Friday, June 16, 2023

Emaatraathe

 மக்களிடம் திட்டத் செலவு என்று சொல்லி வரிக்கு மேல் வரி வாங்கி அரசியல்வாதிகள் தங்களுடைய  சுயநலன்களுக்காக அதிகம் செலவழித்துவிட்டு திட்டத்ததை முழுமையாக முடிக்காமல் விட்டுவிடுகிறார்கள் வரிகள் மக்கள் நலனுக்காகவே செலவழிக்கப்படுவதில்லை .வளர்ச்சித் திட்டங்களில் செல்வழிக்கப்படுவதில்லை. ஒரு ரூபாய் செலவழித்தால் 2ரூபாய் லாபம் கிடைக்குமாறு திட்டங்கள் இருக்கவேண்டும். எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமாறு இருக்கவேண்டும். கல்வியினையும் மனித வளத்தையும் மேம்படுத்தவேண்டும் .தாங்கள் செய்யும் குற்றங்கள் தவறுகள் தெரிந்து விடக்கூடாது என்று அவ்வப்போது மக்களுக்கு சலுகைகள் என்றும் இலவசங்கள் என்றும் மூளை சலவை செய்து விடுகின்றார்கள் .இலவசங்களால் மக்கள் உழைப்பை மறந்து மேலும் சோம்பேறியாகி விடுகின்றார்கள் .தன் தேவையைத் தானே நிவர்த்தி செய்து கொள்ளமுடியாமல் தேவைக்குத் தவரான தொழிலில் ஈடுபடுகின்றார்கள். மக்கள் மனதில் வள்ளல் போல இடம்பெற்று தேர்தலின் போது ஓட்டு வாங்க மக்கள் வரிப்பணத்தை இலவசம் இன்று மக்களுக்கு வழங்குகின்றார்கள். இதை மக்களுக்கான நீதிமன்றம் தடுக்க முன்வரவேண்டும்

அரசு வேலைகள், அரசு ஒப்பந்தங்கள்  போன்றவற்றை பணம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுக்கின்றார்கள் .சரியான தகுதி இல்லாததால் பணிகள் சிறப்பாக நடைபெறுவதில்லை என்பதோடு தவறாகவும் நடைபெறுகின்றது. முன்கூட்டியே பணத்தைக் கொடுத்தவர்கள் அதை அப்பணியின் மூலம் பெறுவதற்காக முயற்சி செய்யும் போது தவறுகள் செய்யப்படுகின்றன. தவறுகளைத் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் முன்கூட்டியே பணம் பெற்றுவிட்டதால் கண்காணிப்பதில்லை..செயல் வடிவம் பெறாத  வாய்மொழி மூலம்  மட்டுமே மக்களுக்கு போலியான நிவாரணம் கிடைக்கின்றது . தகுதியான பணியாளர்களை நியமிக்க பணி நியமனங்களை ஒழுங்குபடுத்த சட்டவடிவில் நம்பிக்கையளிக்கக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்த நீதிபதிகள் முன்வரவேண்டும்  .

அமைச்சர் தகுதியில்லாதவராக இருக்கும் போது அவர்க்கு உதவி செய்ய அளவுக்கு மீறிய IAS  அதிகாரிகளை நியமித்துக் கொள்கின்றார்கள் . அவர்களால் ஓர் கடிதத்தை சரியாக எழுதுவதற்குக் கூட அதிகாரிகள் உதவி தேவைப்படுகின்றது ..அரசியல் வாதிகள் குற்றங்கள் செய்து விட்டு அதற்குப் பாதுகாப்பிற்க்காக  அரசாங்க அமைப்பையே பயன்படுத்திக் கொள்கின்றார்கள். தகுதியில்லாதவர்களால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகின்றது. மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகின்றது.. ஒரு அமைச்சருக்கு அதிகபட்சம் எவ்வளவு உதவியாளரை வைத்துக் கொள்ளலாம் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும்   

No comments:

Post a Comment