத்தவேண்டும் .தாங்கள் செய்யும் குற்றங்கள் தவறுகள் தெரிந்து விடக்கூடாது என்று அவ்வப்போது மக்களுக்கு சலுகைகள் என்றும் இலவசங்கள் என்றும் மூளை சலவை செய்து விடுகின்றார்கள் .இலவசங்களால் மக்கள் உழைப்பை மறந்து மேலும் சோம்பேறியாகி விடுகின்றார்கள் .தன் தேவையைத் தானே நிவர்த்தி செய்து கொள்ளமுடியாமல் தேவைக்குத் தவரான தொழிலில் ஈடுபடுகின்றார்கள். மக்கள் மனதில் வள்ளல் போல இடம்பெற்று தேர்தலின் போது ஓட்டு வாங்க மக்கள் வரிப்பணத்தை இலவசம் இன்று மக்களுக்கு வழங்குகின்றார்கள். இதை மக்களுக்கான நீதிமன்றம் தடுக்க முன்வரவேண்டும்

அரசு வேலைகள், அரசு ஒப்பந்தங்கள்  போன்றவற்றை பணம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுக்கின்றார்கள் .சரியான தகுதி இல்லாததால் பணிகள் சிறப்பாக நடைபெறுவதில்லை என்பதோடு தவறாகவும் நடைபெறுகின்றது. முன்கூட்டியே பணத்தைக் கொடுத்தவர்கள் அதை அப்பணியின் மூலம் பெறுவதற்காக முயற்சி செய்யும் போது தவறுகள் செய்யப்படுகின்றன. தவறுகளைத் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் முன்கூட்டியே பணம் பெற்றுவிட்டதால் கண்காணிப்பதில்லை..செயல் வடிவம் பெறாத  வாய்மொழி மூலம்  மட்டுமே மக்களுக்கு போலியான நிவாரணம் கிடைக்கின்றது . தகுதியான பணியாளர்களை நியமிக்க பணி நியமனங்களை ஒழுங்குபடுத்த சட்டவடிவில் நம்பிக்கையளிக்கக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்த நீதிபதிகள் முன்வரவேண்டும்  .

அமைச்சர் தகுதியில்லாதவராக இருக்கும் போது அவர்க்கு உதவி செய்ய அளவுக்கு மீறிய IAS  அதிகாரிகளை நியமித்துக் கொள்கின்றார்கள் . அவர்களால் ஓர் கடிதத்தை சரியாக எழுதுவதற்குக் கூட அதிகாரிகள் உதவி தேவைப்படுகின்றது ..அரசியல் வாதிகள் குற்றங்கள் செய்து விட்டு அதற்குப் பாதுகாப்பிற்க்காக  அரசாங்க அமைப்பையே பயன்படுத்திக் கொள்கின்றார்கள். தகுதியில்லாதவர்களால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகின்றது. மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகின்றது.. ஒரு அமைச்சருக்கு அதிகபட்சம் எவ்வளவு உதவியாளரை வைத்துக் கொள்ளலாம் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும்   

Saturday, June 10, 2023

emaatraathe

 இந்திய அரசியல்வாதிகள்  தங்களுடைய பதவிக்கு காலத்தில் பெரும்பொருள் சம்பாதிக்கிறார்கள். சலுகைகள் மூலம் செலவுகளை வேறு தவிர்த்துக்கொள்கின்றார்கள். மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட அவர்கள் அவர்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள் . அவர்கள் அவர்களுக்காக கோடி கோடியாகச் சம்பாதிக்கும் போது நாட்டுக்காக நாட்டின் பொருளாதாரத்தை ஏன் மேம்படுத்தக்கூடாது ?  செல்வந்தர்களாகி வரும் அரசையல்வாதிகள் ஏழைகளால்  ஏழ்மைநாடாகி வரும் நாடு பொது நலம் என்ற போர்வையில் புதைந்திருக்கும் சுயநலத்தையே வெளிக்காட்டுகிறது 

emaatraathe emaaraathe

 

