Thursday, August 29, 2024

அகத்தடை

 

அகத்தடை

  சுயநல எண்ணத்தையும் , செயல்பாடுகளையும்  இந்த ஒழுக்கமின்மை வளர்த்துவிடுகின்றது . ஒழுக்கமின்மை தற்காலிகமான இலாபங்களை மட்டுமே தரும் .அது நிரந்தரமானதில்லை. ஒரு சமுதாயத்தில் ஒரு சிலர் மட்டுமே தீய செயல்களைச் செய்வார்களேயானால் அங்கு  ஒழுக்கத்தின் அழுத்தத்தால் அவர்கள்  தண்டிக் கப்படுவதற்கான வாய்ப்பு   அதிகமாக இருக்கும் . ஆனால் மறைவொழுக்கத்தால் பெரும்பாலானோர் தீயவர்களாக மாறினால் , சீரழியும் சமுதாயம் திருத்தப் படுவதற்கான வாய்ப்பே  இல்லாமல் போகும். இதன் பரிணாம வளர்ச்சி ஒட்டு மொத்த சமுதாயத்தின் அழிவிற்கு காரணமாக அமையும் .

சுயநலம் என்ற எண்ணத்தை ஒழுக்கமின்மைமை வளர்த்துவிடுகின்றது. இதனால் ஒழுக்கமற்ற ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தோடு சேர்ந்து  வாழ்ந்து வந்தாலும் .சமுதாயத்திற்கு இனமறிந்து கொள்ள முடியாத ஒரு எதிரியாகவே வாழ்கின்றார் .புற எதிரிகளை விட உள்ளெதிரிகளே மிகவும் ஆபத்தானவர்கள்.ஏனெனில் புற  எதிரியை இனமறிந்து கொள்வதைப்போல உள்ளெதிரிகளை  இனமறிந்து  தவிர்த்து முடிவதில்லை .சுயநலம் பொது நலச் சிந்தனைகளை வேரறுத்து விடுகின்றது.ஆனால் சமுதாயத்தோடு இணைந்து வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும்   பொதுநலச் சிந்தனைகள் என்பது சமுதாய இலக்கணம் என்பதால் சுயநலச் சிந்தனை களை துறந்து பொதுநலச் சிந்தனைகளை வெளிப் படுத்திக் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது . சுயநலச் செயல்பாடுகளை மறைத்துவிட்டு  மற்றவர் களுக்காக பொதுநலத்தை  பேச்சு வழக்கில் மட்டும் மேற்கொள்ளும் பழக்கம்  மக்களிடையே  பரவி வருகின்றது .

No comments:

Post a Comment