சரியான தலைவர்களைத் தேர்தெடுக்கவில்லை என்று பொதுமக்கள்
மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு. தேர்ந்தெடுக்கப்பட்டவர் நேர்மையாகச்
செயல்பட வில்லை என்பது அரசியல்வாதிகளின்
மீது மக்கள் கூறும் குற்றச்சாட்டு
. சட்டவியல் படி நுணுகி ஆராய்ந்தால் மக்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தவறானதாகும் என்பது தெரியவரும். போட்டியாளர்களின் தகுதியை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து ஏற்றுக்கொண்ட பின்னரே அவர்கள் வேட்பாளர்களகா அறிவிக்கப்படுகின்றார்கள்.
அவர் ஒரு தவறான வேட்பாளர் என்றால் தேர்தல் ஆணையம் எங்கோ தவறு செய்கின்றது என்று அர்த்தமாகிவிடும்.
முதலில் தேர்தல் களத்தில் நேர்மையான முழுதும்
தகுதியான வேட்பாளர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் .அதற்காக விண்ணப்பம் பெற்று 10 நல்ல
வேட்பாளர்களுள் ஒரு சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே ஒழிய 10 நேர்மையற்ற
தீயவர்களுள் ஓரளவு நல்ல தீயவன் என்று ஒருவனைத்
தேர்ந்தெடுக்கக்கூடாது இவன் ஆளக்கூடாது என்று மறுக்கும் உரிமை மக்கள் ஆட்சியில் சம உரிமை கொண்ட பொதுமக்கள் எவருக்கும் இல்லை. ஆனால்
அதைத்தடுக்கும் கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கின்றது பொதுத் தேர்தலில் போட்டியிடும்
ஒரு வேட்பாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகளை தேர்தல் ஆணையம் வரையறுக்க வேண்டும். சிறிதும்
கல்வித் தகுதியில்லாதவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கின்றார்கள் .குற்றப்பின்னணி உள்ளவர்களைத்
தகுதிநீக்கம் செய்யும் சட்ட வரையறையை ஏற்படுத்தவேண்டும்
. தேர்தல் ஆணையத்தின் பணி தேர்தலை நடத்தி முடிவுகளை
அறிவிப்பதோடு முடிவடைந்து விடுவதில்லை. தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் சரியாகச் செயல்படுகின்றார்கள்
என்பதையும் கண்காணித்து தேவைப்பட்டால் தகுந்த
நடவடிக்கையும் எடுக்கவேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
குற்றப்பின்னணி உடைய ஒரு வேட்பாளர் மீண்டும்
மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுகிறார் என்றால் அவருடைய குற்றப் பின்னணியை மறைக்கும் அரசாங்கத்தின்
தவறா? இல்லை மக்களுக்குத் தெரிந்த அவருடைய குற்றப்பின்னணி தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல் விண்ணப்பத்தையும் ஆராயாமல்
தேர்வு செய்து களத்தில் நிற்கச் செய்த தேர்தல் ஆணையத்தின் தவறா? இல்லை 10 குற்றவாளிகளுள் ஒரு குற்றவாளியைத் தேர்வு செய்துவிட்ட
மக்கள் தவறா ?
No comments:
Post a Comment