Thursday, August 29, 2024

 இதை வாங்கினால் 20 %எக்ஸ்ட்ரா , ஒன்றுக்கொன்று இலவசம் , 1000 க்கு மேல் பொருள் வாங்கினால் நிச்சியப்பரிசு , கிப்ட் வவுச்சர் . குலுக்கல் முறையில் 100 பேருக்கு 1 கோடி பரிசு, 70000 மதிப்புள்ள பொருட்கள் 40000 ரூபாய் . நகைகளுக்கு சேதாரம் செய்கூலி இல்லை, தள்ளுபடி 10 %  

என்ன அரசாங்கம் என்ன நிர்வாகம் . யாரும் ஒரு பொருளை அதன் உணமையான விலைக்கு விற்கமாட்டர்களா ?

அகத்தடை

 

அகத்தடை

  சுயநல எண்ணத்தையும் , செயல்பாடுகளையும்  இந்த ஒழுக்கமின்மை வளர்த்துவிடுகின்றது . ஒழுக்கமின்மை தற்காலிகமான இலாபங்களை மட்டுமே தரும் .அது நிரந்தரமானதில்லை. ஒரு சமுதாயத்தில் ஒரு சிலர் மட்டுமே தீய செயல்களைச் செய்வார்களேயானால் அங்கு  ஒழுக்கத்தின் அழுத்தத்தால் அவர்கள்  தண்டிக் கப்படுவதற்கான வாய்ப்பு   அதிகமாக இருக்கும் . ஆனால் மறைவொழுக்கத்தால் பெரும்பாலானோர் தீயவர்களாக மாறினால் , சீரழியும் சமுதாயம் திருத்தப் படுவதற்கான வாய்ப்பே  இல்லாமல் போகும். இதன் பரிணாம வளர்ச்சி ஒட்டு மொத்த சமுதாயத்தின் அழிவிற்கு காரணமாக அமையும் .

சுயநலம் என்ற எண்ணத்தை ஒழுக்கமின்மைமை வளர்த்துவிடுகின்றது. இதனால் ஒழுக்கமற்ற ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தோடு சேர்ந்து  வாழ்ந்து வந்தாலும் .சமுதாயத்திற்கு இனமறிந்து கொள்ள முடியாத ஒரு எதிரியாகவே வாழ்கின்றார் .புற எதிரிகளை விட உள்ளெதிரிகளே மிகவும் ஆபத்தானவர்கள்.ஏனெனில் புற  எதிரியை இனமறிந்து கொள்வதைப்போல உள்ளெதிரிகளை  இனமறிந்து  தவிர்த்து முடிவதில்லை .சுயநலம் பொது நலச் சிந்தனைகளை வேரறுத்து விடுகின்றது.ஆனால் சமுதாயத்தோடு இணைந்து வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும்   பொதுநலச் சிந்தனைகள் என்பது சமுதாய இலக்கணம் என்பதால் சுயநலச் சிந்தனை களை துறந்து பொதுநலச் சிந்தனைகளை வெளிப் படுத்திக் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது . சுயநலச் செயல்பாடுகளை மறைத்துவிட்டு  மற்றவர் களுக்காக பொதுநலத்தை  பேச்சு வழக்கில் மட்டும் மேற்கொள்ளும் பழக்கம்  மக்களிடையே  பரவி வருகின்றது .

Wednesday, August 28, 2024

 ஒரு குட்டிக்கதை

ஒரு அறக்கட்டளை நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக  சிறந்த 5  ஆசிரியர்கள்  ,நேர்மையான 5 அரசு ஊழியர்கள்  மற்றும்   அரசியல் வாதிகள்  என  ஒவ்வொரு  ஆண்டும் 10 பேரைத் தேர்ந்தெடுத்து   பரிசளித்து  பாராட்டுவதை  வழக்க மாகக் கொண்டிருந்தது   . இதில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆசிரியர்கள்  மட்டுமே  பரிசு பெற்றுச் சென்றனர் . கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நேர்மையான அரசு ஊழியரோ அல்லது அரசியல்வாதியோ பாராட்டப்படவில்லை


Monday, August 19, 2024

கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் எல்லோருக்குமான எளிய நடைமுறைகள்

 கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்  எல்லோருக்குமான எளிய நடைமுறைகளபித்தலில் புதிய அணுகுமுறைகளை புகுத்துவது அவசியம்

அதை ஆசிரியர்கள் எப்படியெல்லாம் செய்யலாம் .

1. Over Head Projector and screen must be installed in each class room. If fund is limited, one or two  common OHP may be provided. OHP வாங்குவதற்கும் பின்னர் புதிய உத்திகளை நிறுவுவதற்குத் தேவையான கருவிகளை வாங்குவதற்கும்  தேவையான நிதியை த் திரட்டவேண்டும்

 

அரசிடம் கோரிக்கை வைத்து நிதி உதவி பெறலாம்.

பள்ளியில் படித்து உயர் பதவியில் செல்வாக்கோடு இருக்கும் பழைய மாணவர்களை வரவழைத்து கௌரவித்து நிதி உதவி பெறலாம்.

மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்தை சம்பளமாகவும் , பிற செலவுகளாகவும் செலவழித்து விடாமல் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கிவைத்துக் கொள்ளவேண்டும் .இதை விரிவாக்கம் மட்டுமின்றி புதிய சாதனங்கள் , பிலிம் புரொஜெக்டர், அறிவியல் ஆய்வுக்கூடங்களுக்குத் தேவையான சாதனங்கள் போன்றவற்றை வாங்கவேண்டும்

 

2.ஒவ்வொரு ஆசிரியர்க்கும் போதிய transperancy sheet கொடுக்க வேண்டும் . ஆசிரியர் வீட்டிலேயே transperancy  Sheet ல்  எழுதிக்கொண்டு வந்துவிடுவதால் Black board ல் எழுதவேண்டிய அவசியம் வருவதில்லை. நேரம் மிச்சமாகின்றது . அதனால்  பாடசம்பந்தமாக அதிக விவரங் களை  மாணவர்களுக்கு எடுத்துரைப்பதற்கு நேரம்  கிடைக்கின்றது

 

3. பாடத்தை நடத்தி முடித்த பின்பு மாணவர்கள் பாடம் சம்பந்தமாக ஐயம் தெளிவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். மாணவர்கள் ஐயம் கேட்பதை ஊக்குவிக்கவேண்டும்.

 

4. அறிவியல் கருத்துக்களையும் ,விதிகளையும் நினைவிற் கொள்ள எளிய வழிமுறைகளைக் கற்பிக்கலாம் .எடுத்துக்காட்டாக  எதுகை மோனையுடன் கூடிய சொல்லடைகள் , பழமொழி போன்ற அறிவியல் மொழிகள் ,கவிதை வடிவிலான அறிவியல் பாடங்கள்.

e.g., Thermodynamical relations

          cos θ, sinθ value

 

5. பொதுவாக medium of instruction எதுவோ அதில் தான் பாடம் நடத்தவேண்டும். சில விளக்கங்களை தமிழில் கொடுக்கலாம் . ஆனால் காலப்போக்கில் மாணவர்கள் அதையே விரும்புவார்கள் . இன்றைக்கு மாணவர்களிடம் ஆங்கிலப்புலமை குறைவாக இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு ஆங்கிலத்தில் பயிற்சி கொடுப்பதில்லை. அனைத்தையும் மனப்பாடம் செய்தே தேர்வு எழுதுகின்றார்கள் . அதனால் அவர்களுக்கு கல்வி உரிமையுள்ள ஒரு பொருளாக இருப்பதில்லை.

 

6. பள்ளி விட்ட பிறகு மாலை வேளையில் மாணவர்களின்  கல்வி தேடலுக்காக நூலகம் ஒன்றை  பள்ளியின் முகப்பில் அல்லது பள்ளிக்கு அருகில் பாதுகாப்பான கட்டிடங்களில் அமைத்து நூலக வசதிகளை வளப்படுத்திக் கொடுக்கலாம். அங்கு இன்டர்நெட் வசதி, zerox  எடுக்கும் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுக்கலாம். மாணவர்களை  நூலக உறுப்பினராகச் சேர்ந்து நூல்களைக் கடனாகக் கொடுத்து வாங்கலாம்  

 

7. இது விரிவடைந்து வரும் டிஜிட்டல் உலகம். கல்வி தொடர்பான வலைத் தளங்கள் மிகுந்து வருகின்றன. இவற்றை ஆராய்ந்து பாடம் தொடர்பான லிங்க்களை மாணவர்களுக்குத் முன்தெரிவிக்கலாம் .இதற்கு மாணவர்களிடம் smart phone இருக்கவேண்டும்

e.g.Thavakkai Academy of Creative Thinking and Skill Development

      skill share

      MIT opencourseware etc.,

 

8. நீண்ட விடுமுறையில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் இணைந்து ப்ராஜெக்ட் செய்யுமாறு வழிப்படுத்தலாம். E.g.,

சூரிய ஆற்றல் பயன்பாடு

உடல்நலத்திற்கு உகந்த உணவுகள் , தவிர்க்க வேண்டிய உணவுகள்

கடல் நீரை குடிநீராக்கும் வழிமுறைகள்

பெட்ரோலுக்கான மாற்று எரிபொருள்

பிளாஸ்டிக்கை மறுசுழற்சியால் பயன் படுத்துதல்

9. inspiration தரக்கூடிய கட்டுரைப் போட்டிகள் வெவ்வேறு தலைப்புக் களில் நடத்தலாம் .

நான் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகின்றேன் ?

எனக்குப்பிடித்த அறிவியல் அறிஞர்

சென்ற ஆண்டு நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானிகள்

10. மாணவர்களிடையே பட்டிமன்றம் நடத்தலாம் . e.g.,

அணுவாற்றல் அழிவா ஆக்கமா ?

(தொலைக்காட்சி , அலைபேசி , கணனி) டிஜிட்டல் உலகம் - நன்மையே அதிகம்  தீமையே அதிகம்.

மாசுக்களால் ஏற்படும் தீமைகள் - கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

சினிமாக்களினால் ஏற்படும் தீமைகளும் நன்மைகளும்

11. மாணவர்களிடையே பேசும் திறமையை வளர்க்க பேச்சுப்போட்டி நடத்தலாம் .

மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வழிமுறைகள்

மக்களின் ஒற்றுமையை வளர்க்கும் வழிமுறைகள்

தாய்மொழி கல்வியின் சிறப்புக்கள்

எல்லோருக்குமான வேலைவாய்ப்பு

நாட்டுக்கான சீர்திருத்தங்கள்.

 

12. கல்வியோடு ஒழுக்கமும் முக்கியம்.எவ்வளவு புதிய அணுகுமுறை களைக் கொண்டு கற்பித்தாலும் ஒழுக்கம் துறந்த  கல்வி கல்வி யாகாது .எனவே மாணவர்களிடையே ஒழுக்கத்தின் அவசியத்தையும் அவ்வப்போது வலியுறுத்திக்கூறவேண்டும்.

 

 Dr.M.Meyyappan, Thavakkai Academy of Creative Thinking and Skill Development