 சரியான தலைவர்களைத் தேர்தெடுக்கவில்லை என்று பொதுமக்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு. தேர்ந்தெடுக்கப்பட்டவர்  நேர்மையாகச்  செயல்பட வில்லை என்பது அரசியல்வாதிகளின்  மீது மக்கள் கூறும்  குற்றச்சாட்டு . சட்டவியல் படி நுணுகி ஆராய்ந்தால் மக்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தவறானதாகும்  என்பது தெரியவரும். போட்டியாளர்களின்  தகுதியை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து   ஏற்றுக்கொண்ட பின்னரே அவர்கள் வேட்பாளர்களகா அறிவிக்கப்படுகின்றார்கள். அவர் ஒரு தவறான வேட்பாளர் என்றால் தேர்தல் ஆணையம் எங்கோ தவறு செய்கின்றது என்று அர்த்தமாகிவிடும். முதலில் தேர்தல் களத்தில்  நேர்மையான முழுதும் தகுதியான வேட்பாளர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் .அதற்காக விண்ணப்பம் பெற்று 10 நல்ல வேட்பாளர்களுள் ஒரு சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே ஒழிய 10 நேர்மையற்ற தீயவர்களுள் ஓரளவு  நல்ல தீயவன் என்று ஒருவனைத் தேர்ந்தெடுக்கக்கூடாது இவன் ஆளக்கூடாது என்று மறுக்கும் உரிமை மக்கள் ஆட்சியில்  சம உரிமை கொண்ட பொதுமக்கள் எவருக்கும் இல்லை. ஆனால் அதைத்தடுக்கும் கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கின்றது பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகளை தேர்தல் ஆணையம் வரையறுக்க வேண்டும். சிறிதும் கல்வித் தகுதியில்லாதவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கின்றார்கள் .குற்றப்பின்னணி உள்ளவர்களைத் தகுதிநீக்கம் செய்யும் சட்ட வரையறையை  ஏற்படுத்தவேண்டும் . தேர்தல் ஆணையத்தின் பணி  தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிப்பதோடு முடிவடைந்து விடுவதில்லை. தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் சரியாகச் செயல்படுகின்றார்கள் என்பதையும் கண்காணித்து  தேவைப்பட்டால் தகுந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

குற்றப்பின்னணி உடைய ஒரு வேட்பாளர் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுகிறார் என்றால் அவருடைய குற்றப் பின்னணியை மறைக்கும் அரசாங்கத்தின் தவறா? இல்லை மக்களுக்குத் தெரிந்த அவருடைய குற்றப்பின்னணி தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல்  விண்ணப்பத்தையும்  ஆராயாமல்  தேர்வு செய்து களத்தில் நிற்கச்  செய்த  தேர்தல் ஆணையத்தின் தவறா? இல்லை  10 குற்றவாளிகளுள் ஒரு குற்றவாளியைத் தேர்வு செய்துவிட்ட மக்கள் தவறா ? 

Friday, June 9, 2023

emaatraathe emaarathe

 40-50 ஆண்டுகள் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனங்கவர்ந்தவர்களுக்கு  என்ன ஆளுமைத் திறன் இருக்கின்றது என்று  நாம் நம்மை ஆளும் துகுதியை கண்ணைமூடிக்கொண்டு அவர்களுக்கு வாரி வழங்குகின்றோம். நம்முடைய  தவறான மனப்பான்மை சமுதாயத்திற்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது தெரியுமா ? இப்பொழுது அரசியலுக்கு வருபவர்கள் திரைப்படத் துறையில் குறைந்தது 10 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்கவேண்டும் என்ற வழக்கம் நிலைப்படுத்தப் பட்டிருக்கின்றது . சாதி ,மத வேற்றுமையின்றி சமுதாயத் தொண்டாற்றி பெரும்பான்மை மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களே மக்களின் தலைவராக வரமுடியும் என்ற நிலை மாறி சாதி ,மத, மொழி  வேற்றுமையின்றி பெரும்பான்மையினரை ரசிகர்களாகப் பெற்றுவிட்டாலே போதும்  என்ற நிலை உருவாகியுள்ளது  .

