நீண்ட நாட்களுக்குப் பிறகு நான்
“மஞ்சுமோல் பாய்ஸ்” என்ற படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விறுவிறுப்பாக
இருந்தது. கிளைமாக்ஸ் சூப்பர் . எல்லோராலும் கைவிடப்பட்ட பின்பு கடுமையான கூட்டு முயற்சியால் ஒரு குழு விபத்தில் சிக்கிய தங்கள் நண்பனின் உயிரைக்
காப்பாற்றிய போது அனைவருமே உணர்ச்சி பொங்க சத்தமிட்டனர் . ரியாலிட்டி விறுவிறுப்புக்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது அது போல
ஒரு படத்தை ஆங்கிலத்தில் கூடுதல் விறுவிறுப்புடன் தயாரிக்கமுடியும் . அதற்கான கதை இதோ .இது விண்வெளிப்பயணம் மற்றும் பயணத்தின் போது ஏற்பட்ட
விபத்து தொடர்பானது .
ஒரு விண்வெளி ஆய்வு நிறுவனம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த
வித்தியாமான முயற்சியில் ஈடுபடுகின்றது. அந்த நிறுவனம் விண்வெளியில் இருக்கும் ஆளில்லாத
ஒரு கிரகத்திற்கு 20-30 நபரை அழைத்துச் செல்வதாகவும் அதற்கு இவ்வளவு கட்டணம் என்றும்
விளம்பரம் செய்கின்றது . 1000 பேர் விண்ணப்பிக்க , நேர்காணல் மூலம் தகுதியான 20 பேரைத்
தேர்ந்தெடுக்கின்றார்கள் .அந்த 20 பேருக்கு ,நீண்டகால விண்வெளிப்பயணத்திற்கு வேண்டிய
எடையற்ற நிலையில் செயல் புரிதல் , உணவு சாப்பிடுதல்
, நீர் குடித்தல், மற்றவர்களோடு தொடர்பு கொள்ளுதல் விண்கலத்தை விட்டு விண் வெளிக்கு வெளியேறுதல் , வெளியிலிருந்து
உள்ளுக்குள் வருதல் ,போன்ற பயிற்சிகளை அளிக்கின்றனர் . எல்லோருக்கும் பாதுகாப்பிற்கான
விண்வெளி உடை கொடுக்கப்பட்டு விண்வெளிப்பயணம்
குறிப்பிட்டபடி நடக்கிறது .குறிப்பிட்ட கிரகத்தை அடைந்து .விண்வெளியில் தெரியும் அதிசயங்களை
எல்லோரும் கண்டு ரசிக்கின்றனர் .பின்னர் கிரகத்திலிருந்து எல்லோரும் தாய்க்கலத்தை
அடைய ஒவ்வொருவரும் முயற்சி செய்யும் போது
,கடைசியாக முயன்றவர் செய்யும் தவறால் கிரகத்திலேயே
தங்கிவிடும் நிலை ஏற்படுகின்றது .எல்லோரும் தாய்க் கலத்தை எட்டியபின்பே ஒருவர் விடுபட்டுப்போனது
தெரிய வருகின்றது. அந்தப் பயணியைக் கடுமையான
முயற்சிக்குப் பின்னர் காப்பாற்றிவிடுகின்றனர் /அல்லது கடைசியாக வருபவர் தாய்க் கலத்தோடு
இணைய முயலும் போது தவறான உடலியக்கம் காரணமாக தாய்க்கலத்தை விட்டு மெதுவாக விலகிச் செல்கிறார்
.அவரை எல்லோரும் சேர்ந்து காப்பாற்றி பூமிக்கு அழைத்து க்கொண்டு வருகின்றனர். அப்படிக்காப்பற்றப்படுவதற்கு
சில வழிமுறைகள் உள்ளன.
No comments:
Post a Comment