மரணமில்லாப் பெரு வாழ்வு
உலகில் பிறந்த ஒவ்வொருவரும்
ஒருநாள்
இறந்துபோகவேண்டும்
என்பது
விதி.
என்றாலும்
ஒருவர்
அவருடைய
வாழ்நாளை அதிகரித்துக்
கொள்ள முடியும். மரணம் என்பது
ஒருங்கிணைந்து
செயல்படும்
உடல்
உறுப்புக்களின்
பாதுகாப்பிற்குக்
காரணமாகும்
தலைமை
உறுப்புக்களில்
ஏற்படும் பழுதைச் சரி செய்ய முடியாமல் போவதால் ஏற்படுவதாகும் உடல் உறுப்புக்களின் இயக்கம்
என்பது அவற்றுள் அடங்கியுள்ள உயிரியல் மூலக்கூறுகளின் செயல்பாடுகளாகும் அடிப்படையில்
உயிரியல் மூலக்கூறுகள் எல்லாம் வேதியியல் மூலக்கூறுகளே உயிரியல் மூலக்கூறு அடிப்படையான அணுக் களால் உருவாக்கப் படும்போது தவறான அணு
அல்லது பகுதி மூலக்கூறு இணை யுமாறு வாய்ப்பை ஏற்படுத்துவதால் ஏற்படுகின்றது. தவறான
உணவுப் பழக்கம் ,போதைப்பழக்கம் ,போன்றவற்றால் உயிரியல் மூலக்கூறுகளைத் தொடர்ந்து இம்சிப்பதால் அவற்றின்
செயல் திறன் குன்றிப்போவதுடன் திரிவுற்று மாற்றுச் செயபாடுகளினால் உயிருக்கு ஊறு விவளைவிக்கின்றன.
இதை நாம் ஓர் அனுவின் கிளர்ச்சி மற்றும் அயனித்த நிலைகளினால் உணர்ந்து கொள்ள முடியும்
. அணுவிற்கு ஆற்றலூட்டும் போது அதிலுள்ள எலெக்ட்ரான்
உட்சுற்றுப் பாதையிலிருந்து வெளிச்சுற்றுப்பாதைகளில் ஒன்றுக் குத் தாவுகிறது. ஆனால்
இந்த கிளர்ச்சியாற்றலை ஒளியாக உமிழ்ந்து மீண்டும் தன் இயல்பு நிலையைத் தானாவே மீட்டுப்
பெறுகின்றது கூடுதல் ஆற்றலூட்டும் போது எலெக்ட்ரான் தான் இணைந்துள்ள
அணுவைவிட்டு விலகிச் சென்றுவிடலாம். அயனிக்கள் அணுக்களை விட
வீரியமாகச் செயல்பட்டு மின் நடுநிலை பெறவேண்டி
புறவெளியிலிருந்து ஒரு எதிர் மின்னூட்டத்தைத் தேடுகின்றது. தனித்த எலெக்ட்ரான் கிடைத்தால்
அது தன் இயல்பு நிலையைத் திரும்ப அடைகின்றது. தனித்த எலெக்ட்ரான் கிடைக்காமல் போகும்போது
எதிர் மின்னூட்டம் கொண்ட பகுதி மூலக்கூறு ஒன்றுடன்
இணைந்துவிடுகின்றது. இச்சேர்க்கை அந்த மூலக்கூற்றின் இயல்பான செயல் திறனை பெரிதும்
மட்டுப்படுத்தி விடுகின்றது. உயிரியல் மூலக்கூறு திரிவுறாமல் தன்னைத்
தானே புதிப்பித்துக்கொள்ளுமானால் உடலுறுப்புக்கள் பழுதடைவதில்லை .இதற்கு ஆற்றல் செறிவு
மிக்க ஒளி பயன்தருவதில்லை. கட்புலனுணர் ஒளி உடலை ஊடுருவுச் சென்று உயிரியல் மூலக்கூறுகளை
அடைவதில்லை. இதற்கு மிதமான வெப்பக் குளியலே அதிகமாகப் பயன்தரத்தக்கதாக இருக்கின்றது..உடலுக்குச்
சிலிர்ப்பூட்டும் ஒலி வடிவிலான இசையும், எழுச்சியுரையும்
கூட இதற்கு பயன் தருகின்றன . வாழ்நாளை அதிகரித்துக்கொள்ள ஒரு சிறந்த வழி ஒவ்வொரு நாளும்
வெப்பக்குளியல் எடுத்துக்கொள்வதாகும். இதற்கு இளம் வெயிலில் சூரியக்
குளியல் நற்பயன் அளிக்கின்றது
No comments:
Post a Comment