நடிப்பவர்களிடம் ஆளுமைத்திறன் சிறிதும் இருப்பதில்லைஅவர்கள் எப்படி நடிக்கவேண்டும் எப்படி பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதெல்லாம்  அதற்குரிய சிறப்பு வல்லுனர்களே .இவர்களுடைய  அந்தரங்க வாழ்க்கையை அணுகிப்பார்த்தால் அவ்வளவு  அசிங்கங்களும் உள்ளடங்கியிருக்கும் .வரம்பு மீறிய காதல் தொடர்புகள், மதுப் பழக்கம்,   வருமான வரி ஏய்ப்பு  போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். திரைப்படங்களில் தான் இவர்கள் நல்லவர்கள் , நிஜ வாழ்க்கையில் இவர்களுடைய உண்மைத் தோற்றம் முற்றிலும் வேறுபட்டது

        மக்களிடம் உரிமையுள்ள அறிவாற்றல் இல்லாமை, உழைப்பின்றிக் கிடைக்கும் இலவசங்கள் மீது கொண்டுள்ள அளவற்ற ஆசை ,தவறான  வழிகளில் சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவர்களின் செல்வாக்கின் ஆதரவுடன் குறுகிய காலத்தில் பொருள் குவித்துவிடவேண்டும் என்ற உணர்வு -போன்ற பலவீனங்களே இவர்களுக்கு நிரந்தர ஆதரவாக இருக்கின்றது. நீண்ட காலம் நடிப்புத் துறையில் கோலோச்சிவிட்டு  குறுகிய காலத்தில்  சிறந்த அரசியல்வாதியாக வரவே முடியாது. சாணக்கியனாக  நடிக்கலாம் ஆனால் சாணக்கியனாக முடியாது. தலைமைக்கு நடிப்புத் திறன் மட்டுமே போதுமானது என்றால் இவர்களுடைய  நடிப்புத் திறன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு  அடிப்படியான  என்ன முன்னேற்றத்தை வழங்கிவிடும். பெரும்பாலானோர் எதிர்காலத்தில் மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி பேசுவதில்லை. கடத்தகாலத்தில் நடந்த முன்னேற்றமின்மையைக் குறிப்பிட்டு குற்றம்சாட்டுகின்றார்கள். அரசியலுக்கு வருபவர்களுக்கு அரசியல் அறிவு மிகவும் அவசியம். அப்பொழுதுதான் கோடிக்கணக்கான மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். மனித நேயமும் சேவை மனப்பான்மையும்  கூடுதலாக இருக்கவேண்டும் . அப்பொழுதுதான் வேற்றுமையின்றி எல்லோருக்கும் உதவி செய்யமுடியும் .பொருளாதாரம் பற்றிய தெளிவு இருக்கவேண்டும் .அப்பொழுதுதான் நாட்டின் வளர்ச்சியை  மக்களைக் வரிவிதிப்பால் கொடுமைப்படுத்தாமல் மேம்படுத்த முடியும். சட்டம்  தெரிந்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் அதிகாரம் கண்ணை மறைப்பதில்லை 

Thursday, June 8, 2023

Emaatraathe Emaarathe

 

 பொதுவாக இந்திய அரசாங்கத்தால் , அது மைய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறன.உண்மைகள் மறைக்கப்படுவதாலும் ,திரித்துக் கூறப்படுவ தாலும் ,நிறுவனத்தின் உண்மையான பொருளாதார நிலையை மக்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு இலை. 

