அரசியல் என்பது மக்களுக்கான ஒரு பொது நலச்சேவை. அரசியலுக்கு வந்துவிட்டால் பாகுபாடின்றி ஒருபாற்கோடாமையைப் பின்பற்றவேண்டும் . மக்கள் எல்லோரும் ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. ஒரு கட்சியின் தலைவர் வேண்டியவர்களுக்கு மட்டுமே நன்மை செய்து வேண்டாதவர்களைப் புறக்கணிக்கக்கூடாது. ஆட்சியாளருக்கு எதிரி நாட்டுத் தலைவனே எதிரி ,தான் ஆளும் நாட்டுமக்களில் யாரும் எதிரியில்லை என்பதை உணர்ந் துக்கொள்ளவேண்டும்.வேண்டாதவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருப்பது அரசியல் இலக்கணம். . அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதி இன்றளவும் இந்தியாவில் என் கண்களுக்குத் தென்படவில்லை .
No comments:
Post a Comment