         அரசு நிறுவனங்கள் ஏன் நஷ்டத்தில் இயங்குகின்றன? முதலில் நிறுவனத்திற் காக ஒதுக்கப்படும் நிதியினை அந்த நிறுவனத்தில் வளர்ச்சிக்காகவே செலவு செய்வதில்லை.. செலவு செய்ததாகக் கணக்குக்கு காட்டிவிட்டு  அவர்களே எடுத்துக் கொண்டு விடுகின்றார்கள். உண்மையில் அதற்கான வாய்ப்பைப் அதிகரித்துக் கொள்ள திட்டச் செலவை பல மடங்கு  உயர்திக்கொள்கின்றார்கள் .மிக எளிதாகவும் ,மிக அதிகமாகவும் அரசின் நிதியை  தனதாக்கிக் கொள்ளும் வழிமுறையில் இது முதலிடத்தில் உள்ளது . ஆரசியல்வாதிகளின் திருட்டுத் தனத்தால் அந்த நிறுவனத் தின் உயர்அதிகாரிகளும்,அவர்களுக்குக்கீழ் பணிபுரியும் ஊழியர்களும்  அவர்களுக் குரிய பங்களிப்பைச் செய்கின்றார்கள். ஒரு  ஒழுக்கமற்ற தவறான முதலாளியிடம்  நேர்மையான தொழிலாளி இருக்கவே முடியாது.. தொடக்கத்திலேயே தனக்கான பெரும் பங்கை எடுத்துக்கொண்டுவிடுவதால் , அதிகாரிகளும் ,தொழிலாளர்களும் நிறுவனத்திற்கு ஏற்படுத்தும் இழப்பை  இவர்களால்  கண்காணிக்கவோ அல்லது தடுக்கவோ முடிவதில்லை. நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டம் என்பது தொழில்நுட்ப வளர்ச்சியாகவோ  , தர மேம்பாடாகவோ  . உற்பத்திப் பெருக்கமாகவோ  ,ஏற்றுமதித் எண்ணமாகவோ இல்லாதிருப்பது இந்தியாவின் தூரதிருஷ்டம் அதனால் எவ்வளவு முதலீடு செய்தாலும் ,நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடிவதில்லை . தொடர்ந்து நிறுவனத்தை நடத்துவதற்கும் ,நஷ்டத்தை ஈடுசெய்வதற்கும்  உற்பத்திப் பொருளின் தரத்தை  குறைத்தும் ,விலையை உயர்த்தியும் ,அதுவும் இயலாதபோது பொதுநிறுவனம் என்ற பெயரில் மக்கள் மீது வரி விதிப்பை அதிகரிக்கின்றார்கள் .

      இரண்டாவதாக அந்த நிறுவனத்தின்  மேம்பாடு என்று சொல்லிவிட்டு   தேவையற்ற ஆலோசனைக்  கூட்டங்களை  அதிகப் பொருட்செலவுடன் நடத்துவதும் ,கௌரவப் பதவியுடன் அதிகச் சமபளம்  பெற்றுக்கொள்வதும்  நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றது. மூன்றாவதாக அந்த நிறுவனத்துக்காக பணியாளர்களை நியமிக்கும் போது  லஞ்சம் வாங்கிக்கொண்டு  பணிநியமனம் வழங்குகின்றார்கள்.. இதனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான தகுதிமிக்க வல்லுநர்கள் கிடைப்பதில்லை.. கட்டுமானச் செலவில் ஒரு பகுதி முன்கூட்டியே எடுத்துக்கொள்ளப்படுவதால் ,கட்டுமானம் பலவீனமாக அமைந்துவிடுகின்றது .இது எதிர்பாராத விதமாக சிதைந்து அழிந்து பேரழிவை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. முன்னேற்றத்தில் பின்னேற்றம் என்பது எந்த முன்னேற்றத்தையும் ஒன்றுமில்லாததாக்கிவிடும் .